இந்த மார்ச் மாதத்தில் ரூ.45,000 வரை டாடா கார் மாடல்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன
published on மார்ச் 10, 2023 07:32 pm by ansh for டாடா டியாகோ
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதன் எலக்ட்ரிக் கார் வரிசைகளுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை, என்றாலும் அதன் பெட்ரோல் மற்றும் CNG வகை கார்களுக்கு மட்டும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ஹேரியர் மற்றும் சஃபாரிக்கு மிக அதிக அளவில் ரூ.45,000 வரையிலான தள்ளுபடிகள்.
-
டியாகோ மற்றும் டிகோர் கார்கள் ரூ.28,000 வரை பலன்களைப் பெறுகின்றன.
-
நெக்ஸான் மிக குறைவான தள்ளுபடியாக ரூ.3,000 வரை பெட்ரோல் ஆப்ஷன் கார்களுக்கு மட்டும் பெறுகிறது.
-
மார்ச் மாதத்தின் இறுதி வரை மட்டுமே இந்த அனைத்து சலுகைளும் செல்லுபடியாகும்.
பிற பிராண்டுகளான ரெனால்ட் மற்றும் ஹூண்டாய் க்குப் பிறகு டாடா இந்த மார்ச்சில் அதன் மாதாந்திர சலுகைகளை அறிவித்துள்ளது. மாடல் மற்றும் கார் வகைகளைப் பொருத்து, கார் உற்பத்தியாளரான டாடா மார்ச் இறுதி வரை பணம், எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மாடல்-வாரியான தள்ளுபடிப் பட்டியலை இங்கே ஒப்பிடுங்கள்:
டியாகோ
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
அதிக பணத் தள்ளுபடியை டியாகோ வின் பெட்ரோல் வேரியண்ட்கள் பெறுகின்றன, CNG வேரியண்ட் கார்கள் அதிக அளவில் கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகிறது.
-
ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனசை அனைத்து கார்களும் பெறுகின்றன.
-
டியாகோ விலை வரம்பு 5.54 இலட்சம் முதல் ரூ 8.05 இலட்சம் வரை இருக்கிறது.
டிகோர்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
ஒரே மாதிரியான பணம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பலன்களை டிகோர் இன் அனைத்து கார்களும் பெறுகின்றன. ஆனால் CNG கார்கள் உயர் கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகின்றன.
-
டிகோர் மற்றும் டியாகோவின் பெட்ரோல் கார்களின் மீதான தள்ளுபடிகள் ஒரே மாதிரியானவை.
-
டாடா அதன் டிகோரின் விலையை ரூ.6.20 இலட்சத்தில் இருந்து ரூ.8.90 லட்சமாக நிர்ணயித்துள்ளது.
அல்ட்ராஸ்
|
|
|
|
|
|
|
|
மொத்த பலன்கள் |
|
-
இந்த சலுகைகள் DCA (இரட்டை-கிளட்ச் ஆட்டோமெட்டிக்) காரான அல்ட்ரோஸ் இன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் காருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
-
மீதியிருக்கும் கார்கள் ரூ.10,000க்கான குறைந்த பணத் தள்ளுபடியைப் பெறுகின்றன.
-
அனைத்து கார் வேரியண்ட்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஒரே மாதிரியானவை
-
அல்ட்ரோஸ் ரூ. 6.45 இலட்சம் முதல் ரூ. 10.40 இலட்சம் வரை விலையில் கிடைக்கிறது.
ஹாரியர்
|
|
|
|
|
|
|
|
- |
|
|
|
|
|
|
|
|
|
-
BS6 பேஸ் 1 யூனிட்டுகள் கொண்ட ஹாரியர் ரூ.10,000க்கான பணத் தள்ளுபடியைப் பெறுகிறது. BS6 பேஸ் 2 யூனிட்டுகள் எந்த பணத் தள்ளுபடியையும் பெறவில்லை.
-
அனைத்து கார்வகைகளும் ஒரே மாதிரியான எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்ப்பரேட் பலன்களைப் பெறுகின்றன.
-
ஹாரியர் ரூ.15 இலட்சம் முதல் ரூ.24.07 இலட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடாஸ் மற்றும் 10.25 அங்குல தகவல்போக்கு அமைப்பு தொடுதிரை யூனிட்டுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க: டாடா SUVகளின் ரெட் டார்க் எடிஷன்கள் இதோ
சஃபாரி
|
|
|
|
|
|
|
|
- |
|
|
|
|
|
|
|
|
|
-
சஃபாரி ஹாரியரின் அதே தள்ளுபடிகளையே பெறுகிறது , பழைய BS6 பேஸ் 1 யூனிட்டுகள் கூடுதல் பணத் தள்ளுபடிகளைப் பெறுகிறது.
-
இதன் விலை ரூ.15.65 இலட்சம் முதல் ரூ.25.02 இலட்சம் வரை உள்ளது. ஹாரியர் போன்றே சஃபாரி யும் அம்சங்களின் புதுப்பித்தல்களைப் பெறுகிறது.
நெக்ஸான்
|
|
|
|
|
|
-
நெக்ஸான் அதன் பெட்ரோல் கார்களுக்கு ரூ.3000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடியை மட்டுமே பெறுகிறது.
-
இதன் விலை ரூ.7.80 இலட்சம் முதல் ரூ.14.35 இலட்சம் வரை உள்ளது.
அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்-க்கானவை.
மேலும் பார்க்கவும்: தோற்றப்பொலிவுள்ள டாடா நெக்சான்-இன் முன்புற புரொஃபைல் புதிய ஸ்பை ஷாட்டுகளின் மூலம் காணக்கிடைக்கிறது
குறிப்பு: இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் இருப்பிடம் மற்றும் கார் வகைகளின் அடிப்படையில் மாறுபடும். நீங்கள் தேர்ந்தெடுத்த மாடலைப் பற்றி கூடுதல் தகவலைப் பெற, உங்களுக்கு அருகிலுள்ள டாடா டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
மேலும் படிக்கவும்: டியாகோ AMT
0 out of 0 found this helpful