2023 Tata Nexon Facelift காரின் விலை விவரங்கள் நாளை வெளியாகவுள்ளன
ansh ஆல் செப் 13, 2023 07:10 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
2023 நெக்ஸான் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தக்கவைத்துள்ளது
-
கூர்மையான தோற்றம் கொண்ட முன்பக்க அமைப்பு, புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட டெயில் லேம்புகள் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
அதிக செங்குத்து எலெமென்ட்களுடன் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட கேபினுடன் வருகிறது.
-
இது 10.25 -இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, 10.25-இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
-
இரு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும்: 115PS, 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 120PS, 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்
-
விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்)இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 டாடா நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் கார் நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட இந்த எஸ்யூவி புதிய தோற்றம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உட்புறங்கள் மற்றும் அதன் அம்ச பட்டியலில் நிறைய கூடுதல் உபகரணங்களை பெறுகிறது. அதன் ஆர்டர் புத்தகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன, மேலும் இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ.
நவீன வடிவமைப்பு
இந்த ஃபேஸ்லிஃப்ட்டை தலைமுறை புதுப்பிப்பு போல காண்பிக்க டாடா நீண்ட தூரம் சென்றுள்ளது. இது ஹாரியர் EV கான்செப்டிலிருந்து பெறப்பட்ட கூர்மையான பானெட், தொடர்ச்சியான LED DRL -கள்,செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்டுகள் மற்றும் மென்மையான பம்பர் ஆகியவற்றுடன் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்கத்தை பெறுகிறது.
ஏரோடைமிக் முறையில் வடிமைக்கப்பட்ட புதிய 16-இன்ச் அலாய் வீல்கள் தவிர, பக்கவாட்டு தோற்றம் கிட்டத்தட்ட அதே மாதிரிதான் உள்ளது. இருப்பினும், முன்பக்கத்தைப் போலவே பின்புறமும் நிறைய மாற்றப்பட்டுள்ளது. இங்கே மிக முக்கியமான அம்சம் இணைக்கப்பட்ட டெயில் லேம்ப் அமைப்பு ஆகும், மேலும் இது ஒரு ஃப்ளாட்டர் ஃபினிஷ் மற்றும் புதிய வடிவிலான பம்பரையும் பெறுகிறது.
புதுப்பிக்கப்பட்ட கேபின்
வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டு முந்தைய வளைந்த வடிவமைப்பை விட நேராகத் தெரிகிறது. இந்த புதிய கேபினின் சிறப்பம்சமாக பெரிய சென்ட்ரல் டிஸ்ப்ளே, சென்டர் கன்சோலில் குறைவான ஃபிசிக்கல் கன்ட்ரோல்கள் மற்றும் பேக்லிட் டாடா லோகோவுடன் கூடிய புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன. இது ஒரு புதிய கேபின் தீம் வண்ணங்களையும் பெறுகிறது (தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய வண்ண விருப்பங்களுடன் பொருந்துகிறது) இது இருக்கைகளிலும் இந்த வண்ணங்கள் இருக்கும்.
புதிய அம்சங்கள்
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் டச் எனபில்டு கொண்ட கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை நெக்ஸான் காரில் உள்ளன. வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பிற அம்சங்கள் முந்தைய நெக்ஸான் காரிலிருந்து தக்கவைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூவை விட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் -டில் கிடைக்கும் கூடுதலான 7 அம்சங்கள்
பாதுகாப்பை பொறுத்தவரை, ஸ்டாண்டர்டான 6 ஏர்பேக்குகள், EBD யுடன் கூடிய ABS , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
அதே பவர்டிரெயின்
டாடா நெக்ஸானின் வடிவமைப்பு மற்றும் அம்ச பட்டியலில் புதுப்பிப்புகளை செய்திருந்தாலும், இன்ஜின் ஆப்ஷன்கள் இன்னும் அப்படியே உள்ளன. இது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 115PS மற்றும் 260Nm) மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (120PS மற்றும் 170Nm) உடன் வருகிறது.
மேலும் படிக்க: Tata Nexon Facelift -ன் கார் வேரியன்ட் வாரியான பவர்டிரெயின்கள், கலர் ஆப்ஷன்கள் இங்கே
டீசல் இன்ஜின் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு AMT தேர்வுகளும், டர்போ-பெட்ரோல் யூனிட்டில் இப்போது 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் , 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCT ஆகிய நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலை & போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரக்கூடும் மேலும் இது ரூ 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா சொனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: நெக்ஸான் AMT