தென் கொரியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Hyundai Alcazar ஃபேஸ்லிஃப்ட், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

published on ஏப்ரல் 03, 2024 05:34 pm by rohit for ஹூண்டாய் அழகேசர் 2024

 • 118 Views
 • ஒரு கருத்தை எழுதுக

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் புதிய கிரெட்டாவில் இருந்து வேறுபடுத்தும் வகையில் புதிய வடிவிலான முன்பகுதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

IMG_256

 • எக்ஸ்டிரியர் அப்டேட்களில் புதிய கிரில் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் செங்குத்தான LED டெயில்லைட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 • இது முந்தைய மாடல்கள் போலவே  6- மற்றும் 7-சீட் லேஅவுட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • கேபின் அப்டேட்களில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களுக்கான இன்டெகிரேட்டட் செட்டப்பை உள்ளடக்கியிருக்கலாம்.

 • புதிய கிரெட்டாவின் டூயல்-ஜோன் ஏசி மற்றும் ADAS தொகுப்பையும் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

 • தற்போதைய அல்கஸார் மாடலில் உள்ள அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை இது தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் விலை ரூ. 17 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து கொரிய கார் தயாரிப்பாளர் இப்போது புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் 3-வரிசை எஸ்யூவி -யை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக இப்போது அதன் சொந்த நாடான தென் கொரியாவில் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பை ஷாட்களில் தெரிந்த விவரங்கள்

டெஸ்ட் மியூல் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்த போதிலும் புதிய அல்காஸரில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை போன்ற முன் அமைப்பைக் கொண்டிருக்காது என்பது தெளிவாகிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில்லுக்கு மேலே LED DRL ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டுள்ளது ஸ்பிளிட்-ஹெட்லைட் அமைப்பு போன்ற பொதுவான ஹூண்டாய் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டிருக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸாரின் பக்கவாட்டை இன்னும் படமெடுக்கப்படவில்லை என்றாலும் இது புதிய அலாய் வீல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யின் பின்பக்கம் செங்குத்தாக அமைக்கப்பட்ட LED டெயில்லைட்களை புதிய கிரெட்டாவில் இருந்து வேறுபடுத்தி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இது தற்போதைய மாடலுடன் ஒத்துப்போகும் டூயல்-டிப் எக்ஸ்ஹாஸ்டை தக்க வைத்துக் கொள்ளும்.

எதிர்பார்க்கப்படும் கேபின் மற்றும் புதிய வசதிகள்

2024 Hyundai Creta cabin

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அல்கஸாரின் இன்டீரியர் படங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் புதிய கிரெட்டாவின் கேபின் ஏதாவது செல்லக்கூடியதாக இருந்தால் அது புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு அமைப்பையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது 6 மற்றும் 7 சீட் உடன் தொடர்ந்து வழங்கும். ஹூண்டாய் 2024 அல்காஸரை இரண்டு 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று கருவி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்காக) மற்றும் புதிய கிரெட்டாவிலிருந்து டூயல்-ஜோன் ஏசி ஆகியவற்றையும் வழங்கக்கூடும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை 3-வரிசை ஹூண்டாய் SUV-யில் 6 ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) 360 டிகிரி கேமரா மற்றும் கிரெட்டாவில் இருந்து அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பில் ஆட்டானமஸ் கோலிஷன் அவாய்டன்ஸ்  மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட செயல்பாடுகள் இருக்கலாம்.

மேலும் பார்க்க: Hyundai Stargazer இந்தியாவில் Maruti Ertiga- விற்கு போட்டியாக இருக்கலாம் - அதன் சிறப்பம்சங்களை வீடியோவில் பார்க்கவும்

ஒரே மாதிரியான பவர்டிரெயின்கள்

ஹூண்டாய் புதிய அல்காஸரை முந்தைய மாடலை போலவே ஒரே மாதிரியான இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது:

 

விவரங்கள்

 

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

 

1.5 லிட்டர் டீசல்

 

பவர்

 

160 PS

 

116 PS

 

டார்க்

 

253 Nm

 

250 Nm

 

டிரான்ஸ்மிஷன்

 

6-ஸ்பீடு MT 7-ஸ்பீடு DCT*

 

 

6-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AT

*DCT - டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

இதன் விலை என்னவாக இருக்கும்?

2024 Hyundai Alcazar rear spied

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸாரின் ஆரம்ப விலை ரூ.17 லட்சம். குறிப்புக்கு தற்போதைய மாடலின் விலை ரூ.16.77 லட்சம் முதல் ரூ.21.28 லட்சம் வரை உள்ளது. புதுப்பிக்கப்பட்ட 3-வரிசை SUV மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி மற்றும் MG ஹெக்டர் பிளஸ் போன்ற போட்டியாளர்களுடன் அதன் போட்டியை தொடரும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
பட ஆதாரம்

மேலும் படிக்க: ஹூண்டாய் அல்கஸார் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் அழகேசர் 2024

Read Full News

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
 • போர்டு இண்டோவர்
  போர்டு இண்டோவர்
  Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
 • டாடா curvv
  டாடா curvv
  Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2024
 • மஹிந்திரா போலிரோ 2024
  மஹிந்திரா போலிரோ 2024
  Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
 • மஹிந்திரா thar 5-door
  மஹிந்திரா thar 5-door
  Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
 • டாடா curvv ev
  டாடா curvv ev
  Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2024
×
We need your சிட்டி to customize your experience