சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon Facelift: இதுவரை தெரிந்த மாற்றங்கள்

published on ஆகஸ்ட் 28, 2023 05:00 pm by rohit for டாடா நிக்சன்

நெக்ஸான் மிக முக்கியமான அப்டேட்டை பெற உள்ளது, இந்த புதிய மாற்றங்கள் EV பதிப்பிற்கும் பொருந்தும்.

  • 2017 ஆம் ஆண்டில் எஸ்யூவி அறிமுகமானதிலிருந்து டாடா நெக்ஸான் அதன் இரண்டாவது பெரிய அப்டேட்டை பெற உள்ளது.

  • புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யின் பல ஸ்பை புகைப்படங்கள் மெலிதான LED விளக்குகள் மற்றும் புதிய ஸ்டீயரிங் போன்ற விவரங்களை காட்டுகின்றன.

  • 360 டிகிரி கேமரா, முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவை உட்புறத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்களாகும் .

  • தற்போதைய மாடலில் உள்ள அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பெற வாய்ப்புள்ளது.

  • புதிய நெக்ஸான் டாடாவின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டையும் DCT ஆப்ஷனுடன் பெறலாம்.

  • ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) விலையில் தொடங்கும் இது அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம்.

சமீப காலங்களில் நாட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -களில் ஒன்றான டாடா நெக்ஸான் விரைவில் ஒரு பெரிய அப்டேட்டை பெற உள்ளது, இது 2020 -க்குப் பிறகு அதன் இரண்டாவது பெரிய புதுப்பிப்பாகும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஏராளமான ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காலப்போக்கில் பல்வேறு விவரங்களை நமக்கு காட்டின. அதன் அறிமுகத்தை நாம் நெருங்குகையில், 2023 ஆம் ஆண்டில் டாடா நெக்ஸானை பற்றி நாம் தெரிந்து கொண்ட அனைத்தையும் இங்கே பார்க்கலாம்:

எக்ஸ்டீரியர்

படங்களின் ஆதாரம்

சமீபத்தில், எஸ்யூவி -யின் முன்புறம் மற்றும் பின்புறம் பகுதியளவு மறைப்பு இல்லாமல் காணப்பட்டது, இது அனைத்து வடிவமைப்பு புதுப்பிப்புகளையும் வழங்குகிறது. முன்பக்கத்தில், புதிய நெக்ஸானின் புதிய LED ஹெட்லைட்கள் (இப்போது பம்பரில் செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ளது), தொடர்ச்சியான டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய கூர்மையான LED DRLகள் மற்றும் பெரிய கிரில் ஆகியவற்றை பெறுகிறது. டாடா கர்வ் மற்றும் ஹாரியர் EV கான்செப்டிலிருந்து தெளிவான ஸ்டைலிங் வடிவமைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

படங்களின் ஆதாரம்

பக்கவாட்டில் மாற்றங்கள் குறைவாகவே இருக்கும் மற்றும் புதிய அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றொரு சமீபத்திய ஸ்பை படத்தில், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் டெரியர் எந்த மறைப்பும் இல்லாமல் கேமராவில் சிக்கியது. பின்புறத்தில் உள்ள மிக முக்கியமான புதுப்பிப்புகள் டாப்பரில் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்கள், ட்வீக் செய்யப்பட்ட பம்பர் மற்றும் அதிக கவர்ச்சியான டெயில்கேட் மற்றும் உயரமான ரிஃப்ளெக்டர் ஹவுசிங்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: Tata Punch EV: சார்ஜ் செய்யும் போது முதன் முறையாக கேமராவில் சிக்கியுள்ளது

ஸ்டான்டர்டு நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்படும் அதே நேரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நெக்ஸான் EV -க்கான வடிவமைப்பு மாற்றங்களையும் டாடா கொடுக்கலாம். ஒட்டுமொத்த ஒப்பனை புதுப்பிப்புகள் இன்னும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றாலும், அது ஆல்-எலக்ட்ரிக் என்பதை வேறுபடுத்துவதற்கு சில நீல நிற டச் மற்றும் குளோஸ்டு ஆப்- பேனல்களை பெறலாம்.

இன்டீரியர்

ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸானின் சோதனையின் போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள், எஸ்யூவி -யின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் கிளீன் கேபின் அமைப்பில் வரும் என்பதைக் காட்டுகிறது. ஸ்லீக்கர் AC வென்ட்கள், கிளைமேட் கன்ட்ரோலுக்கான புதிய டச்-இன்புட் பேனல், மாற்றியமைக்கப்பட்ட இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாடா அவின்யா கான்செப்ட்டில் காணப்படுவது போல் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவை இதில் கொடுக்கப்ட்டுள்ளன.

மேலும் படிக்க: டாடா EVகளின் 1 லட்சத்தை தாண்டிய விற்பனை - நெக்ஸான் EV, டியாகோ EV மற்றும் டைகோர் EV

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் தயாரிப்பாளர் ஒரு படி மேலே சென்று சில அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம், அது இந்த வசதியை வழங்கும் முதல் சப்-4m எஸ்யூவி -யாக இதை மாற்றும்.

ஹூட்டின் கீழ் என்ன இருக்கிறது?

புதிய நெக்ஸான் தற்போதுள்ள மாடலின் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (115PS/160Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்படும். டாடா புதிய நெக்ஸானுக்கு அதன் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (125PS/225Nm) வழங்கலாம், இது DCT (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனுடன் வரலாம்.

மேலும் படிக்க: 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் எக்ஸ்டரை விட டாடா பஞ்ச் எளிதாகக் கிடைக்கும்

ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EV யின் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்டிருந்தாலும், பெரிய மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டாடா தற்போது ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி யை இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது: பிரைம் (30.2kWh பேட்டரி பேக்; 312km ARAI பயணதூர ரேஞ்ச்) மற்றும் மேக்ஸ் (40.5kWh பேட்டரி பேக்; 453km ARAI பயணதூர ரேஞ்ச்).

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் செலவு

டாடா நிறுவனம் செப்டம்பரில் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். அப்டேட்டட் எஸ்யூவி -யின் விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம், புதிய அம்சங்களைப் பெறும் ஹையர் டிரிம்களுக்கு விலை உயர்வு இருக்கலாம். டாடா நெக்ஸான் கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், மஹிந்திரா XUV300, ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட் , மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் சிட்ரோன் C3 போன்ற கிராஸ்ஓவர்களுக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: நெக்ஸான் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 28 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை