• English
    • Login / Register

    Tata Nexon Facelift Pure வேரியன்ட்டை 10 படங்களில் விரிவாக பார்க்கலாம்

    டாடா நிக்சன் க்காக செப் 21, 2023 06:52 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 34 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மிட்-ஸ்பெக் ப்யூர் கார் வேரியன்ட் ரூ.9.70 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) விலையில் தொடங்குகிறது மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     

    டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்  ரூ.8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் நான்கு கார் வேரியன்ட்களில் கிடைக்கிறது : ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ். நாங்கள் ஏற்கனவே  பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் கார் வேரியன்ட்டின் விவரங்களை படங்களில் விவரித்துள்ளோம் , மற்றும் மிட்-ஸ்பெக் ப்யூர் வேரியன்ட்டை வாங்க விரும்பினால், நீங்கள் அதன் விரிவான கேலரியை கீழே காணலாம் .

    எக்ஸ்டீரியர்

    முன்புறம்

    Tata Nexon Facelift Pure Variant Front

    முன்புறத்தில், ப்யூர் கார் வேரியன்ட் டாப்-ஸ்பெக் நெக்ஸான் போன்றே தோற்றமளிக்கிறது. அதே கிரில், LED  ஹெட்லேம்பு வடிவமைப்பு,மற்றும் DRL  செட் அப் ஆகியவற்றை பெறுகிறது.  

    Tata Nexon Facelift Pure Variant Headlamps

    ஆனால் பம்பரின் மீது மெல்லிய ஸ்கிட் பிளேட், இரு- செயல்பாடு கொண்ட ஹெட்லேம்புகள் மற்றும் வரிசையான LED DRL -கள் ஆகியவை கொடுக்கப்படவில்லை.

    பக்கவாட்டுப் பகுதிகள்

    Tata Nexon Facelift Pure Variant Side

    தோற்றத்தில், நீங்கள் வீல் ஆர்ச்கள் மற்றும் கதவுகளில் அகலமான கிளாடிங்குகள், ORVM-மவுன்டட் இன்டிகேட்டர்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றைப் பெறுவீர்கள், ஆனால் அது பாடி கலர்டு டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்படவில்லை.

    மேலும் காணவும்: நெக்ஸான் போன்ற முன்பக்கத்துடன் மீண்டும் சாலையில் தென்பட்ட 2024 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்

    Tata Nexon Facelift Pure Variant Steel Wheels

    மேலும், ப்யூர் வேரியன்ட் அலாய் வீல்களை பெறவில்லை, அதற்குப் பதிலாக, ஸ்டைலான வீல் கவர்களுடன் கூடிய ஸ்டீல் வீல்களை கொண்டுள்ளன.
    பின்புறம்

    Tata Nexon Facelift Pure Variant Rear

    முகப்புத் தோற்றத்தைப் போலவே, நெக்ஸான் ப்யூர் காரின் பின்புறத்தோற்றமும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களை போலவே உள்ளது. இரண்டும் ஒரே LED டெயில் லேம்புகள் மற்றும் அதே பம்பர் வடிமைப்பை பெறுகின்றன. ஆனால் அது இணைக்கப்பட்ட டெயில் லேம்பு எலமென்ட்கள் கொடுக்கப்படவில்லைமற்றும் பம்பர் மீது ஒரு ஸ்கிட் பிளேட்டும் இல்லை.

    உட்புறம்

    டாஷ்போர்டு

    Tata Nexon Facelift Pure Variant Dashboard

    உட்புறத்தில், அனைத்து வேரியன்ட்களின் டேஷ்போர்டின் ஒட்டு மொத்த வடிவமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளன. சிறய 7- இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிறிய பகுதி அளவில் உள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட லேயர்டு டேஷ்போர்டை ப்யூர் வேரியன்ட் பெற்றுள்ளது.

    Tata Nexon Facelift Pure Variant Steering Wheel

    இது டாடாவின் பேக்லிட் டாடா லோகோ உடன் கூடிய புதிய 2-ஸ்போக் ஸ்டியரிங் வீலையும் பெற்றுள்ளது.

    முன்புற இருக்கைகள்

    Tata Nexon Facelift Pure Variant Front Seats

    அனைத்து வேரியன்ட்களின் முன்புற இருக்கைகளின் வடிவமைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன ஆனால் ப்யூர் வேரியன்ட்டின் தோலினால் ஆன இருக்கைகள் இடம் பெறவில்லை. இங்கே, நீங்கள் மேனுவல் ஹேண்ட் பிரேக் மற்றும் சென்டர் கன்ட்ரோலில் டிரைவ் மோடு செலக்டாரை பெறுவீர்கள்

    மேலும் படிக்க: கியா சோனெட்டை மிஞ்சும் 7 அம்சங்களை பெறும் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்

    Tata Nexon Facelift Pure Variant Sunroof

    மேலும், ப்யூர் S வேரியன்ட்டில்  நீங்கள் சிங்கிள் பேன் சன் ரூஃபின் ஆப்ஷனையும் பெறுவீர்கள்.

    பின்புற இருக்கைகள்

    Tata Nexon Facelift Pure Variant Rear Seats

    இதிலும் கூட, பிற கார் வேரியன்ட்களை போலவே இருக்கைகளின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளன ஆனால் இருக்கைகளின் உறைகள் மட்டுமே மாறுகின்றன பின்புறத்தில், கப் ஹோல்டர்களுடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் நடுவில் இருக்கும் பயணிக்கான ஹெட்ரெஸ்ட் ஆகியவை கொடுக்கப்படவில்லை ஆனால் நீங்கள் பின்புற AC வென்ட்ஸை பெறுவீர்கள்

    விலை & போட்டியாளர்கள்

    புதிய நெக்ஸான் ரூ.8.10 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரையிலும் அதன் ப்யூர் டிரிம் கார்கள் ரூ.9.70 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) தொடக்க விலையிலும் கிடைக்கின்றன. அது‌ கியா சோனெட், ஹூண்டாய் வென்யு, மாருதி பிரெஸ்ஸா மற்றும்‌ மஹிந்திரா XUV300 ஆகியவற்றுக்குப் போட்டியாகத் தொடரும்.

    மேலும் படிக்க: நெக்ஸான் AMT

    was this article helpful ?

    Write your Comment on Tata நிக்சன்

    1 கருத்தை
    1
    G
    gyaneshwar mishra
    Sep 20, 2023, 8:38:44 PM

    Nexon is a very nice car,along with mileage and engineering wise too.

    Read More...
      பதில்
      Write a Reply

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      ×
      We need your சிட்டி to customize your experience