சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Tata Altroz Racer, காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்

published on மே 14, 2024 05:49 pm by shreyash for tata altroz racer

ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆனது நெக்ஸான் காரில் உள்ள 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரக்கூடும், இது 120 PS அவுட்புட்டை கொடுக்கும்.

  • ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​உடன் ஒப்பிடும் போது இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படும்.

  • ஆல்ட்ரோஸ் ரேசர் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானிலிருந்து 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனையும் பெறலாம்.

  • பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற புதிய வசதிகள் சேர்க்கப்படலாம்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இருக்கும்.

  • விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஆல்ட்ரோஸ் கார் ஜூன் தொடக்கத்தில் ஆல்ட்ரோஸ் ரேசர் என்ற ஸ்போர்ட்டியர் வெர்ஷனை பெற தயாராக உள்ளது. இருப்பினும் கடந்த முறை டாடா JTP பேட்ஜுடன் ஸ்போர்ட்டி வேரியன்ட்களை கொண்டு வந்ததைப் போல இல்லாமல் இது பெரும்பாலும் தோற்றம் மற்றும் வசதிகளை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆல்ட்ரோஸ் ரேசர் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 நிகழ்விலும் அதன் மிக சமீபத்திய தோற்றத்தை பார்க்க முடிந்தது. அதன் ஸ்போர்ட்டியர் ஸ்டைலிங் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன், ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஹூண்டாய் i20 N லைனுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும். ஆல்ட்ரோஸ் ரேசரின் காரில் இருந்து என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்கள் இங்கே.

ஸ்போர்ட்டியர் ஸ்டைலிங் எலமென்ட்கள்

ஆல்ட்ரோஸ் ​​ரேசர் காரின் உண்மையான பாடி வொர்க்கில் எந்த வடிவமைப்பு மாற்றங்களும் செய்யப்படாது. ஆனால் வழக்கமான பதிப்போடு ஒப்பிடும்போது அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்தும் ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டிருக்கும். 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட அதன் கான்செப்ட் பதிப்பின் அடிப்படையில் இது மெஷ் போன்ற வடிவத்துடன் புதிய கிரில் மற்றும் 16-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்களை பெறும்.

ஆல்ட்ரோஸ் ​​ரேசர் கான்செப்ட் ஸ்போர்ட்டியான ஆரஞ்ச் கலரில் பேட்டையில் இருந்து கூரையின் இறுதி வரை டூயல் வொயிட் லைன்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் தயாரிப்பு பதிப்பிலும் இதேபோன்ற பாடி கிராபிக்ஸை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கேபின் அப்டேட்கள்

உள்ளே ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆனது பிளாக் கலர் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய ஆல்-பிளாக் டாஷ்போர்டை கொண்டிருக்கும். இது டேஷ்போர்டை சுற்றி தீம்டு லைட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் டாக் மற்றும் ஃபுட்வெல் ஆகியவற்றைப் பெறும். சீட்கள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை ஸ்போர்ட்டியர் தோற்றத்துக்காக கான்ட்ராஸ்ட் ஸ்டிச்களை பெறும்.

புதிய வசதிகள் கிடைக்குமா ?

ஆல்ட்ரோஸ் ரேசர் வழக்கமான ஹேட்ச்பேக்கின் கூடுதல் வசதிகளுடன் வரும். வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி உடன் கூடிய பெரிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டிரைவருக்கான அப்டேட்டட் 7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகள் இருக்கும்.

ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமராவை உள்ளடக்கியதாக அப்டேட் செய்யப்படும்.

அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல்

ஆல்ட்ரோஸ் ரேசர் நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

120 PS

டார்க்

170 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது)

வழக்கமான ஆல்ட்ரோஸ் ​​உடன் ஒப்பிடும்போது ​​ரேசர் பதிப்பில் ஸ்டாண்டர்டான 5-ஸ்பீடு மேனுவலுக்கு பதிலாக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இடம்பெறும். வழக்கமான ஆல்ட்ரோஸ் ​​உடன் வழங்கப்படும் 6-ஸ்பீடு DCT -க்கு மாறாக, 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனுடன் ஆல்ட்ரோஸ் ​​ரேசரை டாடா வழங்கலாம் .

டாடா ஏற்கனவே ஆல்ட்ரோஸ் ஐ-டர்போ என்ற டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டில் ஹேட்ச்பேக்கை வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் (110 PS / 140 Nm) பயன்படுத்துகிறது. ஆல்ட்ரோஸ் ​​i-Turbo குறைவான விலையில் ரேசர் பதிப்புடன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை

டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. க்கு இது ஹூண்டாய் i20 N லைன் -க்கு நேரடி போட்டியாக இருக்கும்

மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ​​ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 64 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Tata ஆல்டரோஸ் Racer

Read Full News

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை