சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய Maruti Swift 2024 ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக் பற்றிய விவரங்களை 7 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

published on மே 10, 2024 11:53 am by rohit for மாருதி ஸ்விப்ட்

புதிய ஸ்விஃப்ட் இப்போது இரண்டு ஆக்சஸரி பேக்களுடன் வருகிறது. அவற்றில் ஒன்றுக்கு ரேசிங் ரோட்ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதில் காரின் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டின் லேட்டஸ்ட் எடிஷன் அதன் நான்காவது தலைமுறை அவதாரத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஐந்து வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+. புதிய ஸ்விஃப்ட் உடன், மாருதியின் புதிய தலைமுறை ஹேட்ச்பேக்கின் ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக்கை கொண்ட ஒரு ஆக்சஸரி சேர்க்கப்பட்ட வெர்ஷன்களையும் வெளியிட்டது. கீழே உள்ள படங்களில் மூலம் இந்த ஆக்சஸரி பேக்கை பற்றி நீங்கள் மேலும் அறிந்துகொள்ளலாம்:

முன்பக்கம்

ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டார் காட்சிப்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக்கின் மாக்மா கிரே ஷேடில் இருந்தது மேலும் 'ஸ்விஃப்ட்' பிராண்டிங்குடன் கூடிய பானட் டீக்கால் உள்ளது. இதன் முன் முனையில் பியானோ பிளாக் ஃபினிஷுடன் அதே ஓவல் கிரில்லைப் பெற்றுள்ளது மற்றும் ஹெட்லைட் கிளஸ்டர்களுக்கு ஸ்மோக்ட் எஃபெக்ட் பொருந்தும். கீழே, புதிதாக சேர்க்கப்பட்ட பியானோ பிளாக்-ஃபினிஷ்ட் ஸ்ப்ளிட்டர் மற்றும் பம்பரில் சிவப்பு நிற ஹைலைட்டை நீங்கள் காணலாம்.

மேலும் பார்க்க: புதிய Maruti Swift-இன் வேரியன்ட் வாரியான கலர் ஆப்ஷன்களைப் பார்க்கவும்

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டில், மாற்றங்களில் வெளிப்புற ரியர் வியூ மிரர் (ORVM) டிரிமிற்கான புதிய டீக்கால், வீல் ஆர்ச்களை சுற்றி சிவப்பு பின்ஸ்ட்ரிப்பிங் மற்றும் டோர் சில் கார்டுகளுடன், ஆல் பியானோ பிளாக் ஃபினிஷ் கொண்டவை.

இருப்பினும் இது வழக்கமான மாடலில் உள்ள அதே 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களையே கொண்டுள்ளது.

பின்பக்கம்

ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டார், டெயில் லைட்களை இணைக்கும் பியானோ பிளாக் ஸ்டிரிப் (பிளாக் அவுட்லைனையும் கொண்டுள்ளது) தவிர ஸ்டாண்டர்ட் மாடலை போலவே பின்புறத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிகிறது. கூடுதலாக இங்கேயும் சிவப்பு நிறச் இன்செர்ட்களை கொண்ட பியானோ பிளாக் லிப் இருப்பதை நீங்கள் காணலாம்.

கேபின்

கேபின் சில காஸ்மெட்டிக் அப்டேட்களை பெறுகிறது. இதில் புதுப்பிக்கப்பட்ட அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டில் புதிய டிரிம் இன்செர்ட் மற்றும் ஸ்போர்ட்டிங் சிவப்பு நிற அலங்காரங்கள் மற்றும் கார்பன் ஃபைபர் போன்றவற்றால் ஆன ஃபினிஷிங் சில ஆடம்பர மாடல்களை நினைவூட்டுகிறது.

ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டார் ஸ்டாண்டர்ட் மாடலின் டாப்-ஸ்பெக் ZXi+ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது இந்த வேரியன்டில் உள்ள அதே இன்ஸ்டரூமென்ட்களை கொண்டுள்ளது. இதில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங் ஆகியவை அடங்கும். இதன் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள் (புதிய ஸ்விஃப்ட்டில் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்), ரிவர்சிங் கேமரா மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

மேலும் பார்க்க: 2024 மாருதி ஸ்விஃப்ட்டின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் உள்ள வசதிகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

பவர்டிரெயின்கள்

ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக் முற்றிலும் காஸ்மெட்டிக் பொருளாக மட்டுமே இருப்பதால் 2024 ஸ்விஃப்ட்டின் புதிய 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த இன்ஜின் அனைத்து வேரியன்ட்களுடன் 82 PS மற்றும் 112 Nm டார்க்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது, இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக்குக்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் ஒரே ஒரு நேரடி போட்டியாளராக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸுடன் இருக்கும். கிராஸ்ஓவர் எம்பிவி -யான ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மைக்ரோ எஸ்யூவிகளான ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பன்ச் போன்றவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT

r
வெளியிட்டவர்

rohit

  • 165 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி ஸ்விப்ட்

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.4.99 - 7.09 லட்சம்*
Rs.3.99 - 5.96 லட்சம்*
Rs.4.26 - 6.12 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை