2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹூண்டாய் கார்கள்
published on டிசம்பர் 24, 2024 06:58 pm by kartik for ஹூண்டாய் கிரெட்டா ev
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
பட்டியலில் எஸ்யூவி -களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் இந்தியாவில் ஹூண்டாயின் ஃபிளாக்ஷிப் EV காராக மாறக்கூடிய பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் செடானும் உள்ளது.
வரும் 2025 -ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் அதன் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் மூன்று புதிய வாகனங்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு புதிய கார்களில் ஒன்று கிரெட்டா EV ஆகும். அதன் வெளியீட்டு தேதி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது, மேலும் இரண்டு EV -களும் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹூண்டாயில் இருந்து வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் அனைத்து கார்களையும் பார்ப்போம்.
ஹூண்டாய் கிரெட்டா EV
வெளியீடு: 17 ஜனவரி 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 20 லட்சம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் காரான கிரெட்டா -வின் EV வெர்ஷன் 2025 ஜனவரியில் விற்பனைக்கு வரும். முன்பு கண்டுபிடிக்கப்பட்ட சோதனை கார்கள் மூலமாக இந்த புதிய EV ஆனது அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) போலவே இருக்கும் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் கிரெட்டா EV கார் என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பில் சில வேறுபாடுகள் இருக்கலாம். கேபின் அனுபவம் ICE கிரெட்டாவை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எலக்ட்ரிக் பவர்டிரெய்னை பொறுத்தவரையில் பல பேட்டரி தேர்வுகள் மற்றும் சுமார் 400 கி.மீ கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் வென்யூ EV
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஏப்ரல் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.12 லட்சம்
ஹூண்டாய் வென்யூ -வின் எலக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டால் கொரிய கார் தயாரிப்பாளரின் இந்திய வரிசையில் இது மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் EV ஆகி இது இருக்கும். ஹூண்டாய் வென்யூ EV பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இது ICE போலவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் 300-350 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய பல பேட்டரி பேக்குகளுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். கேபினை பொறுத்தவரையில் ICE ஹூண்டாய் வென்யூ தவறவிட்ட பவர்டு ஹெயிட் அட்ஜெஸ்ட்மென்ட் போன்ற சில புதிய வசதிகளை EV பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இதே போன்ற செய்தியை வாசிக்க: 2025 ஆண்டில் 4 மாருதி கார்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹூண்டாய் டியூசன் ஃபேஸ்லிஃப்ட்
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஆகஸ்ட் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 30 லட்சம்
உலகளவில் வெளியிடப்பட்ட காரான ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் டியூசன் அடுத்த ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி ஆனது சர்வதேச-ஸ்பெக் மாடலில் காணப்பட்ட அதே வடிவமைப்புடன் வரலாம். இதில் புதிய வடிவிலான கிரில் மற்றும் புதிய LED லைட்ஸ் ஆகியவை உள்ளன. இந்தியா-ஸ்பெக் டியூசன் ஆனது ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வரலாம். 2025 ஹூண்டாய் டியூசன் ஆனது பழைய மாடலில் இருந்த அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் அயோனிக் 6
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: டிசம்பர் 2025
எதிர்பார்க்கப்படும் விலை: 65 லட்சம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள பிரீமியம் EV காராக ஹூண்டாய் அயோனிக் 6 இருக்கும். இதன் குளோபல் வெர்ஷன் இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்கும் பவர்டிரெய்னுடன் வருகிறது. மற்றும் 5.1 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும், மேலும் 600 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டுள்ளது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவுடன் டூயல்-டிஜிட்டல் டிஸ்ப்ளே செட்டப் போன்று உலகளாவிய பதிப்பில் இருக்கும் வசதிகளை கொண்ட கேபின் உடன் இது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் அதன் உலகளாவிய கார்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் நீங்கள் எந்த காரை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 out of 0 found this helpful