• English
    • Login / Register

    Tata ஆல்ட்ரோஸ் ​​ரேசர் காரின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது

    tata altroz racer க்காக ஜூன் 03, 2024 08:36 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 47 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது ஸ்டாண்டர்டான மாடலில் இருந்து வேறுபடுத்துவதற்காக உள்ளேயும் வெளியேயும் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வரும்.

    Tata Altroz Racer launch on June 7

    • ஆல்ட்ரோஸ் ரேசருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆன்லைனிலும் டாடாவின் டீலர்ஷிப்களிலும் தொடங்கியுள்ளன.

    • டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் மற்றும் ‘ரேசர்’ கிராபிக்ஸ் போன்ற புதிய ஸ்டைலிங் எலமென்ட்களை பெறலாம்.

    • 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.

    • நெக்ஸானில் இருந்து அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்; 6-ஸ்பீடு MT மட்டும் பெறலாம்.

    • விலை ரூ. 10 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

    சிறிது நேரத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டது டாடா அல்ட்ரோஸ் ரேசர், கார் தயாரிப்பாளர் இப்போது ஸ்போர்டியர் பதிப்பு என்று வெளிப்படுத்தியுள்ளது டாடா ஆல்ட்ரோஸ் ஜூன் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஆல்ட்ரோஸ் ​​ரேசரை பற்றி முதலில் கேள்விப்பட்டோம் அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் இதன் ஷோகேஸ் செய்யப்பட்ட பதிப்பில் இருந்தது. இதன் வெளியீட்டிற்கு முன்னதாக அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்கள் இங்கே:

    டாடா ஆல்ட்ரோஸ் ​​ஆல் (@tataaltrozofficial) ஷேர் செய்யப்பட்ட பதிவு

    மேம்படுத்தப்பட்ட தோற்றம்

    Tata Altroz Racer

    வடிவமைப்பு ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் காரின் வடிவமைப்பைப் போலவே இருக்கும். அதே வேளையில் ரேசர் இதன் ஸ்போர்ட்டியர் தன்மையை சேர்க்க சில ஸ்டைலிங் அப்டேட்களை பெறும். வெளிப்புற மாற்றங்களில் புதிய கிரில், டூயல்-டிப் எக்ஸாஸ்ட், பிளாக்-அவுட் அலாய் வீல்கள், ஹூட்டிலிருந்து ரூஃபின் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ள டூயல் வொயிட் லைன்ஸ் மற்றும் முன் ஃபெண்டர்களில் 'ரேசர்' பேட்ஜ் ஆகியவை கொடுக்கப்டலாம்.

    கேபின் மற்றும் வசதி அப்டேட்கள்

    Tata Altroz Racer cabin

    இது கேபின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் டாடா தரமான மாடலில் இருந்து தனித்து அமைக்க 'ரேசர்' கிராபிக்ஸ் உடன் பிளாக் நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரியை வழங்கலாம். இது அப்ஹோல்ஸ்டரியில் மாறுபட்ட ஆரஞ்சு கலர் ஸ்டிச் மற்றும் ஆரஞ்சு ஆம்பியன்ட் லைட்ஸ் கொண்டிருக்கும்.

    ஆல்ட்ரோஸ் ​​ரேசர் வழக்கமான ஆல்ட்ரோஸ் ​​-ஐ விட சில புதிய வசதிகளை பெறும். இதில் பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 7 -இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இதன் பாதுகாப்பு -க்கான 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் ஆகியவை இருக்கும்.

    மேலும் பார்க்க: Tata Curvv மீண்டும் சாலையில் தென்பட்டது, கனெக்டட் LED டெயில் லைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது

    பவர்டிரெய்ன் விவரங்கள்

    டாடா ஆல்ட்ரோஸ் ரேசருக்கு நெக்ஸான் அதே 120 PS/170 Nm 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை வழங்கும் அறிமுகத்தின் போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும். ஆட்டோமெட்டிக் பதிப்புக்கான சாத்தியம் குறித்த விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரே நேரடி போட்டியாளர் ஹூண்டாய் i20 N லைன் ஆகும்.

    மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ​​ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Tata ஆல்டரோஸ் Racer

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience