Toyota Taisor மற்றும் Maruti Fronx: விலை ஒப்பீடு
published on ஏப்ரல் 04, 2024 03:49 pm by shreyash for டொயோட்டா டெய்சர்
- 106 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா டெய்சரின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்கள் ரூ. 25000 வரை கூடுதலாக இருக்கின்றன. அதே சமயம் டாப்-ஸ்பெக் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் மாருதி ஃபிரான்க்ஸின் விலைக்கு சமமாக இருக்கும்.
இந்தியாவில் டொயோட்டாவின் சப்-4m காரான டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெய்சர், மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். மாருதி மற்றும் டொயோட்டா இடையே ஆறாவதாக பகிர்ந்து கொள்ளப்படும் மாடல் இது. டெய்சர் வெளிப்புறத்தில் சில மாற்றங்களுடன் வருகின்றது. ஆனால் இன்ட்டீரியர் மற்றும் பவர்டிரெயின்கள் ஃபிரான்க்ஸ் காரை போலவே இருக்கின்றன. சப்காம்பாக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவி -யான டெய்சரின் வேரியன்ட்களை, ஃபிரான்க்ஸ் உடன் விலை அடிப்படையில் உடன் ஒப்பீடு செய்துள்ளோம்.
பெட்ரோல் மேனுவல்
டொயோட்டா டெய்சர் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
E - ரூ. 7.74 லட்சம் |
சிக்மா - ரூ. 7.52 லட்சம் |
S - ரூ. 8.60 லட்சம் |
டெல்டா - ரூ. 8.38 லட்சம் |
S பிளஸ் - ரூ. 9 லட்சம் |
டெல்டா பிளஸ் - ரூ. 8.78 லட்சம் |
டெல்டா பிளஸ் டர்போ - ரூ. 9.73 லட்சம் |
|
G டர்போ - ரூ. 10.56 லட்சம் |
ஜெட்டா டர்போ - ரூ. 10.56 லட்சம் |
V டர்போ - ரூ. 11.48 லட்சம் |
ஆல்ஃபா டர்போ - ரூ. 11.48 லட்சம் |
-
டொயோட்டா அர்பன் குரூஸர் டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகிய இரண்டு கார்களுமே 1.2-லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆப்ஷனை பெறுகின்றன. இவை இரண்டும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
-
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட டெய்சரின் ஒவ்வொரு வேரியன்ட்டும் அதே இன்ஜினுடன் மாருதி ஃபிரான்க்ஸின் ஒப்பிடக்கூடிய வேரியன்ட்களை விட ரூ.22000 விலை அதிகம்.
-
டெய்சர் அதன் முதல் இரண்டு வேரியன்ட்களான G மற்றும் V உடன் டர்போ-பெட்ரோல் ஆப்ஷனை வழங்குகிறது. அதே சமயம் ஃபிரான்க்ஸ் ஆனது அதே இன்ஜினை மிட்-ஸ்பெக் டெல்டா பிளஸ் டிரிமில் இருந்து வழங்குகிறது. எனவே ஃபிரான்க்ஸ் காரில் டர்போ ரூ.83000 குறைவாக செலுத்தினால் கிடைக்கின்றது.
-
டெய்சர் மற்றும் ஃபிரான்க்ஸ் இரண்டின் முதல் இரண்டு வேரியன்ட்களும் சமமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா க்ராஸ்ஓவர் எஸ்யூவி டாப்-ஸ்பெக் V வேரியன்ட்டில் டூயல்-டோன் ஆப்ஷனுக்கு கூடுதலாக ரூ.16000 செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் பார்க்க: மீண்டும் சந்தைக்கு திரும்பிய Skoda Superb கார், விலை ரூ.54 லட்சமாக நிர்ணயம்
பெட்ரோல் CNG
டொயோட்டா டெய்சர் |
மாருதி ஃப்ரான்க்ஸ் |
E - ரூ 8.72 லட்சம் |
சிக்மா - ரூ 8.47 லட்சம் |
டெல்டா - ரூ 9.33 லட்சம் |
-
டெய்சர் மற்றும் ஃபிரான்க்ஸ் CNG இரண்டும் 1.2-லிட்டர் பெட்ரோல்-CNG பவர்டிரெய்னுடன் (77.5 PS / 98.5 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
டொயோட்டா CNG ஆப்ஷனுடன் டெய்சர் ன் பேஸ்-ஸ்பெக் E வேரியன்ட்டை மட்டுமே வழங்குகிறது; இதற்கிடையில் ஃபிரான்க்ஸ் உடன் CNG பவர்டிரெய்னுடன் கூடுதல் மிட்-ஸ்பெக் டெல்டா வேரியன்ட் கிடைக்கிறது.
-
ஃபிரான்க்ஸ் CNG -யின் ஆரம்ப விலையானது டெய்சர் CNG -யின் ஆரம்ப விலையை விட 25000 ரூபாய் குறைவாக உள்ளது.
-
CNG -யில் இயங்கும் சப்-4 மீட்டர் க்ராஸ்ஓவர் எஸ்யூவியில் நீங்கள் குறிப்பாக ஆர்வமாக இருந்தால் ஃபிரான்க்ஸ் காரின் டெல்டா CNG வேரியன்ட்டில் உங்களுக்கு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVMகள் (வெளிப்புற பின்புற பார்வை கண்ணாடிகள்) கிடைக்கும். ஆனால் ஃபிரான்க்ஸ் டெல்டா CNG டெய்சர் E CNG-ஐ விட ரூ.61000 அதிகம்.
பெட்ரோல் ஆட்டோமெட்டிக்
டொயோட்டா டெய்சர் |
மாருதி ஃப்ரான்க்ஸ் |
S AMT - ரூ 9.13 லட்சம் |
டெல்டா AMT - ரூ 8.88 லட்சம் |
S பிளஸ் AMT - ரூ 9.53 லட்சம் |
டெல்டா பிளஸ் AMT - ரூ 9.28 லட்சம் |
G டர்போ AT - ரூ 11.96 லட்சம் |
ஜெட்டா டர்போ AT - ரூ 11.96 லட்சம் |
V டர்போ AT - ரூ 12.88 லட்சம் |
ஆல்பா டர்போ AT - ரூ 12.88 லட்சம் |
-
மாருதி ஃபிரான்க்ஸை போலவே டெய்சரின் 1.2-லிட்டர் வேரியன்ட்களும் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன; இதற்கிடையில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்கள் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் கிடைக்கின்றன.
-
டொயோட்டா டெய்சரின் ஒவ்வொரு 1.2-லிட்டர் AMT வேரியன்ட்டின் விலையும் ஃபிரான்க்ஸின் சமமான வேரியன்ட்களை விட ரூ.25000 அதிகம். இதற்கிடையில் டெய்சரின் முதல் இரண்டு டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கான விலை ஃப்ரான்க்ஸ் டர்போ ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களை போலவே உள்ளது.
வசதிகளில் உள்ள வேறுபாடு
டொயோட்டா அர்பன் குரூஸர் டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவை வசதிகளின் அடிப்படையில் ஒரே மாதிரியாகவே உள்ளது. இரண்டு சப்காம்பாக்ட் கார்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களிலும் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா ஹில் ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன. அவற்றின் ஒப்பிடக்கூடிய வேரியன்ட்களுக்கான வசதிகள் ஒரே போலவே உள்ளன.
முக்கியமான விவரங்கள்
இந்த ஒற்றுமைகள் இருந்தபோதிலும் டெய்சர் -ன் 1.2-லிட்டர் பெட்ரோல் வேரியன்ட்கள் அதே இன்ஜின் கொண்ட ஃபிரான்க்ஸ் வேரியன்ட்களை விட விலை ரூ.25000 வரை கூடுதலாக உள்ளன. மறுபுறம் ஃபிரான்க்ஸ் அதன் டொயோட்டா டெய்சரை விட மிகவும் குறைவான விலையில் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதிக வசதிகள் நிறைந்த சிஎன்ஜி டிரிமையும் வழங்குகிறது.
இருப்பினும் டொயோட்டா சற்று கூடுதலாக விலை நிர்ணயம் செய்துள்ளதற்கான காரணம் வெளிப்புற ஸ்டைலிங்கில் உள்ள மாற்றங்கள் மட்டுமல்ல நிலையான உத்தரவாதக் கவரேஜ் ஒரு காரணம் ஆகும். ஃபிரான்க்ஸ் 2-ஆண்டு/40000km உத்தரவாதத்தை ஸ்டாண்டர்டாக கிடைக்கும். ஆனால் டொயோட்டா டெய்சரில் 3-ஆண்டுகள்/1 லட்சம் கி.மீ மற்றும் 5 ஆண்டுகளுக்கு இலவசமாக RSA (ரோடு சைடு அசிஸ்ட்) ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் படிக்க: டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் AMT
0 out of 0 found this helpful