சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Tata Curvv, காரில் புதிய பாதுகாப்பு வசதி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது

modified on ஏப்ரல் 10, 2024 06:05 pm by shreyash for டாடா curvv

  • 88 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா கர்வ்வ் காரில் புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினை டாடா அறிமுகப்படுத்தும். அதே நேரத்தில் நெக்ஸானின் டீசல் பவர்டிரெய்னையும் தொடர்ந்து பயன்படுத்தும்.

Tata Curvv Rear Spy Shot

  • சமீபத்திய ஸ்பை ஷாட் டாடா கர்வ்வில் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் கொடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற வசதிகளை கொண்டதாக இருக்கும்.

  • 125 PS 1.2 லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) மற்றும் 115 PS 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படலாம்.

  • விலை ரூ.11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் அடுத்த பெரிய அறிமுகமாக டாடா கர்வ்வ் இருக்கப் போகின்றது. இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி -களுடன் போட்டியிடும். கர்வ்வ் ஒரு கூபே எஸ்யூவி பாடி ஸ்டைலை கொண்டுள்ளது. டாடாவின் சமீபத்திய வடிவமைப்பையும் இது கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா எஸ்யூவி -களில் பார்க்க முடியும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம். அதற்கு முன்னதாக இப்போது டாடா கர்வ்வ் சாலையில் சோதனை செய்யப்படுவதை பார்க்க முடிகின்றது. இப்போது சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மூலமாக  எங்களுக்கு தெரிந்த விவரங்கள் இங்கே.

பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் வசதியை கர்வ்வ் பெறக்கூடும்

Tata Curvv with blind spot detection

மேலே உள்ள ஸ்பை ஷாட், காரில் வெளிப்புற பின்புறக் காட்சி கண்ணாடியில் (ORVM) ஒரு சிறிய விளக்கில் எச்சரிக்கை ஒளியைக் பார்க்க முடிகின்றது. இது கர்வ்வ் ஒரு பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் வசதியுடன் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளை உள்ளடக்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் ஒரு ஒரு பகுதியாக இது இருக்கலாம்.

கர்வ்வ் -ன் சோதனைக் கார் இன்னும் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் கூபே ரூஃப்லைன் மற்றும் ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்கள் போன்ற விவரங்கள் ஏற்கெனவே தெரிய வந்துள்ளன.

மேலும் பார்க்க: இந்த ஏப்ரலில் MG Comet EV -யை விட Tata Tiago EV அதிக காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது

கேபின் & எதிர்பார்க்கப்படும் வசதிகள்

Tata Curvv cabin

கர்வ்வ் -ன் உட்புறம் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றாலும் கூட இது நெக்ஸான் காரில் இருப்பதை போன்ற டேஷ்போர்டு தீமை பகிர்ந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 -ல் கர்வ்வ் ஆனது ஹாரியர் போன்ற 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் காணப்பட்டது. இது ஒரு இல்லுமினேட்டட் டாடா லோகோவையும் கொண்டிருக்கலாம்.

டாடா கர்வ்வ் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC) ஆகியவை அடங்கும்.

கர்வ்வ் -க்கான இன்ஜின் ஆப்ஷன்கள்

கர்வ்வ், டாடா-வின் புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்) இன்ஜினுடன் வரக்கூடும். அதே நேரத்தில் டாடா நெக்ஸானிலிருந்து டீசல் பவர்டிரெய்னையும் கடன் வாங்கக்கூடும். தயாரிப்புக்கு தயாராக உள்ள எஸ்யூவி -க்கான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கீழே உள்ள ஆப்ஷன்கள் கிடைக்கலாம்:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

125 PS

115 PS

டார்க்

225 Nm

260 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT 7-ஸ்பீடு DCT* (எதிர்பார்க்கப்படுகிறது)

6-வேக MT

*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

டாடா கர்வ்வ் காரின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பான கர்வ்வ் EV -யும் அறிமுகமாகவுள்ளது. மேலும் இது 500 கிமீ வரை உரிமை கோரப்பட்ட டிரைவிங் ரேஞ்சை வழங்கக்கூடியது. பற்றி மேலும் அறிய நீங்கள்  டாடா கர்வ்வ் EV இங்கு செல்லலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை & போட்டி

டாடா கர்வ்வ் -ன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். இது ஹூண்டாய்  கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர்,மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். மேலும் அண்மையில் அறிமுகமாக சிட்ரோன் பாசால்ட் விஷன் காருடனும் போட்டியிடலாம்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா curvv

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience