Tata Altroz Racer மற்றும் Hyundai i20 N Line மற்றும் Maruti Fronx: கார்களின் விவரங்கள் ஒப்பீடு
published on ஜூன் 20, 2024 06:28 pm by shreyash for tata altroz racer
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் i20 N லைன் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதற்கிடையில் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் தற்போதைக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே கொண்டுள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆல்ட்ரோஸ் வரிசையின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பாக இன்னும் தனித்து தெரிகிறது. மேலும் ஹூண்டாய் i20 N லைன் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. அது மட்டுமல்ல டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் மாருதி ஃபிரான்க்ஸ் காருக்கு ஒரு மாற்றாகவும் இருக்கிறது. குறிப்பாக அதன் டர்போ-பெட்ரோல் வெர்ஷனில். பேப்பரில் உள்ள விவரங்களில் அடிப்படையில் இந்த மாடல்கள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதை ஆராய்வோம்.
விலை
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் |
ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.52 லட்சம் |
ரூ.9.73 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் (டர்போ-பெட்ரோல்) |
-
ஆல்ட்ரோஸ் ரேசர் இங்கே மிகக் குறைந்த ஆரம்ப விலையை கொண்டுள்ளது. மேலும் இது ஃபிரான்க்ஸ் -ன் என்ட்ரி-நிலை டர்போ-பெட்ரோல் வேரியன்ட் ரூ.24,000 குறைவாகும்.
-
டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக், i20 N லைனின் பேஸ்-ஸ்பெக் N6 வேரியன்ட்டை விட ரூ.50,000 குறைவாகும்.
பரிமாணங்கள்
மாடல்கள் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
நீளம் |
3990 மி.மீ |
3995 மி.மீ |
3995 மி.மீ |
அகலம் |
1755 மி.மீ |
1775 மி.மீ |
1765 மி.மீ |
உயரம் |
1523 மி.மீ |
1505 மி.மீ |
1550 மி.மீ |
வீல்பேஸ் |
2501 மி.மீ |
2580 மி.மீ |
2520 மி.மீ |
-
அளவுகளை பொறுத்தவரை டாடா ஆல்ட்ரோஸ் ரேசர், ஹூண்டாய் i20 N லைன் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் இரண்டையும் விட கிட்டத்தட்ட எல்லா வேரியன்ட்களிலும் சிறியது. இருப்பினும் இது i20 N லைனை விட 18 மி.மீ உயரமானது.
-
சப் காம்பாக்ட் கிராஸ்ஓவராக இருப்பதால் இந்த ஒப்பீட்டில் ஃபிரான்க்ஸ் தான் மிக உயரமானது. மேலும் மூன்றிலும் i20 N லைன் அகலமானது.
-
i20 N லைன் மற்றும் ஃபிரான்க்ஸ் இரண்டும் நீளத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஃபிரான்க்ஸை விட N லைன் இன்னும் நீண்ட வீல்பேஸை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் மற்றும் ஹூண்டாய் i20 N லைன்: விலை ஒப்பீடு
பவர்டிரெயின்கள்
மாடல்கள் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
120 PS |
120 PS |
100 பி.எஸ் |
டார்க் |
170 Nm |
172 Nm |
148 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
*DCT- டூயல் - கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
-
i20 N லைன் மற்றும் ஃபிரான்க்ஸின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஆல்ட்ரோஸ் ரேசர் பெரிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜ்னை கொண்டுள்ளது.
-
டாடா மற்றும் ஹூண்டாய் ஹேட்ச்பேக்குகள் இரண்டும் சமமான பவர் கொண்டவை மற்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளன.
-
மறுபுறம் மாருதி ஃபிரான்க்ஸ் டர்போ அல்ட்ராஸ் ரேசர் மற்றும் i20 N லைன் இரண்டையும் விட 20 PS குறைவான சக்தி வாய்ந்தது. மேலும் இது இரண்டு ஹேட்ச்பேக்குகளையும் விட குறைவான டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளது.
-
இருப்பினும் ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இதற்கிடையில் i20 N லைன் மற்றும் ஃபிரான்க்ஸ் ஆகியவை முறையே 7-ஸ்பீடு DCT மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டரை பெறுகின்றன.
வசதிகள்
வசதிகள் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 N லைன் |
மாருதி ஃபிரான்க்ஸ் |
வெளிப்புறம் |
|
|
|
உட்புறம் |
|
|
|
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
|
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
|
பாதுகாப்பு |
|
|
|
-
நீங்கள் குறிப்பாக ஒரு டர்போ-பெட்ரோல் மாடலை தேடுகிறீர்களானால் ஆல்ட்ரோஸ் ரேசர் இங்கே மிகவும் வசதிகள் நிறைந்த மாடலாகும். இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் போன்ற வசதிகளுடன் வருகிறது.
-
i20 N லைன் மற்றும் ஃபிரான்க்ஸ் ஆகியவை வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் கொடுக்கப்படவில்லை, அதே நேரத்தில் ஃபிரான்க்ஸ் காரில் சன்ரூஃப் கிடைக்கவில்லை.
-
மாருதியின் சப்காம்பாக்ட் கிராஸ்ஓவர் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது ஸ்பீடு, ஆர்பிஎம், சராசரி மைலேஜ் மற்றும் பல போன்ற தகவல்களைக் காட்டுகிறது. இந்த வசதி ஆல்ட்ரோஸ் ரேசர் மற்றும் ஃபிரான்க்ஸ் இரண்டிலும் இல்லை.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை i20 N லைன் மற்றும் ஆல்ட்ரோஸ் ரேசர் ஆகிய இரண்டும் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. மேலும் ஃபிரான்க்ஸ் அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் 6 ஏர்பேக்குகளை மட்டுமே வழங்குகிறது.
-
ஆல்ட்ரோஸ் ரேசர் மற்றும் ஃபிரான்க்ஸ் ஆகியவை i20 N லைனில் 360 டிகிரி கேமராவை கொண்டுள்ளன. ஆல்ட்ரோஸ் ரேசரில் ஃபிரான்க்ஸில் இல்லாத பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரையும் கொண்டுள்ளது.
முக்கியமான விஷயங்கள்
நீங்கள் வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை அதைத் தவிர்க்கத் தயாராக இருந்தால் ஆல்ட்ரோஸ் ரேசர் ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய பவர்ஃபுல்லான பெட்ரோல் ஹேட்ச்பேக்கை நீங்கள் விரும்பினால் i20 N லைன் இங்கே சிறந்த தேர்வாக இருக்கும். இருப்பினும் i20 N லைனில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற சில பிரீமியம் வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் எஸ்யூவி வடிவத்தில் டர்போ-பெட்ரோல் இன்ஜினை நீங்கள் விரும்பினால் ஃபிரான்க்ஸ் காரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ரேசர் ஆன்ரோடு விலை
0 out of 0 found this helpful