• English
  • Login / Register

நெக்ஸான் போன்ற முன்பக்கத்துடன் மீண்டும் சாலையில் தென்பட்ட 2024 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்

published on செப் 19, 2023 03:44 pm by rohit for டாடா ஹெரியர்

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் நேர்த்தியான LED டேடைம் DRL -களுடன் இருந்தது, இது புதிய நெக்ஸான் EV -யில் காணப்படுவது போல் கனெக்டிங் எலமென்ட் உடன் இருக்கலாம்.

 

Tata Harrier facelift

  • 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஹாரியர் ஃபேஸ்லிஃப்டை டாடா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • பழைய புகைப்படங்கள் ஏற்கனவே புதிய அலாய் வீல்கள், இணைக்கப்பட்ட LED பின்புற விளக்குகள் மற்றும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

  • இதன் கேபின் புதிய வடிவத்திலான டாஷ்போர்டு, புதிய ஸ்டீயரிங் மற்றும் பெரிய டச் ஸ்கீரீன் ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது.

  • 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவையும் இதில் இருக்கலாம்.

  • ஏற்கனவே உள்ள மாடலின் டீசல் இன்ஜினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; இது புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டிலும் வழங்கப்படலாம்.

  • தற்போதைய மாடலை விட (ரூ.15.20 லட்சம் முதல் ரூ. 24.27 லட்சம் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) பிரீமியத்தில் விலை நிர்ணயம் செய்யப்படும்.

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் சோதனை காரை நாம் முதன் முதலில் சாலையில் பார்த்து சுமார் ஒரு வருடம் ஆகப்போகிறது. 2023 -யில் கூட, அப்டேட்டட் எஸ்யூவி சில முறை சோதனை செய்யும் போது சாலையில் தென்பட்டது, சமீபத்திய சோதனை கார் சுவாரஸ்யமான விவரங்களை வெளிப்படுத்துகிறது மற்றும் கார் உற்பத்திக்கு தயாராக இருப்பதாக தோன்றுகிறது.

என்ன தெரிய வருகிறது ?

ஹாரியர் ஃபேஸ்லிஃப்டின் சோதனை கார், இன்னும் மூடப்பட்டிருந்தாலும், அதன் புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தை எங்களுக்கு காண்பித்தது. நேர்த்தியான LED DRL -கள் (இடையில் ஒரு லைட்டிங் எலெமென்ட் உடன்  இணைக்கப்பட்டிருக்கலாம்) மற்றும் ஸ்பிளிட்டட்-ஹெட்லைட் செட்டப் உட்பட மற்றும் ஸ்பிளிட்-ஹெட்லைட் அமைப்பு உட்பட புதிய நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV -யில் உள்ள ஒற்றுமைகளை நாம் கண்டறிய முடியும். சமீபத்திய புகைப்படங்கள் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியின் செங்குத்தாக அடுக்கப்பட்ட LED ஹெட்லைட்களை பார்க்கவும் உதவுகிறது.

எஸ்யூவியின் பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றங்கள் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும், அலாய் வீல்கள், இணைக்கப்பட்ட LED பின்புற விளக்குகள் மற்றும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களுக்கு புதிய வடிவமைப்பு கிடைக்கும் என்பதை முந்தைய பார்வைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கேபின் புதுப்பிப்புகள் ஏராளமாக உள்ளன

Tata Harrier cabin

தற்போதுள்ள ஹாரியரின் கேபின் படம் குறிப்புக்கு பயன்படுத்தப்பட்டது

டாடா ஹாரியரின் கேபினையும் புதுப்பிக்கும், புதிய வடிவிலான டாஷ்போர்டு மற்றும் பேக்லைட் டாடா லோகோவுடன் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வடிவில் மாற்றங்கள் வரக்கூடும். லேண்ட் ரோவர் எஸ்யூவிகளில் 13.1-இன்ச் யூனிட் உள்ள பெரிய டச் ஸ்கீரீன் அமைப்பையும் சமீபத்திய சோதனை வாகனத்தைப் பார்த்ததில் தெரிந்தது. இருப்பினும், இது டாடா நெக்ஸான் EV-யில் அறிமுகமான 12.3-இன்ச் யூனிட்டாக இருக்கலாம். டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களாகும்.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்படலாம்.

மேலும் பார்க்க: டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் கிரியேட்டிவ் பேஸ் வேரியன்ட் 5 படங்களில் விரிவாக உள்ளது

பெட்ரோல் இன்ஜினிலும் வரக்கூடும்

New 1.5-litre turbo-petrol engine

ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (170PS/280Nm) பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படலாம்.

மறுபுறம், எஸ்யூவி -யின் தற்போதைய 2-லிட்டர் டீசல் யூனிட் (170PS/350Nm) தக்கவைக்கப்படும் வாய்ப்புள்ளது. இது அதன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் தொடர வாய்ப்புள்ளது.

அறிமுகம் மற்றும் விலை

டாடா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஃபேஸ்லிஃப்டட் ஹாரியரை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். இது தற்போதுள்ள மாடலை விட சிறிதளவு விலை உயர்வுடன் வரலாம், இதன் விலை ரூ.15.20 லட்சத்தில் இருந்து ரூ.24.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கும். டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV700, எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் ஹையர் வேரியன்ட்களுக்கு போட்டியாக இருக்கும்..

இதையும் படியுங்கள்: டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தை 10 படங்களில் விரிவாகப் பாருங்கள்

மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஹெரியர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience