Tata Punch EV: சார்ஜ் செய்யும் போது முதன் முறையாக கேமராவில் சிக்கியுள்ளது
published on ஆகஸ்ட் 23, 2023 04:00 pm by shreyash for டாடா பன்ச் EV
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பன்ச் EV டாடாவின் ALFA (அஜைல் லைட் ஃபிளெக்ஸ்சிபிள் அட்வான்ஸ்டு) கட்டமைப்பை அடித்தளமாக கொண்ட முதலாவது மாடல் கார் ஆகும்.
-
பன்ச் EV சமீபத்தில் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்த போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
-
நெக்ஸான் EV போல இல்லாமல், இந்த பன்ச் EV -யானது முன்பக்கத்தில் சார்ஜ் போர்ட்டை கொண்டிருப்பது போல் தெரிகிறது.
-
முந்தைய புகைப்படங்களின் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட கேபின் கட்டமைப்பு மற்றும் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் அம்சத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற வாய்ப்புள்ளது, இது 350 கிமீ தூர ரேஞ்சை வழங்கும்.
-
டாடா இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தலாம்.
டாடா பன்ச் EV என்பது இந்திய கார் தயாரிப்பாளரின் புதிய மின்சார சலுகையாகும், இது டியாகோ EV மற்றும் நெக்ஸான் EV ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் இருக்கிறது. பன்ச் EV முன்பு சாலையில் தோன்றினாலும், சார்ஜ் செய்யப்படும்போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் மைக்ரோ எஸ்யூவி -யின் முன்பக்க விவரங்களை கூடுதலாக காட்டுகிறது.
புதிய விவரங்கள்
முதன்முறையாக, சார்ஜரில் இணைக்கப்பட்டிருக்கும் போது பன்ச் EV -யின் செயல்திறன் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முன்மாதிரியைப் (டெஸ்ட் மியூல்) பார்க்க முடிகிறது. நெக்ஸான் EV மற்றும் டியாகோ EV போல் இல்லாமல், இது முன்புறத்தில் சார்ஜ் போர்ட்டை கொண்டிக்கும் தோன்றுகிறது, வழக்கமான இன்லெட் இருக்கும் இடத்தில் இல்லை.
பன்ச் EV இன் முன்புறம் அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினை (ICE) போலவே இருப்பதாக தோன்றினாலும், ஏற்கனவே இருக்கும் டாடா EV -களில் நாம் பார்த்ததைப் போலவே, கிரில் மற்றும் பம்பரில் EV -குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கத்திலிருந்து பார்க்கும்போது, புரொபைல் ஆனது தற்போதைய பன்ச் மாதிரியைப் போலவே தெரிகிறது. இருப்பினும், டாடா டியாகோ மற்றும் டிகோரின் டாப் ஸ்பெக் பதிப்புகளில் காணப்படுவதை போலவே, டெஸ்ட் மியூல் வெவ்வேறு அலாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
முந்தைய புகைப்படங்களின் அடிப்படையில், பன்ச் EV புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் திருத்தப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்புடன் வரக்கூடும். இது தயாரிப்பு முடிவடையும் தருவாயில் உள்ள டாடா நெக்ஸான் பேஸ்லிப்ட் -ல் நாம் பார்த்ததை போலவே இருக்கலாம்.
இதன் அம்சங்களை பொறுத்தவரை, இது ICE மாடலை போலவே இருக்கும். இதில் டச் ஸ்கிரீன் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும். இது ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளையும் பெற்றிருக்கலாம். பன்ச் EV -யில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவையும் இருக்கலாம்.
மேலும் படிக்க: முன்பக்கம் மறைக்கப்படாமல் சாலையில் தென்பட்ட Tata Nexon Facelift
பவர்டிரெயின் விவரங்கள்
தற்போதுள்ள டாடா EV -களில் இருப்பது போலவே, பன்ச் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களையும் பெறலாம், இது 300km முதல் 350km வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. மற்ற டாடா EV -களைப் போலவே இது பல பிரேக்கிங் ரீஜெனரேஷன் மோட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் EV -க்கு கீழே அமைந்துள்ள இந்த பன்ச் EV செயல்திறன் இடைவெளியைக் குறைக்கும், இது சுமார் 100PS -ஐ உருவாக்கும்.
மேலும், பன்ச் EV ஆனது, சந்தையில் இருக்கும் மற்ற அனைத்து டாடா EV -களை போல இல்லாமல், ALFA கட்டமைப்பு கொடுக்கப்படும் முதல் மின்சார மாடல் காராக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
பன்ச் EV இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் ஆரம்ப விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இது சிட்ரோன் eC3 -க்கு நேரடி போட்டியாக இருக்கும், மேலும் இது டாடா டியாகோ EV மற்றும் MG காமட் EV ஆகியவற்றுக்கு பிரீமியமாக உள்ள மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் AMT
0 out of 0 found this helpful