• English
  • Login / Register

Tata Altroz ​​Racer என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் சிறப்பை இந்தப் புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

published on ஜூன் 12, 2024 08:25 pm by shreyash for tata altroz racer

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக இருந்தாலும், அல்ட்ரோஸ் ​​R1 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது

ஹூண்டாய் i20 N லைனுக்கு நேரடி போட்டியாளராக உள்ள டாடா அல்ட்ரோஸ் ரேசர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது புதிய ஸ்டைலிங் கூறுகள் மற்றும் கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. டாடா R1, R2 மற்றும் R3 ஆகிய மூன்று வேரியன்ட்களில் ஸ்போர்ட்டியர் அல்ட்ரோஸை வழங்குகிறது. இந்த டைனமிக் ஹேட்ச்பேக்கின் என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை அதன் படங்களின் மூலம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:

முன்புறம்

ஆல்ட்ரோஸ் ரேசரின் என்ட்ரி லெவல் R1 வேரியன்ட் அதன் தோற்றம் டாப்-ஸ்பெக் மாடல்களைப் போலவே உள்ளது, அதே ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஃப்ரண்ட் ஃபாக் லாம்ப்கள் மற்றும் LED DRL-கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 360 டிகிரி கேமரா அமைப்பிற்கான ஃப்ரண்ட்-கிரில் பொருத்தப்பட்ட கேமரா இதில் இடம்பெறவில்லை.

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டு தோற்றத்தைப் பொறுத்தவரை, ஆல்ட்ரோஸ் ரேசர் R1 ஆனது, டாப்-ஸ்பெக் R2 மற்றும் R3 வேரியன்ட்களின் நேர்த்தியான தோற்றத்தைப் போலவே, பிளாக்-அவுட் பில்லர்கள் மற்றும் ஜன்னல்களில் கோடுகளைக் கொண்டுள்ளது. இது 16-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் பிளாக்-அவுட் OVRM-கள் (அவுட் சைட் ரியர் வியூ மிரர்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிலையான ஆல்ட்ரோஸிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, முன் ஃபெண்டர்களில் 'ரேசர்' பேட்ஜிங் முக்கியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: Tata Altroz ​​Racer R1 மற்றும் Hyundai i20 N Line N6: விவரங்கள் ஒப்பீடு

ஆல்ட்ரோஸ் ரேசர் R1 , இரட்டை வெள்ளை நிற கோடுகளுடன் கூடிய கருப்பு நிற ஹூட்டையை பெறுகிறது, இந்த வெள்ளைக் கோடுகள் ஹூட்டிலிருந்து ரூஃபின் இறுதி வரை செல்கிறது, அதன் வடிவமைப்பிற்கு இது ஸ்போர்ட்டியர்  டச்சை சேர்க்கிறது.

பின்பக்கம்

ஒரு என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக இருந்தபோதிலும், ஆல்ட்ரோஸ் ரேசர் R1 ஆனது பின்புற டிஃபாக்கர் மற்றும் வாஷருடன் கூடிய ரியர் வைப்பர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது ஹேட்ச்பேக்கின் ‘ரேசர்’ வெர்ஷனுக்கு பிரத்யேகமாக நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்லரையும் கொண்டுள்ளது. கூடுதலாக, இது டூயல்-டிப் எக்ஸாஸ்டுடன் வருகிறது, இது ஹேட்ச்பேக்கின் வழக்கமான வெர்ஷனோடு ஒப்பிடும்போது ஸ்போர்ட்டியர் உணர்வை வழங்குகிறது.

ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் டெயில்கேட்டில் ஒரு ‘ஐ-டர்போ+’ பேட்ஜையும் பெறுகிறது, இது முன்னர் கிடைத்த ஆல்ட்ரோஸ் ​​ஐ-டர்போவின் மிகவும் சக்திவாய்ந்த வெர்ஷன் என்பதை இது குறிக்கிறது.

உட்புறம்

மறுப்பு: படத்தில் காட்டப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாடா அல்ட்ரோஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 மற்றும் டாப்-ஸ்பெக் R3 மாடல்களில் மட்டுமே கிடைக்கும். இது என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் உபகரணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

ஆல்ட்ரோஸ் ரேசரின் என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் கேபின் அதன் டாப்-ஸ்பெக் மாடல்களுடன் ஒத்திருக்கிறது. அல்ட்ராஸ் ரேசரின் R1 ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது.

பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்போர்டில் ஆரஞ்சு சுற்றுப்புற விளக்குகள் போன்ற வசதிகளுடன் இது வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் EBD உடன் ABS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், சன்ரூஃப், பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா மற்றும் 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை என்ட்ரி-லெவல் R1 வேரியன்ட் இழக்கிறது.

ஒரு என்ட்ரி லெவல் டிரிம்மாக இருந்தாலும் கூட, அல்ட்ரோஸ் ரேசர் R1 ஆனது லெதரெட் சீட்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் முன் ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது. இருப்பினும், அணைத்து வசதிகளையும் கொண்ட R3 வேரியன்ட்டில் கிடைக்கக்கூடிய காற்றோட்டமான முன் சீட்கள் இதில் இல்லை.

பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆனது 120 PS மற்றும் 170 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, இது டாடா நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது தற்போது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது, இருப்பினும் எதிர்காலத்தில் ஆல்ட்ரோஸ் ​​ரேசருக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை டாடா வழங்கலாம்.

விலை

அல்ட்ராஸ் ரேசரின் என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் விலை ரூ. 10.49 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா). இது நேரடியாக ஹூண்டாய் i20 N லைனின் N6 வேரியன்ட்டுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: டாடா அல்ட்ரோஸ் ரேசரின் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Tata ஆல்டரோஸ் Racer

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience