சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது

டாடா டைகர் க்காக ஜனவரி 27, 2020 10:59 am அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன

  • அறிமுகப்படுத்தப்படும் வகைகளான ஃபேஸ்லிஃப்ட் டியாகோ மற்றும் டைகரின் ஜிஎன்சிஏபி நடத்திய மோதல் சோதனையில் பங்கு பெற்றிருக்கிறது.

  • இரண்டு மாதிரிகளுமே ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைகளிலும் மரையாணிப் பிடிப்புகள் இல்லாமல் இருக்கிறது.

  • நிலையான பாதுகாப்பு அம்சங்களில் முன்புற இரட்டை காற்று பைகள் மற்றும் ஈபிடி யுடன் இருக்கும் ஏபிஎஸ் ஆகியவை உள்ளடங்கியதாக இருக்கிறது.

  • இரண்டு மாதிரிகளும் பிஎஸ்6-இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திரம் (86 பிபிஎஸ் / 113 என்எம்) உடன் வருகின்றன.

குளோபல் என்சிஏபி சமீபத்தில் நடத்திய மோதல் சோதனையில் # இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் முனைப்பியக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகர் பங்கேற்றது. ஹேட்ச்பேக் மற்றும் சப்-4 எம் செடான் ஆகிய இரண்டும் பெரியவர்களுக்கு நான்கு நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்ற அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மூன்று நட்சத்திர மதிப்பெண் என்ற அளவில் மதிப்பிடப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட வகைகளான டியாகோ மற்றும் டைகர் ஆகியவை சோதனை செய்யப்பட்ட வாகனங்கள் ஆகும். முன்புறம் இருக்கும் இரட்டை காற்று பைகள், தகுதியான முன் இருக்கை பட்டிகள் மற்றும் ஈபிடி உடன் ஏபிஎஸ் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படுகின்றன. ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகிய இரண்டு வாகனங்களும் பெரியவர்களுக்கான 17 புள்ளிகளில் 12.52 மதிப்பெண்களைப் பெற்ற அதே நேரத்தில் குழந்தைகளுக்கான 49 புள்ளிகளில் 34.15 புள்ளிகளைப் பெற்றது.

தொடர்புடையவை: டாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது

எப்போதும் போலவே, முகப்பு மாற்றப்பட்ட டியாகோ மற்றும் டைகர் ஆகிய கார்கள் 64 கிமீ வேகத்தில் மோதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையின்படி, இரு வாகனங்களின் உள் கட்டமைப்பு மற்றும் கால் வைக்கும் பகுதி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெரியவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கான பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஓட்டுநருக்கு இருப்பது போலவே பயணிகளுக்கும் மார்பு பகுதி பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, தொடை எலும்பு மற்றும் முழங்கால்களுக்கான பாதுகாப்பு இரு கார்களிலும் ஓரளவு இருக்கிறது.

தொடர்புடையது: டாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 4.60 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

சோதனை செய்யப்பட்ட இரண்டு வகைகளிலும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மரையாணிகளை டாடா வழங்கவில்லை. 3 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான இருக்கை பெரியவர்களுக்கான இருக்கை பட்டிகள் மற்றும் கைவைக்கும் தாங்கிகள் ஆகியவைகள் நிறுவப்பட்டிருக்கிறது, இதனால் மோதலின் போது வேகமாக முன்னோக்கி சாய்வது தடுக்கப்படுகிறது. இது குழந்தையின் மார்புக்கு போதுமான அளவில் பாதுகாப்பை வழங்கியது. 18 மாத வயதில் இருக்கும் குழந்தையின் சிஆர்எஸ் வயதுவந்தோர் இருக்கை பட்டி மற்றும் கைவைக்கும் தாங்கி பயன்படுத்தி பின்புறமாகத் திரும்பும் வகையில் நிறுவப்பட்டிருக்கிறது, இது சிறப்பான நாள ஒரு பாதுகாப்பை வழங்குகிறது.

மேலும் படிக்க: பிஎஸ்6 இயந்திரங்களுடன் 2020 டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 6.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன் புற பயணிகள் இருக்கையில் இருந்து பின் நோக்கி பயணிகளைப் பார்க்கும் சிஆர்எஸ்ஸிற்கான காற்று பைகளைத் துண்டிக்கும் வாய்ப்பை ஹேட்ச்பேக் அல்லது செடான் ஆகிய இரண்டுமே வழங்கவில்லை. மூன்று-புள்ளி இருக்கை பாட்டிகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மரையாணிகள் இல்லாததால் குழந்தை இருக்கைக்கான பாதுகாப்பு மதிப்பீட்டில் மூன்று நட்சத்திர அளவிற்கு மதிப்பெண் குறைத்தது.

மேலும் படிக்க: இறுதி விலையில் டாடா டியாகோ

Share via

Write your Comment on Tata டைகர்

explore similar கார்கள்

டாடா டியாகோ

சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்20.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

டாடா டைகர்

சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்19.28 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை