ஹூண்டாய் வென்யூவை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -டில் கிடைக்கும் கூடுதலான 7 அம்சங்கள்
ஹூண்டாய் வேணு க்காக செப் 13, 2023 06:45 pm அன்று anonymous ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பல அப்டேட்களை பெறுகிறது, தொழில்நுட்பம் நிறைந்துள்ள வென்யூ -வை விட முன்னணியில் உள்ளது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 14 ஆம் தேதி வெளியிடுவதற்கு முன்னதாகவே முழுமையாக அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் வழங்கப்படும் இந்த வாகனம் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் கேபினுக்கான அப்டேட்களுடன் வருகிறது. டாடா சப்காம்பாக்ட் எஸ்யூவியை அதன் பரம விரோதியான மாருதி பிரெஸ்ஸாவுடன் ஏற்கனவே ஒப்பிட்டு பார்த்து இருக்கிறோம். இப்போது ஹூண்டாய் வென்யூவை விட நெக்ஸான் என்ன வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.
360 டிகிரி கேமரா
இந்த பிரிமியம் அம்சத்தை 2023 டாடா நெக்ஸான் முதன்முதலில் வழங்கவில்லை என்றாலும், ஹூண்டாய் வென்யூவை விட இது இன்னும் முந்தியுள்ளது. 360-டிகிரி கேமராவின் உபயத்தினால், இது ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரை பெறுகிறது, இது நீங்கள் டர்ன் இண்டிகேட்டர்களில் பார்க்கும் போது ஆக்டிவேட் ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது, வென்யூ பின்புற பார்க்கிங் கேமராவுடன் மட்டுமே வருகிறது.
மழையை உணரும் வைப்பர்கள்
நெக்ஸான் ஏற்கனவே மழையை உணரும் வைப்பர்களுடன் வந்துள்ளது மற்றும் ஃபேஸ்லிஃப்ட் அதன் ஹூண்டாய் போட்டியாளரை விட ஒருபடி மேலே இருக்கிறது. இது ஒரு பெரிய அம்ச வித்தியாசமாகத் தெரியவில்லை என்றாலும், அந்த மழை நாட்களில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பாமல் இருக்கவும், சாலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும் இது உதவுகிறது.
டீசல் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்
டீசல் இன்ஜின்களின் தேர்வு சப்-4 மீ களத்தில் தொடர்ந்து குறைந்து வந்தாலும், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவை தொடர்ந்து வழங்கும் சில எஸ்யூக்களாக உள்ளன. இருப்பினும், வென்யூ டீசல் இன்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே வழங்குகிறது, ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் அதன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு 6-ஸ்பீடு AMT (பேடில் ஷிஃப்டர்களுடன்) ஆப்ஷனை வழங்குகிறது.
டிரைவருக்கான சரியான டிஜிட்டல் சிஸ்டம்
இங்குள்ள இரண்டுஎஸ்யூவி -களும்டிஜிட்டல்இன்ஸ்ட்ரூமென்ட்கிளஸ்டருடன்வந்தாலும், நெக்ஸான்ஃபேஸ்லிஃப்ட்சரியான 10.25-இன்ச்ஸ்கிரீன்டிஸ்ப்ளேவைபெறுகிறது. வென்யூவின்டிஸ்பிளேயில்ஒருசிங்கிள் லே அவுட் மட்டுமேஉள்ளதுமற்றும்அதுஅடிப்படையானஓட்டுநர்தகவலைமட்டுமேவழங்கும், ஆனால், மற்ற அம்சங்களுடன், நெக்ஸான்யூனிட்பலதிரைலே அவுட்திறன்கொண்டதுமேலும்அதன் இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டத்திலிருந்துமேப்ஸை ரிலேசெய்யலாம்.
ஒரு பெரிய டச் ஸ்கிரீன்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது, இது வென்யூவின் 8-இன்ச் யூனிட்டை விட பெரியது மட்டுமல்ல, புதிய யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. முன்பு கூறப்பட்டது போல, இங்குள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இரண்டும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கிறது.
ஒரு JBL-பிராண்டட் சவுண்ட் சிஸ்டம்
ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்கள் மற்றும் ஒரு நல்ல ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஒரு ஒலிபெருக்கி கொண்ட JBL சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. மறுபுறம், வென்யூ கார், முன் மற்றும் பின்புற ஸ்பீக்கர்களுடன் முன் ட்வீட்டர்களுடன் வருகிறது.
உயரத்தை சரிசெய்து கொள்ளும் வகையிலான இணை-ஓட்டுனர் இருக்கை
வென்யூ காரை போலல்லாமல், புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் உயரத்தை சரிசெய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கையை போன்றே இணை-ஓட்டுநர் இருக்கையையும் பெறுகிறது. இது ஒரு சிறந்த இருக்கை நிலையை கண்டறிய சக பயணிக்கு உதவுகிறது.
வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸானின் விலைகள் ரூ.8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி ஃபிரான்க்ஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ