• English
    • Login / Register

    2024 Maruti Swift வரும் மே மாதம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

    மாருதி ஸ்விப்ட் க்காக ஏப்ரல் 15, 2024 04:29 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 106 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் வடிவமைப்பில் சில மாற்றங்கள், புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் புதிய வசதிகளுடன் வெளியாகும்.

    2024 Maruti Swift Launch In First Half Of May

    • இந்த காரின் முன் மற்றும் பின்பக்கம் புதிய வடிவில் இருக்கும்.

    • கேபினில் புதிய டேஷ்போர்டு மற்றும் லைட்டர் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.

    • விலை ரூ.6 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜப்பானில் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் வெளியிடப்பட்டது மேலும் அதைத் தொடர்ந்து சில சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஹேட்ச்பேக் பதிப்பு வெளிப்புறத்தில் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேபின், மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன் மற்றும் புதிய வசதிகளை பெற்றுள்ளது. புதிய ஜென் இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் அறிமுகமாகும் மாதம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மே 2024 முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்னர் மாருதி ஸ்விஃப்ட் காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் 

    புதிய ஸ்விஃப்ட் காரில் உள்ள புதிய வடிவமைப்பு?

    UK-spec Suzuki Swift

    2024 ஸ்விஃப்ட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பை பார்க்கும் போது இப்போதுள்ள கார் போலவே உள்ளது. வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றமில்லை, ஆனால் நவீன டச் -க்காக வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கிரில், ஸ்லீக்கர் பம்ப்பர்கள், புதிய வடிவிலான 15-இன்ச் அலாய் வீல்கள், புதுப்பிக்கப்பட்ட டெயில் லைட்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியர் ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இதில் இருக்கலாம்.

    UK-spec Suzuki Swift rear

    மேலும் புதிய ஸ்விஃப்ட்டில் பின்புற டோர்க்கான ஹேண்டில்கள் பழமையான முறையில் கதவுகளில் கொடுக்கப்பட்டிருந்தன. அதேசமயம் அவை புதிய காரில் சி-பில்லர்களில் பொருத்தப்பட்டுள்ளன.

    UK-spec Suzuki Swift cabin

    உட்புறத்திலும் சில  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய மாருதி ஸ்விஃப்ட் பலேனோ மற்றும் ஃப்ரான்க்ஸ் காரில் உள்ளதை போலவே புதிய டேஷ்போர்டு வடிவமைப்புடன் லைட்டர் கேபின் தீமை பெறுகிறது.

     வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    2024 Maruti Swift Touchscreen

    இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் அதன் சர்வதேச-ஸ்பெக் பதிப்பில் இருக்கும் பெரும்பாலான வசதிகளைப் பெறும். அவற்றில் பெரும்பாலானவை மாருதி பலேனோவில் கொடுக்கப்படலாம். இது 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பின்புற ஏசி வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறலாம்.

    மேலும் படிக்க: Maruti Fronx காரிலிருந்து 2024 Maruti Swift பெறலாம் என எதிர்பார்க்கப்படும் 5 வசதிகள்

    பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளுடன் வரலாம். மேலும் இது பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களையும் பெறலாம்.

    பவர்டிரெய்ன்

    2024 Maruti Swift

    புதிய தலைமுறை ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. இது 82 PS மற்றும் 112 Nm வரை அவுட்புட்டை கொடுக்கின்றது. இந்த இன்ஜின் சர்வதேச சந்தையில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் பதிப்பு மற்றும் AWD ஆப்ஷனையும் பெறுகிறது. இவை இரண்டும் இந்தியாவில் கிடைக்காது.

    மேலும் படிக்க: Toyota Taisor மற்றும் Maruti Fronx: விலை ஒப்பீடு

    இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் உள்ளது. இது 90 PS மற்றும் 113 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கின்றது. மேலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    2024 Maruti Swift

    2024 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் இது தொடர்ந்து போட்டியிடும். மேலும் ரெனால்ட் ட்ரைபர்  -க்கு மாற்றாகவும் இருக்கும். , ஸ்விஃப்ட் அடிப்படையிலான சப்-4எம் செடான் ஆன அப்டேட்டட் மாருதி டிசையர் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஸ்விப்ட்

    1 கருத்தை
    1
    A
    ashraf
    Apr 17, 2024, 8:05:17 PM

    What is the mileage

    Read More...
      பதில்
      Write a Reply

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience