2020 ஆண்டில் பிஎஸ் 6 என்ஜின்களுடன் டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 6.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
published on ஜனவரி 25, 2020 02:15 pm by dhruv attri for டாடா நிக்சன் 2017-2020
- 34 Views
- ஒரு கருத்தை எ ழுதுக
புதுப்பிக்கப்பட்ட நெக்ஸன் கார் சூரிய திறப்பு மேற்கூரை, டிஜிட்டல் கருவிகளின் தொகுப்பு, டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் போன்ற புதிய அம்சங்களைக் கொண்டு வருகிறது
இந்தியாவில் டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் கார் ரூபாய் 6.95 லட்சத்திலும் டீசல் கார் ரூபாய் 8.45 லட்சத்திலும் தொடங்கி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வகை-வாரியான விலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன (தற்போதைய-டெல்லி விற்பனை கடை):
வகை |
பெட்ரோல் |
டீசல் |
எக்ஸ்இ |
ரூபாய் 6.95 லட்சம் |
ரூபாய் 8.45 லட்சம் |
எக்ஸ்எம் |
ரூபாய் 7.70 லட்சம் |
ரூபாய் 9.20 லட்சம் |
எக்ஸ்இஜெட் |
ரூபாய் 8.70 லட்சம் |
ரூபாய் 10.20 லட்சம் |
எக்ஸ்இஜெட்+ |
ரூபாய் 9.70 லட்சம் |
ரூபாய் 11.20 லட்சம் |
எக்ஸ்இஜெட்(ஓ)+ |
ரூபாய் 10.60 லட்சம் |
ரூபாய் 12.10 லட்சம் |
எக்ஸ்எம்ஏ |
ரூபாய் 8.30 லட்சம் |
ரூபாய் 9.80 லட்சம் |
எக்ஸ்இஜெட்ஏ+ |
ரூபாய் 10.30 லட்சம் |
ரூபாய் 11.80 லட்சம் |
எக்ஸ்இஜெட்ஏ (ஓ)+ |
ரூபாய் 11.20 லட்சம் |
ரூபாய் 12.70 லட்சம் |
டாடா நெக்ஸன் அறிமுகப்படுத்தும் மாதிரியின் வடிவமைப்பு பல புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அதன் முந்த்தய மின்சார நெக்ஸன் இவியைப் போலவே இருக்கிறது. இதில் மூன்று-அம்பு வடிவ எல்இடி டிஆர்எல், பின்புற விளக்குகளுக்கு இணையான எல்இடி கிராஃபிக் மற்றும் முன் காற்று நிரப்பிப் போன்ற புதிய வடிவமைப்புகள் அடங்கும். 16 அங்குல இயந்திர-பூச்சு உலோக சக்கரங்கள் போன்றவை இதற்கு முந்தைய மாதிரியான நெக்ஸன் இவியை ஒத்ததாக இந்த புதிய வடிவமைப்பு இருக்கிறது. இதன் உட்புற கட்டமைப்பு வசதிகள் புதிய இரட்டை-தொனி அமைப்பைத் தவிர, இதற்கு முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாதிரியைப் போலவே கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது, இது ஒரு வெண் மஞ்சள் நிறத்தில் சிறப்பாக மத்திய லேயரைக் கொண்டுள்ளது.
மின்சார சூரிய திறப்பு மேற்கூரை (புதியது), எல்இடி டிஆர்எல்-களுடன் தானியங்கி படவீழ்த்தி முகப்பு விளக்குகள், மூலையில் இருக்கும் மூடுபனிக்கான பிரகாச விளக்குகள் (புதியது), மழை நீர் துடைப்பான்கள் (புதியவை), இயக்கும் கட்டுப்பாடு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தானியங்கியுடன் 7 அங்குல தொடுதிரை, டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு (புதியது), தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஆல்ட்ரோஸில் இருப்பது போன்ற தட்டையான சுழலும் சக்கரம், டிஜிட்டல் கருவி தொகுப்பு (எளிய டாட் மேட்ரிக்ஸ் காட்சி), மற்றும் அழுத்தும்-பொத்தான் தொடக்க / நிறுத்த செயல்பாடு போன்ற சிறப்பம்சங்கள் இருக்கிறது.
தள-பாதுகாப்பு அமைப்பு, கார் இருக்குமிடம் தெரிவித்தல் மற்றும் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்லிஷ் ஆகிய மொழிகளில் அழகான இயற்கையான குரல் அமைப்பு போன்ற அம்சங்களை வழங்குகிறது ஐஆர்ஏ இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் (தொலைத்தொடர்பு சேவைகள்) போன்ற கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு வேகமான குளிர்சாதன அம்சமும் இருக்கிறது, ஓட்டுநரின் பக்கத்தில் இருக்கும் ஜன்னலை உருட்டுவதன் மூலமாகக் குளிர் சாதனத்தின் வெப்பநிலையைக் குறைந்தபட்சமாகவும், அதிகபட்ச அளவிலும் அமைத்துக் கொள்ளலாம்.
இரட்டை காற்று பைகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், நிலையான மின்சார ஸ்திரத்தன்மை அமைப்பு, ஐஎஸ்ஓஎஃப்ஐஎக்ஸ், இழுவைக் கட்டுப்பாடு மற்றும் நிறுத்தும் தட்டு துடைக்கும் வழிமுறை (ஹாரியரைப் போன்றது), ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருக்குப் பக்கத்தில் இருப்பவருக்கான இருக்கை பட்டை மற்றும் வாகனத்தைப் பின்புறமாக நிறுத்தும் உணர்விகள் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்ட நிலையான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது.
இது அதன் 1.2-லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட (110 பிபிஎஸ் / 170 என்எம்) மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் (110 பிபிஎஸ் / 260 என்எம்) டீசல் என்ஜின்கள் போன்றவைகள் பிஎஸ்6 ஐ ஒத்த மாதிரியைக் கொண்டுள்ளது. இரண்டு என்ஜின்களும் 6-வேக எம்டியுடன் விருப்பமான ஏஎம்டி உடன் இணைக்கப்படுகின்றன.
டாடா நெக்ஸன் கீழ்க்கண்ட ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது:
-
பசுமையான பச்சை
-
ஆகாய நீலம்
-
சுடர் சிவப்பு
-
கல்கரி வெள்ளை
-
டேடோனா சாம்பல் நிறம்
-
தூய வெள்ளி நிறம்
அனைத்து வண்ணங்களும் புதியவை மேலும் கல்கரி வெள்ளைத் தவிர இது இரட்டை-தொனி மேற்கூரை விருப்பம் மற்றும் சோனிக்-வெள்ளி மேற்கூரை கூரை விருப்பத்துடன் வருகிறது.
டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ஆனது ஹூண்டாய் வெனியு, மாருதி விட்டாரா ப்ரெஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் வரவிருக்கும் ரெனால்ட் எச்.பி.சி க்கு போட்டியாக வருகிறது.
மேலும் படிக்க: நெக்ஸன் ஏஎம்டி