Citroen C3 ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அறிமுகம்
published on செப் 30, 2024 08:19 pm by dipan for சிட்ரோய்ன் சி3
- 74 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் C3 சமீபத்தில் ஒரு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 7-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ ஏசி போன்ற புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
-
சிட்ரோன் சி3, டாப்-ஸ்பெக் ஷைன் டர்போ வேரியன்ட்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
-
ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.10.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கும்.
-
இது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் வாஷருடன் கூடிய பின்புற வைப்பர் ஆகியவற்றுடன் வருகின்றன.
-
7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவையும் இத்ஜில் உள்ளன.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (TPMS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
சிட்ரோன் சி3 -யின் ஃபுல்லி லோடட் ‘ஷைன்’ வேரியன்ட்டில் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டது. மேலும் இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கிறது. இந்த அப்டேட் உடன் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆட்டோமெட்டிக் டிரிம்களின் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டின் விலை விவரங்களை இங்கே பார்ப்போம்:
வேரியன்ட் |
விலை |
ஷைன் டர்போ ஏடி |
ரூ.10 லட்சம் |
ஷைன் டர்போ AT டூயல் டோன் |
ரூ.10.25 லட்சம் |
ஷைன் டர்போ AT டூயல் டோன் வைப் பேக்* |
ரூ.10.27 லட்சம் |
விலை, எக்ஸ்-ஷோரூம் ( பான்-இந்தியா )
*போலார் ஒயிட், ஜெஸ்டி ஆரஞ்சு அல்லது பிளாட்டினம் கிரேயில் ஃபாக் லைட்ஸ் மற்றும் பின்புற ரிஃப்ளெக்டர்களுக்கு பேக் கலர்ஃபுல் தோற்றத்தை கொடுக்கிறது. இது கதவில் ஒரு சைடு பாடி மோல்டிங்கையும் உள்ளடக்கியது. இந்த கலர் டிரிம்களை குரோம் எலமென்ட்கள் உடன் எலிகன்ஸ் பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
C3 -ன் மற்ற வேரியன்ட்களின் விலை (ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் உட்பட) ரூ. 6.16 லட்சம் முதல் ரூ. 10.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருக்கலாம்.
இப்போது சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் காரில் உள்ள வசதிகளைப் பற்றி பார்ப்போம்:
மேலும் படிக்க: புதிய சிட்ரோன் C3 ஷைன் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ZXi பிளஸ்: எந்த ஹேட்ச்பேக் டாப்-எண்ட் வேரியன்ட்டை வாங்குவது?
சிட்ரோன் சி3: ஒரு பார்வை
சிட்ரோன் சி3 எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்களுடன் வருகிறது. வெளிப்புற ரியர்வியூ மிரர்ஸ் (ORVMகள்) எலக்ட்ரிக்கலி அடெஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ஆக உள்ளன. சைடு டேர்ன் இண்டிகேட்டர்களும் உள்ளன. இது ஹாலோஜன் டெயில் லைட்ஸ் மற்றும் வாஷருடன் கூடிய ரியர் கிளாஸ் வைப்பர் ஆகியவை உள்ளன.
உள்ளே, C3 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. ஆட்டோமெட்டிக் ஏசி, ரிமோட் லாக்கிங்/அன்லாக்கிங் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவையும் உள்ளன.
சிட்ரோன் C3: பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
சிட்ரோன் C3 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது, அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
82 PS |
110 PS |
டார்க் |
115 Nm |
205 Nm வரை* |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு மேனுவல் |
6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் |
*C3 டர்போ வேரியன்ட்கள் 6-ஸ்பீடு மேனுவல் மூலம் 190 Nm மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 205 Nm வரை அவுட்புட்டை கொடுக்கிறது.
சிட்ரோன் சி3: போட்டியாளர்கள்
சிட்ரோன் C3 உடன் போட்டியிடுகிறது மாருதி வேகன் ஆர், மாருதி செலிரியோ, மற்றும் டாடா டியாகோ. அதன் விலை மற்றும் அளவுகளின் படி பார்த்தால் நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful