புதிய Maruti Swift இந்தியாவில் வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
மாருதி ஸ்விப்ட் க்காக மே 02, 2024 05:04 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 71 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய மாருதி ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ரூ.11,000 -க்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
-
புதிய ஸ்விஃப்ட் ஆனது மேம்படுத்தப்பட்ட கிரில், ஷார்ப்பான லைட்டிங் செட்டப் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வருகின்றது.
-
கேபினில் இப்போது பெரிய 9-இன்ச் டச் ஸ்கிரீன், அப்டேட்டட் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் நேர்த்தியான ஏசி வென்ட்கள் உள்ளன.
-
ஆட்டோ ஏசி, 6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய மற்ற வசதிகள் இருக்கலாம்.
-
புதிய 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்; 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ. 6.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
நான்காம் தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மே 9, 2024 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாருதி சமீபத்தில் ஆன்லைனிலும் அதன் டீலர்ஷிப்களிலும் ரூ.11,000 -க்கு புதிய ஹேட்ச்பேக்கிற்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. பிரபலமான மாருதி ஹேட்ச்பேக்கை வாங்க திட்டமிட்டிருந்தால் அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வடிவமைப்பு விவரங்கள்
புதிய ஸ்விஃப்ட்டை பார்த்தாலே போதும் இதன் வடிவமைப்பு பழைய மாடலின் பரிணாம வளர்ச்சியாக இருப்பதால் உடனடியாக அடையாளம் காண முடியும். வெளிப்புறத்தில் மெஷ் பேட்டர்னுடன் கூடிய ஓவல் வடிவ கிரில், ஷார்ப்பான LED ஹெட்லைட்கள் மற்றும் எல் வடிவ LED DRL -கள் ஆகியவை உள்ளன. டாப்பர் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில் விளக்குகள் ஆகியவற்றையும் வெளிப்புறத்தில் உள்ள மாற்றமாக குறிப்பிட்டு கூறலாம்.
அதிகமான இன்ட்டீரியர் அப்டேட்கள்
புதிய ஸ்விஃப்ட்டின் கேபினில் லைட் மற்றும் டார்க் கிரே கலர் மெட்டீரியல்கள், நேர்த்தியான ஏசி வென்ட்கள் மற்றும் பழைய மாடலின் அதே ஸ்டீயரிங் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. புதிய வசதிகளில் பெரிய 9-இன்ச் டச் ஸ்கிரீன், புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும். பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களில் உள்ளதை போன்ற டூயல்-பாட் அனலாக் அமைப்புடன் அப்டேட்டட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இருக்கலாம்.
போர்டில் எதிர்பார்க்கப்படும் மற்ற வசதிகளில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (சோதனை கார்கள் ஒன்றில் பார்க்கப்பட்டது) ஆகியவற்றை மாருதி வழங்க வாய்ப்புள்ளது. நான்காவது ஜென் ஸ்விஃப்ட்டில் வேறு எந்த அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
மேலும் பார்க்க: ஏப்ரல் 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள்
பெட்ரோல் மட்டுமே
கீழே உள்ளபடி மாருதி புதிய ஸ்விஃப்டை புதிய பவர்டிரெய்ன் செட்டப் உடன் வழங்கும்:
விவரங்கள் |
1.2 லிட்டர், 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
82 Ps |
டார்க் |
112 Nm வரை |
டிரான்ஸ்மிஷன்* |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
*எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்விஃப்ட் ஜப்பானில் மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) வேரியன்ட் ஆப்ஷனை பெற்றாலும், இந்த இரண்டு ஆப்ஷன்களும் இந்தியா-ஸ்பெக் மாடலில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. மேலும் குளோபல்-ஸ்பெக் ஸ்விஃப்ட் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆனால் ஹேட்ச்பேக் விலையை குறைவாக வைத்திருக்க இந்தியா-ஸ்பெக் மாடல் சிவிடி -க்கு பதிலாக 5-ஸ்பீடு AMT வசதியை பெற வாய்ப்புள்ளது.
விலை எவ்வளவு இருக்கும் ?
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் இது போட்டியிடும். ரெனால்ட் ட்ரைபர் சப்-4மீ கிராஸ்ஓவர் MPV -க்கு ஒரு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT