ஜனவரி 29 வெளியீட்டுக்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்த Citroen C3 Aircross ஆட்டோமேட்டிக்
published on ஜனவரி 23, 2024 01:24 pm by shreyash for சிட்ரோய்ன் aircross
- 108 Views
- ஒரு கருத்தை எழுதுக
சில சிட்ரோன் டீலர்ஷிப்புகள் ஏற்கனவே C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்டுக்கான முன்பதிவுகளை (அதிகாரப்பூர்வமாக இல்லை) தொடங்கியுள்ளன.
-
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆனது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறும்.
-
எஸ்யூவி -யின் தற்போதைய 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கனெக்ட் செய்யப்படும்.
-
காரில் உள்ள வசதிகளில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது
-
ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் இந்த காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களை விட ரூ. 1.3 லட்சம் வரை கூடுதல் விலையில் வரலாம்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் இந்த மாத இறுதிக்குள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) வடிவில் அப்டேட்டை பெறவுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக, சிட்ரோன் C3 காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் சில டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு சிட்ரோன் டீலர்ஷிப்கள் ஏற்கனவே C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக்கிற்கான ஆஃப்லைன் முன்பதிவுகளை (அதிகாரப்பூர்வமாக இல்லை) ஏற்கத் தொடங்கியுள்ளன.
மேலே உள்ள படத்தில் காணப்படுவது போல், சிட்ரோன் C3 ஏர்கிராஸ் -காரின் AT வேரியன்ட்களின் கேபின் அமைப்பு அதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களை போலவே உள்ளது, இதில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் லீவர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. C3 ஏர்கிராஸின் ஆட்டோமெட்டிக் பதிப்பு, அதன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (110 PS / 190 Nm) இணைக்கப்பட்ட 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டாக இருக்கும். தற்போது, சிட்ரோன் C3 ஏர்கிராஸ் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதையும் பார்க்கவும்: Tata Punch EV காரின் டெலிவரி இன்று முதல் தொடங்குகிறது
வசதிகளில் மாற்றம் இல்லை
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் அறிமுகத்தைத் தவிர C3 ஏர்கிராஸில் வேறு எந்த வித மாற்றங்களும் இருக்காது. எஸ்யூவி வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் மற்றும் மூன்றாவது வரிசைக்கான பிரத்யேக வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
C3 ஏர்கிராஸில் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் வியூ கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அதன் மேனுவல் வேரியன்ட்களுடன் ஒப்பிடும் போது தோராயமாக விலையில் ரூ.1.3 லட்சம் வரை உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful