ஜனவரி 2024 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் இங்கே
published on பிப்ரவரி 13, 2024 05:52 pm by rohit for மாருதி பாலினோ
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
பட்டியலில் உள்ள டாப் 10 கார்களில், மூன்று மாடல்கள் ஜனவரி 2024 மாத விற்பனையில் இயர் ஓவர் இயர் (YoY) 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் முடிந்துவிட்டது, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனை குறைந்திருந்தாலும் , ஜனவரியில் இந்திய வாகனத் துறையில் மன்த் ஓவர் மன்த் (MoM) -க்கான தேவை அதிகரித்தது. இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து கார்களும் நேர்மறையான ஆண்டு வளர்ச்சியை- (YoY) கண்டன. ஜனவரி 2024 விற்பனையில் ஒவ்வொரு மாடலும் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய விரிவான பார்வை இங்கே:
மாடல் |
ஜனவரி 2024 |
ஜனவரி 2023 |
டிசம்பர் 2023 |
மாருதி பலேனோ |
19,630 |
16,357 |
10,669 |
டாடா பன்ச் |
17,978 |
12,006 |
13,787 |
மாருதி வேகன் R |
17,756 |
20,466 |
8,578 |
டாடா நெக்ஸான் |
17,182 |
15,567 |
15,284 |
மாருதி டிசையர் |
16,773 |
11,317 |
14,012 |
மாருதி ஸ்விஃப்ட் |
15,370 |
16,440 |
11,843 |
மாருதி பிரெஸ்ஸா |
15,303 |
14,359 |
12,844 |
மாருதி எர்டிகா |
14,632 |
9,750 |
12,975 |
மஹிந்திரா ஸ்கார்பியோ |
14,293 |
8,715 |
11,355 |
மாருதி ஃப்ரான்க்ஸ் |
13,643 |
– |
9,692 |
இதையும் பார்க்கவும்: 2024 ஜனவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 கார் பிராண்டுகள்: ஹூண்டாய் டாடாவை பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தது
முக்கியமான விவரங்கள்
-
மாருதி பலேனோ, கிட்டத்தட்ட 20,000 யூனிட்கள் விற்பனையாகி, ஜனவரி 2024 மாத விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதன் ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனை எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் MoM வளர்ச்சி இரட்டிப்பானது.
-
அடுத்த மூன்று இடத்தை டாடா பன்ச், மாருதி வேகன் ஆர், மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் பிடித்துள்ளன, விற்பனை 17,000 முதல் 18,000 யூனிட்கள் வரை இருந்தது. மூன்றில், பன்ச் 50 சதவீத வளர்ச்சியை கண்டது. பன்ச் EV மற்றும் டாடா நெக்ஸான் இவி ஆகியவற்றின் விற்பனையில் பன்ச் மற்றும் நெக்ஸான் ஆகியவற்றின் விற்பனையும் அடங்கும்.
-
நெக்ஸானுக்கு அடுத்ததாக மாருதி டிசையர் (பட்டியலில் உள்ள ஒரே செடான்) மொத்த விற்பனை கிட்டத்தட்ட 16,800 யூனிட்கள். இதன் மாத(MoM) விற்பனை 2,000 யூனிட்களாக அதிகரித்தது.
-
15,000 முதல் 16,000 யூனிட்கள் எண்ணிக்கையுடன் மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஜனவரி 2024 பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஹேட்ச்பேக் 7 சதவிகிதம் ஆண்டு வீழ்ச்சியைக் கண்டாலும், பிரெஸ்ஸாவின் இயர் டூ இயர் வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரித்தது.
-
இரண்டின் YOY விற்பனை எண்கள் மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ இரண்டையும் உள்ளடக்கியது. ஸ்கார்பியோ கிளாஸிக் மற்றும் ஸ்கார்பியோ என் விற்பனை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
-
13,600 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், மாருதி ஃப்ரான்க்ஸ் இந்த பட்டியலில் இடம் பிடித்தது. அதன் MoM விற்பனை கிட்டத்தட்ட 4,000 யூனிட்கள் உயர்ந்தது.
மேலும் படிக்க: பலேனோ AMT
0 out of 0 found this helpful