2024 Citroen C3 Aircross: அப்டேட்டட் வேரியன்ட் அறிமுகம்
published on செப் 30, 2024 08:36 pm by dipan for சிட்ரோய்ன் aircross
- 78 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட் உடன் கார் ஆனது ஒரு புதிய பெயர், புதிய வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது.
-
2024 சிட்ரோன் ஏர்கிராஸ் இப்போது LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஆட்டோ ஏசி மற்றும் ஆறு ஏர்பேக்குகளைப் பெறுகிறது.
-
டாஷ்போர்டு அதே பிளாக் மற்றும் கிரே கலர் தீமில் வருகிறது. ஆனால் இப்போது சில சாஃப்ட்-டச் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் போன்ற வசதிகள் அப்படியே உள்ளன.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் TPMS ஆகியவை உள்ளன.
-
C3 ஹேட்ச்பேக்குடன் வழங்கப்படும் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் (82 PS/115 Nm), இப்போது ஏர்கிராஸ் உடன் வழங்கப்படுகிறது.
அப்டேட்டட் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற புதிய அம்சங்களுடன் பசால்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது காட்சிப்படுத்தப்பட்டது. சிட்ரோன் நிறுவனம் தற்போது ஏர்கிராஸ் எஸ்யூவி -க்கு புதிய பெயரை வைத்துள்ளது. ரூ.8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) முதல் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஏர்கிராஸ் இன் விரிவான விலைப் பட்டியல் இங்கே:
வேரியன்ட்கள் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
யூ |
– |
ரூ.8.49 லட்சம் |
புதிய வேரியன்ட் |
பிளஸ் |
– |
ரூ.9.99 லட்சம் |
புதிய வேரியன்ட் |
தோனி எடிஷன் |
ரூ.11.82 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
யூ டர்போ எம்டி |
ரூ.9.99 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
பிளஸ் டர்போ எம்டி |
ரூ.11.61 லட்சம் |
ரூ.11.95 லட்சம் |
+ரூ 34,000 |
பிளஸ் டர்போ எம்டி (5+2 இருக்கைகள்) |
ரூ.11.96 லட்சம் |
ரூ.12.30 லட்சம் |
+ரூ 34,000 |
மேக்ஸ் டர்போ எம்டி |
ரூ.12.26 லட்சம் |
ரூ.12.70 லட்சம் |
+ரூ 44,000 |
மேக்ஸ் டர்போ எம்டி (5+2 இருக்கைகள்) |
ரூ.12.61 லட்சம் |
ரூ.13.05 லட்சம் |
+ரூ 44,000 |
பிளஸ் டர்போ ஏடி |
ரூ.12.91 லட்சம் |
ரூ.13.25 லட்சம் |
+ரூ 34,000 |
மேக்ஸ் டர்போ ஏடி |
ரூ.13.56 லட்சம் |
ரூ.14 லட்சம் |
+ரூ 44,000 |
மேக்ஸ் டர்போ AT (5+2 இருக்கைகள்) |
ரூ.13.91 லட்சம் |
ரூ.14.35 லட்சம் |
+ரூ 44,000 |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் ( பான்-இந்தியா)
புதுப்பிக்கப்பட்ட ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் உள்ளவற்றை இங்கே பார்ப்போம்:
புதிதாக என்ன இருக்கிறது ?
புதிய பெயரைத் தவிர இப்போது புதிய LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் உள்ளன. முந்தைய ரிஃப்ளெகடர் அடிப்படையிலான ஹாலோஜன் யூனிட்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாடலில் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் முன்பு இருந்த அதே வெளிப்புற வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.
டாஷ்போர்டு அமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது, ஆனால் அது இப்போது சில சாஃப்ட்-டச் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்டேட் மூலமாக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVM கள் (எக்ஸ்ட்டீரியர் ரியர்வியூ மிரஸ்) ஆகியவற்றைக் இப்போது புதிதாக உள்ளா. பின்புற இருக்கைகளுக்கான பவர் விண்டோ சுவிட்சுகள் இப்போது சென்டர் கன்சோலில் இருந்து கதவு ஆர்ம்ரெஸ்ட்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
C3 ஹேட்ச்பேக்குடன் வழங்கப்படும் புதிய 1.2-லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இப்போது ஏர்கிராஸ் எஸ்யூவியுடன் வழங்கப்படுகிறது, அதன் விவரங்கள் கீழே உள்ளன.
இந்த அப்டேட்கள் வரவேற்கத்தக்கவை மற்றும் C3 காரை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினாலும் கூட புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க: Citroen C3 ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அறிமுகம்
மற்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
சிட்ரோன் ஏர்கிராஸ் எஸ்யூவி ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் Apple CarPlay உடன் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல், டே/நைட் IRVM (ரியர்வியூ மிரர் உள்ளே) மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை போன்ற முக்கிய வசதிகள் அப்படியே தொடர்கின்றன.
பாதுகாப்புக்காக இது இப்போது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றுடன் வருகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
பவர்டிரெய்ன் விருப்பங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
82 PS |
110 PS |
டார்க் |
115 Nm |
205 Nm வரை* |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு மேனுவல் |
6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் |
*ஏர்கிராஸின் டர்போ வேரியன்ட்கள் 6-ஸ்பீடு மேனுவல் மூலம் 190 Nm மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 205 Nm உடன் வரலாம்.
போட்டியாளர்கள்
சிட்ரோன் ஏர்கிராஸ் ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. மேலும் டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகியவற்றுக்கு இது ஒரு ஸ்டைலான மற்றும் எஸ்யூவி-கூபே மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: C3 ஏர்கிராஸ் ஆன் ரோடு விலை