• English
  • Login / Register

கியா சோனெட் காரை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அதிகமாக பெறும் 7 அம்சங்கள்

published on செப் 20, 2023 03:52 pm by shreyash for டாடா நிக்சன்

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

 இரண்டு சப் காம்பாக்ட் எஸ்யூவி -களும் சிறப்பான அம்சங்களுடன், ஆனால் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இந்த அம்சங்களை சோனெட்டை விட அதிகமாக பெறுகிறது  

2023 Nexon vs Sonet

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்  விரிவான ஸ்டைலிங் உடன் மற்றும் புதுப்பிப்பு அம்சங்களுடன், 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உட்பட இன்னும் இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாடாவின் அப்டேட் செய்யப்பட்டுள்ள சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது கியா சோனெட் உடன் போட்டியிடுகிறது, இது பல பிரீமியம் அம்சங்கள் மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது, ஆனால் இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ள நெக்ஸானில் சேர்க்கப்பட்டுள்ள சில வசதிகள் இதில் கொடுக்கப்படவில்லை. சோனெட்டை விட அதிகமாக 2023  நெக்ஸான் என்ன வழங்குகிறது என்பதை பார்ப்போம்..

டிரைவருக்கான சிறப்பான டிஜிட்டல் டிஸ்பிளே

2023 நெக்ஸான் டிரைவருக்கான 10.25 -இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே வடிவத்தில் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்றுள்ளது. இதற்கு மாறாக, கியா சோனெட் 4.2-இன்ச் மல்டி-இன்ஃபார்மேஷன டிஸ்ப்ளே கொண்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது.

2023 Tata Nexon Digital Driver's Display

சோனெட் -ன் MID ஆனது சராசரி மைலேஜ், எரிபொருள் காலியாகும் தூரம், டர்ன்-பை-டர்ன் நேபிகேஷன், பயணத் தகவல் மற்றும் டயர் அழுத்தம் போன்ற தரவைக் காட்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, நெக்ஸான் யூனிட் தெளிவான கிராபிக்ஸ் மூலம் விரிவான தகவல்களைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழியாக ஆப்பிள் மேப்ஸ் அல்லது கூகுள் மேப்ஸ் இலிருந்து உங்கள் நேவிகேஷனை பயன்ப்டுத்த உங்களை அனுமதிக்கிறது.

பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டருடன் 360 டிகிரி கேமரா

360 டிகிரி கேமரா அப்டேட்டட் நெக்ஸானில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் , இதனால் கியா சோனெட்டிலிருந்து தனித்து தெரிகிறது. இந்த அம்சத்தை வழங்கும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவியாக இது இல்லை என்றாலும் (நிஸான் மேக்னைட் -ல் ஏற்கனவே உள்ளது), நெக்ஸான் மேலும் ஒரு பிளைண்ட்-வியூ மானிட்டரை வழங்குகிறது. இந்த அம்சம் டர்ன் சிக்னல்களுடன் இணைந்து செயல்படுகிறது மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவில் வருகிறது.

Tata Nexon facelift 360-degree camera

மேலும் படிக்க: மாருதி பிரெஸ்ஸாவை விட புதிய டாடா நெக்ஸான் இந்த 5 அம்சங்களைப் பெறுகிறது

உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய இணை ஓட்டுநர் இருக்கை

டாடா நெக்ஸான் ஓட்டுநர் மற்றும் இணை-ஓட்டுநரின் இருக்கைகள் இரண்டிற்கும் உயரத்தை சரி செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது, அதே நேரத்தில் கியா சோனெட் ஓட்டுநர் இருக்கைக்கு மட்டும் உயரத்தைச் சரி செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸானில் இல்லாத, இயங்கும் ஓட்டுனர் இருக்கை வசதியை சோனெட் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ஸ்பீக்கர்கள்

Tata Nexon facelift 8-speaker music system

கியா சோனெட் பிராண்டட் 7-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டத்தை பெற்றாலும், 2023 நெக்ஸனின் பிராண்டட் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்கள் மற்றும் ஒரு ஒலிபெருக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதிகமான ஸ்பீக்கர்கள் பொதுவாக மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்கு வழிவகுக்கின்றன, ஆனால் நாங்கள் அவர்களை தொடர்ந்து சோதிக்கும் வரை எங்களின் இறுதித் தீர்ப்பை தள்ளி வைக்கிறோம்.

மழையை உணரும் வைப்பர்கள்

2023 டாடா நெக்ஸான் அதன் முன் முகமாற்ற பதிப்பில் இருந்து மழையை உணரும் வைப்பர் அம்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாறாக, சோனெட் இந்த அம்சத்தை வழங்கவில்லை. கூடுதலாக, புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான் அதன் பின்புற வைப்பரை ஸ்பாய்லருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதே சமயம் சோனெட்டின் பின்புற வைப்பர் பூட்லிட்டுக்கு  சற்று மேலே பின்புற கண்ணாடியில் வழக்கமாக பொருத்தப்பட்டு பார்வைக்கு தெரியும் வகையில் இருக்கிறது.

மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூவை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்  7 அம்சங்களை அதிகமாக பெறுகிறது

ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்குகள்

கியா சோனெட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஆறு ஏர்பேக்குகளைப் பெற்றுள்ளது, தற்போது இது நான்கு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. டாடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யானது, பழைய GNCAP கிராஷ் டெஸ்ட்களின்படி 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற போது, டூயல்-முன்புற ஏர்பேக்குகளுடன் மட்டுமே ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டது, ஆனால் மேம்படுத்தப்பட்டதன் மூலம், பயணிகளின் அதிக பாதுகாப்பிற்காக அனைத்து வேரியன்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகளை பெறுகிறது.

Tata Nexon facelift six airbags

டீசலுடன் கிடைக்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

இந்த பிரிவில் உள்ள கியா சோனெட்டுக்கு இப்போது பிரத்தியேகமான அம்சம் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் மிதி இல்லாமல் கைமுறையானது) மற்றும் டீசல்-பவர்டு வேரியன்ட்களுக்கு ஒரே "மேனுவல்" ஆப்ஷனாகும். அதன் நன்மைகள் இருந்தாலும், பல வாங்குபவர்கள் மிகவும் பழக்கமான மேனுவல் டிரான்ஸ்மிஷன் செட்டப்பை விரும்பலாம், அதையே 2023 டாடா நெக்ஸனின் டீசல் மாடல்கள் வழங்க முடியும்.

நெக்ஸான் -ன் 1.5-லிட்டர் டீசல் வாகனம் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கைமுறை டிரான்ஸ்மிஷனுடன் இருக்கலாம். கியா சோனெட்டின் டீசல் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் தேர்வை வழங்குகிறது.

விலை

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ. 8.10 லட்சத்தில் இருந்து ரூ. 15.50 லட்சம் (அறிமுகம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் கியா ரூ.7.79 லட்சம் முதல் ரூ.14.89 லட்சம் வரையிலான விலை வரம்பில் சோனெட்டை விற்பனை செய்கிறது (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்). இந்த இரண்டு எஸ்யூவிகளும் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளன.

தொடர்புடையவை: டாடா நெக்ஸான் எதிராக ஹூண்டாய் வென்யூ எதிராக கியா சோனெட் எதிராக மாருதி பிரெஸ்ஸா எதிராக மஹிந்திரா எக்ஸ்யூவி300: விலை ஒப்பீடு

கியா தற்போது 2024 -ல் அறிமுகப்படுத்தப்படும் ஃபேஸ்லிஃப்ட் சோனெட்டை சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் மூலம், கியா சோனெட் அதன் தற்போதைய பதிப்போடு ஒப்பிடும்போது இன்னும் அதிக அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: நெக்ஸான் AMT   

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience