• English
    • Login / Register

    புதிய இன்ஜினை பெறப்போகும் 2024 Maruti Suzuki Swift, விவரங்கள் வெளியாகின !

    மாருதி ஸ்விப்ட் க்காக நவ 07, 2023 05:48 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 48 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய ஸ்விஃப்ட், அதன்  சொந்த நாட்டில், புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது

    2024 Suzuki Swift

    • 2023 அக்டோபர் மாதத்தில் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸூகி புதிய ஸ்விஃப்ட்டை தயாரிப்பிற்கு நெருங்கிய கான்செப்டாக அறிமுகம் செய்தது.
    • இப்போது, ​​கார் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் சொந்த சந்தையில் புதுப்பிக்கப்பட்ட ஹேட்ச்பேக்கை வெளிப்படுத்தியுள்ளது.
    • இது சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது.
    • தற்போதைய இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் 90PS 1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட்டை பெறுகிறது.

    • புதிய ஸ்விஃப்ட் 9 இச்ன் டச் ஸ்கிரீன், அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    • ரூபாய் 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்பவிலையில் 2024  தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    நான்காவது தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 2023 அக்டோபர் மாதத்தில் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் உற்பத்திக்கு நெருக்கமான கான்செப்டாக கவரை நீக்கியது. இது சமீபத்தில் நமது ஊரில் முதல் முறையாக ஸ்பை டெஸ்டிங் செய்யப்பட்டது. இப்போது, ​​ஆட்டோ ஈவென்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஜப்பான்-ஸ்பெக் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட இன்ஜின்-கியர்பாக்ஸ் விருப்பங்களை கார் தயாரிப்பு நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

    நமக்குத் தெரிந்த பவர் ட்ரெய்னில் ஒரு புத்தம்புதிய ஆப்ஷன்

    புதிய ஸ்விஃப்ட் இன்னும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ஹூட்டின் கீழ் பெறும் என்றாலும், பழைய 4-சிலிண்டர் K-சீரிஸ் இன்ஜினுடன் ஒப்பிடும்போது சமீபத்திய பவர்டிரெய்ன் செட்டப் 3-சிலிண்டர் Z-சீரிஸ் யூனிட் ஆகும். சுஸூகியின் கூற்றுப்படி, நான்கிலிருந்து மூன்று சிலிண்டர்களுக்கு மாறும்போது குறைந்த வேகத்தில் அதிக டார்க்கை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. அதன் சரியான அவுட்புட் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று அதன் மூலம் தெரிகிறது. ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட், இலகுவாகவும், பவர்டிரெயினின் மைலேஜை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட CVT ஆட்டோமேட்டிக் உடன் பொருத்தப்பட்டிருக்கும்.

    India-spec Maruti Swift petrol engine
    இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் இன்ஜின்

    குறிப்புக்கு, தற்போதைய இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (90PS/113Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய இன்ஜினுக்கான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் மாருதி புதிய இந்தியா-பவுண்ட் ஸ்விஃப்டை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    ஜப்பானில், நான்காவது தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் செட்டப்புடன் வழங்கப்படும், இவை இரண்டும் இந்தியா-ஸ்பெக் ஹேட்ச்பேக்கில் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

    மற்ற அப்டேட்களை பற்றிய ஒரு அறிமுகம்

    நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்டின் இந்தியா காட்சியானது, ஹனிகோம்ப் பேட்டர்ன், அனைத்து-LED லைட்டிங் மற்றும் புதிய அலாய் வீல்களுடன் அதன் வட்டமான கிரில்லில் ஒரு நேர்த்தியான தோற்றத்தை நமக்கு அளித்துள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுடன் ஒத்துப்போகின்றன. உட்புறத்தில், இது ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட் போன்ற அதே கருப்பு மற்றும் பழுப்பு நிற டேஷ்போர்டு அமைப்பைப் பெற வாய்ப்புள்ளது. இது பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாராவில் உள்ள அதே ஸ்டீயரிங், கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    2024 Suzuki Swift concept cabin

    அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ஸ்விஃப்ட் 9-இன்ச் டச்ஸ்கிரீன் செட்டப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360 டிகிரி கேமரா அமைப்பு மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS)இன் சூட் ஆகியவை அடங்கும். இந்தியா-ஸ்பெக் ஹேட்ச்பேக், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அடாப்டிவ் ஹை பீம் சிஸ்டம் மற்றும் லேன் அசிஸ்ட்கள் போன்ற ADAS அம்சங்களைப் பெற வாய்ப்பில்லை, ஆனால் இங்கு பார்க்கப்பட்ட சோதனைக் காரில் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் காணப்பட்டது .

    மேலும் படிக்க2022ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் தினமும் 460 இந்தியர்கள் பலி! பெரும்பாலான உயிர்கள் எங்கே இழக்கப்பட்டன என்பதைக் கண்டறியவும்

    அறிமுகம் மற்றும் விலை விவரங்கள்

    2024 Suzuki Swift concept rear
    புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில், ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் நமது சாலைகளில் இறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அதன் நேரடி போட்டியாளர் ஆகும், அதே சமயம் ரெனால்ட் ட்ரைபர், சப்-4m  கிராஸ்ஓவர் MPV -க்கு மாற்றாக ஒரே விலையில் அது இருக்கும்.

    மேலும் தெரிந்து கொள்ள: மாருதி ஸ்விஃப்ட் AMT

    was this article helpful ?

    Write your Comment on Maruti ஸ்விப்ட்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience