சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 15, 2024 04:51 pm by rohit for skoda sub 4 meter suv

ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.

  • இது குஷாக்கின் MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

  • சமீபத்திய ஸ்பை ஷாட்கள் எஸ்யூவியின் ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் வழக்கமான பட்டர்பிஃளை கிரில் இருப்பதை காட்டுகின்றன.

  • இன்ட்டீரியரை பொறுத்தவரையில் குஷாக் போன்ற ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் கிடைக்கும்.

  • மேலும் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இது வெளியிடப்படலாம்; விலை ரூ.8.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஏற்கனவே இது இரண்டு முறை கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவியின் மற்றொரு படத்தொகுப்பு இப்போது எங்களுக்கு கிடைத்துள்ளது.

ஸ்பை ஷாட்கள் எதைக் காட்டுகின்றன?

சமீபத்திய படங்களின் தொகுப்பில் எஸ்யூவி இன்னும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. எஸ்யூவி -யின் முன்பக்கத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள டர்ன் இண்டிகேட்டர்களாக செயல்படும் மல்டி-ஃபங்க்ஷன் எல்இடி டிஆர்எல்களுடன் அதன் ஸ்பிளிட் ஹெட்லைட்களை நாம் கவனிக்க முடியும். ஸ்கோடா ஒரு நேர்த்தியான பட்டர்ஃபிளை கிரில் மற்றும் பம்பரின் கீழ் பகுதியில் ஹனிகோம்ப் வடிவத்துடன் கூடிய பெரிய ஏர் டேம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற குறிப்பிடத்தக்க பிட்களில் பிளாக்டு வீல் கவர்களுடன் இருந்தது. ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்கள் இது லோவர் வேரியன்ட் என்பதை காட்டுகின்றன.

கவனிக்கப்பட்ட கேபின் விவரங்கள்

சமீபத்திய ஸ்பை ஷாட்கள் புதிய ஸ்கோடா எஸ்யூவியின் உட்புறத்தைப் பற்றிய விரிவான தோற்றத்தைக் கொடுக்கவில்லை. என்றாலும் கூட டச் ஸ்கிரீன் (10-இன்ச் யூனிட்) மற்றும் குஷாக் காரில் இருக்கும் ஸ்டீயரிங் வீல் போன்று இருக்கலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட்டை பொறுத்தவரை ஸ்கோடா எஸ்யூவி வென்டிலேட்டட் முன் இருக்கைகள், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை ஸ்கோடா வழங்கலாம்.

மேலும் பார்க்க: சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Tata Curvv, காரில் புதிய பாதுகாப்பு வசதி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது

ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி -க்கான ஒற்றை இன்ஜின்

புதிய இந்தியாவை மையமாகக் கொண்ட ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி குஷாக் காம்பாக்ட் எஸ்யூவியில் இருந்து சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் (115 PS/178 Nm) மட்டுமே வரும் என்று நம்புகிறோம். இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷனை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

விலை எவ்வளவு இருக்கும் ?

ஸ்கோடாவின் சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் மார்ச் 2025 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம். மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மற்றும் வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV300 (மஹிந்திரா XUV 3XO) ஆகியவற்றுடன் போட்டியிடும். இந்த ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் சப்-4m கிராஸ்ஓவர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.

r
வெளியிட்டவர்

rohit

  • 96 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஸ்கோடா Sub 4 Meter எஸ்யூவி

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை