• English
  • Login / Register

2024 Maruti Suzuki Swift: இந்திய-ஸ்பெக் மாடல் மற்றும் ஆஸ்திரேலிய-ஸ்பெக் மாடல்களிடையே வேறுபடும் 5 விஷயங்கள்

மாருதி ஸ்விப்ட் க்காக ஜூன் 18, 2024 07:09 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 40 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் சிறப்பான வசதிகளோடு, 1.2-லிட்டர் 12V ஹைப்ரிட் பவர்டிரெய்னை கொண்டுள்ளது. இந்திய மாடலில் அவை இல்லை.

Australian-spec Suzuki Swift Hybrid vs Indian-spec Maruti Swift

நான்காவது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2024, மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. பல்வேறு புதிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் சர்வதேச பதிப்புகளில் காணப்படும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் இதில் இல்லை. புதிய ஸ்விஃப்ட் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இந்தியா-ஸ்பெக் மாடலின் பவர்டிரெய்ன் அமைப்பில் அது கொடுக்கப்படவில்லை. ஒரே கார்களாக இருந்தாலும் கூட இந்த மாடல்கள் பவர்டிரெய்னை தவிர பல வழிகளில் வேறுபடுகின்றன. அவற்றின் பட்டியல் இதோ:

ஒரு பிரத்யேக நிறம் மற்றும் பெரிய அலாய் வீல்கள்

2024 Swift in black colour

இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்

ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஹைப்ரிட்

சிஸ்லிங் ரெட் 

லஸ்டர் புளூ

நாவல் ஆரஞ்ச்

மாக்மா கிரே

ஸ்பெளென்டிட் வொயிட்

பேர்ல் ஆர்க்டிக் வொயிட்

சிஸ்லிங் ரெட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப் 

பேர்ல் ஆர்க்டிக் வொயிட் வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

லஸ்டர் புளூ வித் மிட்நைட் பிளாக் ரூஃப்

சூப்பர் பிளாக் பேர்ல் (எக்ஸ்க்ளூஸிவ்)

பிரீமியம் சில்வர் மெட்டாலிக்

பியூர் வொயிட் பேர்ல்

மினரல் கிரே மெட்டாலிக்

பர்னிங் ரெட் மெட்டாலிக்

ஃபிளேம் ஆரஞ்ச்

பிளாக் ரூஃப் வித் எல்லைப்புற நீல பேர்ல்

ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஹைப்ரிட்டில் கிடைக்கும் ஆல் பிளாக் பெயின்ட் கலர் ஸ்கீம் இந்தியா-ஸ்பெக் மாடலில் கொடுக்கப்படவில்லை. மறுபுறம் இந்திய மாடல் அதிக டூயல்-டோன் கலர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் ஸ்விஃப்ட் ஹைப்ரிட் 16-இன்ச் அலாய் வீல்கள் மேல் வேரியன்ட் லெவல்களில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதே சமயம் லோவர் ஸ்பெக் வேரியன்ட்களில் 15-இன்ச் சக்கரங்கள் உள்ளன. இருப்பினும் இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் கூட 15-இன்ச் அலாய் வீல்களை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலிய மாடலில் முன்பக்க விளக்குகளுக்கு பதிலாக பின்புற ஃபாக் லைட்ஸ் உள்ளன. மறுபுறம் இந்திய-ஸ்பெக் மாடலில் முன்பக்கத்தில் ஃபாக் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் பின்புறம் இல்லை. 

கூடுதல் வசதிகள்

Dual-tone interiors of Australian-spec Suzuki Swift

இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 9-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல புதிய வசதிகளை வழங்குகிறது. இருப்பினும் ஆஸ்திரேலிய சுஸூகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் ஒரு படி மேலே சென்று ஹீட்டட் முன் இருக்கைகள் மற்றும் எக்ஸ்ட்டீரியர் ரியர் வியூ மிரர் (ORVMs) ஆகியவற்றை உள்ளடக்கியது. உள்ளே ஆஸ்திரேலிய மாடல் டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் இன்ட்டீரியரை கொண்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் சில்வர் ஆக்ஸன்ட்களுடன் ஆல் பிளாக் இன்ட்டீரியரை கொண்டுள்ளது. இருக்கைகள் இரண்டு ஸ்விஃப்ட்களிலும் வெவ்வேறு வடிவங்களுடன் கூடிய ஃபேப்ரிக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு ADAS தொகுப்பு

ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட சுஸூகி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் ரேடார் அடிப்படையிலான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதில் கொமிஷன் மிட்டிகேஷன், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்டில் ADAS தொகுப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

Suzuki Swift ADAS

பவர்டிரெய்னில் உள்ள வேறுபாடு

விவரங்கள்

இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட்

ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஹைப்ரிட்

இன்ஜின்

1.2-லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1.2-லிட்டர் 3-சிலிண்டர் 12V மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல்

பவர்

82 PS

83 PS

டார்க்

112 Nm

112 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு மேனுவல் / 5-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் (AMT)

பேடில் ஷிஃப்டர்களுடன் 5-ஸ்பீடு மேனுவல்/5-ஸ்பீடு CVT ஆட்டோமெட்டிக்

டிரைவ்டிரெய்ன்

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD)

ஆஸ்திரேலியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஒரு மைல்டு ஹைப்ரிட் இன்ஜினை கொண்டுள்ளது (12V அமைப்புடன்) இது இந்தியா-ஸ்பெக் மாடலை போன்ற பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் இந்திய மாடல் AMT கியர்பாக்ஸை பெறுகிறது. அதேசமயம் ஆஸ்திரேலிய மாடல் ப்ராப்பர் ஆட்டோமேட்டிக் CVT கியர்பாக்ஸை பெறுகிறது. ஆஸ்திரேலிய மாடலில் பேடில் ஷிஃப்டர்களுடன் 5 ஸ்பீடு CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டாப்-ஸ்பெக் மாடல் கூட பேடில் ஷிஃப்டர்களை பெறுகிறது. இருப்பினும் இந்திய மாடலில் பேடில் ஷிஃப்டர்கள் கொடுக்கப்படவில்லை. 

விலையில் உள்ள பெரிய மாற்றம்

2024 Australian-spec Swift gets rear fog lights

மாடல்

விலை

ஆஸ்திரேலிய டாலர்களில்

இந்திய ரூபாயில்

ஆஸ்திரேலிய-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஹைப்ரிட்

AUD 24,490 முதல் AUD 30,135 வரை

ரூ.13.51 லட்சம் முதல் ரூ.16.62 லட்சம்

இந்திய-ஸ்பெக் ஸ்விஃப்ட்

கிடைக்கவில்லை

ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.60 லட்சம்

விலை, எக்ஸ்-ஷோரூம்க்கானது; கன்வெர்ட்டட் விலையில் வரிகள் சேர்க்கப்படவில்லை

தற்போது ஆஸ்திரேலியாவில் விற்பனையில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் காரை விட இந்தியாவில் கிடைப்பது விலை குறைவாக உள்ளது. இந்தியாவில் இது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உடன் போட்டியிடுகிறது.மேலும் ரெனால்ட் ட்ரைபர் கிராஸ்ஓவர் MPV மற்றும் மைக்ரோ எஸ்யூவிகளான போன்றவை ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் ஆகியவற்றுக்கு ஒரு ஹேட்ச்பேக் மாற்றாக இருக்கும்.

ஆஸ்திரேலிய-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் அதிக விலை (இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது) கூடுதல் வசதிகளுக்கு ஏற்றபடி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT

was this article helpful ?

Write your Comment on Maruti ஸ்விப்ட்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience