சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon Facelift வெளியானது, விலை ரூ.8.10 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

modified on செப் 15, 2023 10:32 pm by ansh for டாடா நிக்சன்

அப்டேட் செய்யப்பட்டுள்ள நெக்ஸான் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ்

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இறுதியாக ரூ. 8.10 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நெக்ஸான் முக்கிய அப்டேட்களை பெறுகிறது. இருப்பினும், இது இன்னும் அதே இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் விலை எவ்வாறு இருக்கிறது மேலும் காரில் என்ன கிடைக்கும் என்பது இங்கே:

விலை

டாடா நெக்ஸான் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

MT

AMT

DCA

ஸ்மார்ட் (5MT)

ரூ. 8.10 லட்சம்

N.A.

N.A.

ஸ்மார்ட் + (5MT)

ரூ. 9.10 லட்சம்

N.A

N.A

ஸ்மார்ட் + S (5MT)

ரூ. 9.70 லட்சம்

N.A

N.A

பியூர்

ரூ. 9.70 லட்சம்

N.A

N.A

பியூர் S

ரூ. 10.20 லட்சம்

N.A

N.A

கிரியேட்டிவ்

ரூ. 11 லட்சம்

Rs 11.70 lakh

ரூ. 12.20 லட்சம்

கிரியேட்டிவ் +

ரூ. 11.70 லட்சம்

Rs 12.40 lakh

ரூ. 12.90 லட்சம்

கிரியேட்டிவ் + S

ரூ. 12.20 லட்சம்

Rs 12.90 lakh

ரூ. 13.40 லட்சம்

ஃபியர்லெஸ்/ ஃபியர்லெஸ் பர்ப்பிள்

ரூ. 12.50 லட்சம்

N.A

ரூ. 13.70 லட்சம்

ஃபியர்லெஸ் S/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் S

ரூ. 13 லட்சம்

N.A

ரூ. 14.20 லட்சம்

ஃபியர்லெஸ் +/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் +

ரூ. 13 லட்சம்

N.A

ரூ. 14.20 லட்சம்

ஃபியர்லெஸ் + S/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் + S

ரூ. 13.50 லட்சம்

N.A

ரூ. 14.70 லட்சம்

டாடா நெக்ஸான் 1.5-லிட்டர் டீசல்

வேரியன்ட்/ டிரான்ஸ்மிஷன்

MT

AMT

பியூர்

ரூ. 11 லட்சம்

N.A.

பியூர் S

ரூ. 11.50 லட்சம்

N.A.

கிரியேட்டிவ்

ரூ. 12.40 லட்சம்

ரூ. 13 லட்சம்

கிரியேட்டிவ் +

ரூ. 13.10 லட்சம்

ரூ. 13.80 லட்சம்

கிரியேட்டிவ் + S

ரூ. 13.60 லட்சம்

ரூ. 14.30 லட்சம்

ஃபியர்லெஸ்/ ஃபியர்லெஸ் பர்ப்பிள்

ரூ. 13.90 லட்சம்

ரூ. 14.60 லட்சம்

ஃபியர்லெஸ் S/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் S

ரூ. 14.40 லட்சம்

ரூ. 15 லட்சம்

ஃபியர்லெஸ் +/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் +

ரூ. 14.40 லட்சம்

ரூ. 15 லட்சம்

ஃபியர்லெஸ் + S/ ஃபியர்லெஸ் பர்ப்பிள் + S

ரூ. 14.90 லட்சம்

ரூ. 15.50 லட்சம்

பேஸ்-ஸ்பெக் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ரூ. 8.10 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, இது அதன் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பின் ஆரம்ப விலையை விட சற்று அதிகம். இருப்பினும், இந்த விலைகள் அறிமுகத்துக்கானவை விலை சில காலம் கழித்து நிச்சயமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், அனைத்து ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் பவர்டு வேரியன்ட்களின் விலையை டாடா இன்னும் வெளியிடவில்லை.

முற்றிலும் புதிய வடிவமைப்பு

2023 நெக்ஸானின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகியற்றின் வடிவமைப்பு புதிதாக இருக்கிறது. இது ஒரு கூர்மையான பானட், தொடர் LED DRL -கள் மற்றும் ஒரு சிறிய பம்பர் ஆகியவற்றை பெறுகிறது. ஹாரியர் EV கான்செப்டில் காட்டியிப்பதை போல இது செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்களை கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் பார்க்கும் போது ஒரே ஒரு பெரிய மாற்றம் மட்டுமே தெரிகிறது- புதிய 16-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள், ஆனால் பின்பக்கத்தில் கனெக்டட் டெயில் லைட்ஸ், ஒரு தட்டையான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் புதிய வடிவத்திலான பம்பர் ஆகியவற்றை பெறுகிறது.

காரின் உள்ளே, மாற்றங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏசி வென்ட்கள் போன்ற நேர்த்தியான வடிவமைப்புடன் டேஷ்போர்டு மிகவும் அழகாக இருக்கிறது. இது பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை பெறுகிறது, பெரிய சென்ட்ரல் டிஸ்ப்ளே மற்றும் சென்டர் கன்சோலில் குறைவான பிஸிக்கல் கன்ட்ரோல்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கலர் ஆப்ஷன்களுடன் பொருந்தக்கூடிய புதிய கேபின் தீம் வண்ணங்களையும் டாடா சேர்த்துள்ளது.

கூடுதல் அம்சங்கள்!

டாடா நெக்ஸான் ஏற்கனவே அதன் விலை மற்றும் பிரிவைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சிறப்பான வசதிகளுடன் கிடைத்தது. இப்போது டாடா ஒரு படி மேலே சென்றுள்ளது. புதிய அம்சங்களில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கொண்ட 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் டச்-எனபில்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும். வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை பழைய நெக்ஸானிலும் கிடைத்த வசதிகளாகும்.

மேலும் படிக்க: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸானின் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் பெறுவது இதுதான்

பயணிகளின் பாதுகாப்பிற்காக, புதிய டாடா நெக்ஸானில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ஒரு ப்ளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெறுகிறது.

அதே இன்ஜின்கள், கூடுதலான டிரான்ஸ்மிஷன்கள்

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

120PS

115PS

டார்க்

170Nm

260Nm

டிரான்ஸ்மிஷன்

5MT 6MT, 6AMT 7DCT

6MT 6AMT

பழைய நெக்ஸானில் இருந்த அதே இன்ஜின் ஆப்ஷன்களை டாடா பயன்படுத்தியுள்ளது. இருப்பினும், டர்போ-பெட்ரோல் யூனிட்டிற்கு அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு AMT இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுக்கும் பொதுவானது, மேலும் இவை பழைய நெக்ஸானிலும் இருந்தன, ஆனால் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இப்போது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடியின் ஆப்ஷனை பெறுகிறது. அத்துடன். ஓட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? எங்கள் பாருங்கள் முதல் டிரைவ் விமர்சனம் இங்கே.

போட்டியாளர்கள்

டாடா நெக்ஸான் இப்போது அதன் புதிய அவதாரத்தில் சந்தையில் மீண்டும் வந்துள்ளது, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும்

மேலும் படிக்க: நெக்ஸான் 2023 AMT

a
வெளியிட்டவர்

ansh

  • 23 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன்

கம்மெண்ட்டை இட
2 கருத்துகள்
K
kesri
Sep 14, 2023, 3:38:32 PM

what is price on road

B
bharath kumar s r
Sep 14, 2023, 1:55:10 PM

what is the price on road

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை