• English
    • Login / Register

    படங்களில் எம்ஜி காமெட் EV யின் கலர் பேலட் விவரங்கள்

    tarun ஆல் ஏப்ரல் 21, 2023 07:13 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 55 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    நான்கு வண்ணங்கள், ஆனால் நீங்கள் பலவிதமான டீகால்களுடன் கூடிய பல தனிப்பயனாக்க பேக்குகளையும் தேர்வு செய்யலாம்.

    MG Comet EV

    இந்தியாவில் எம்ஜி அதன் அல்ட்ரா காம்பாக்ட் காமெட் EV ஐ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது, இது விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது ஏற்கனவே ஒரு தனித்துவமான மற்றும் வினோதமான ஸ்டைலிங் மூலம் தனித்து நிற்கிறது, எம்ஜி பல வெளிப்புற காட்சி விருப்பங்களுடன் எலக்ட்ரிக் ஹேட்ச்-ஐ வழங்கும். ஐந்து அடிப்படை வண்ண விருப்பங்கள் மற்றும் தீம்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட தனியாக தேர்ந்தெடுக்கக்கூடிய பேக்குகளும் வழங்கப்படும்! 

    வண்ண விருப்பங்கள்

    காமெட் EV மூன்று மோனோடோன் ஷேடுகள் மற்றும் இரண்டு டூயல்-டோன் ஷேடுகளின் தேர்வைப் பெறுகிறது. அவை பின்வருமாறு: 

    MG Comet EV

    ஸ்கல் பேக் ஸ்டிக்கர் பேக்குடன் கூடிய கேண்டி ஒயிட் கலர் இதோ.

    MG Comet EV

    அரோரா சில்வரில் முடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஏதுமில்லாமல் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரே காமெட் EV இதுதான்.

    MG Comet EV

    சிவப்பு ஹைலைட்டுகளுடன் கூடிய   ஃப்ளெக்ஸ் துணை பேக்கேஜைக் கொண்ட ஸ்டார்ரி பிளாக் நிறத்தில் உள்ள காமெட் EV இங்கே

    MG Comet EV

    ஸ்டாரி பிளாக் ரூஃப் மற்றும் கூல் சியான் கூறுகளுடன் கூடிய கேண்டி ஒயிட் ஷேடில் உள்ள பீச் பே துணை பேக்கேஜுக்கு நன்றி.

    MG Comet EV

    ஸ்டாரி பிளாக் கூரையுடன் கூடிய ஆப்பிள் கிரீன் ஷேட் மின்சார காம்பாக்டிற்கான அதிகாரப்பூர்வ அறிமுக ஷேடு ஆகும்.

    மேலும் படிக்க: இந்த 10 படங்களில் எம்ஜி காமெட் EVஇன் வெளிப்புறத்தைப் பாருங்கள்

    ஸ்டிக்கர் பேக்குகள் & தனிப்பயனாக்கப்பட்ட தீம்கள்

    MG Comet EV

    இந்த வண்ணங்கள் ஒவ்வொன்றிலும் 16 ஸ்டிக்கர் அல்லது கிராஃபிக் பேக்குகளை நீங்கள் தேர்வு செய்யலாம். வெளியீட்டு விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட சில விருப்பங்கள் பின்வருமாறு: 

    • கேமர் பேக்

    • நைட் கஃபே

    • நைட் கஃபே

    • ப்ளாசம்

    • புளோரெஸ்டா

    ஏராளமான தனிப்பயனாக்கங்கள் மற்றும் தனிப்பயனாக்க விருப்பங்களுடன், எம்ஜி காமெட் EV இன் வருங்கால உரிமையாளர்களுக்கு அதை ஸ்டைல் செய்வதற்கும் சாலைகளில் தனித்துவமாக தெரிவதற்கும் 20 வழிகளை வழங்குகிறது. 

    விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

    கசிந்த ஆவணத்தின்படி நாங்கள் முன்பு தெரிவித்த , காமெட் EV ஆனது 17.3kWh பேட்டரி பேக்கை 230 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் -ஐ வழங்கும் என்று கூறலாம். DRL -களுடன் கூடிய இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் , 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே), ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் மற்றும்  பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 

    டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 க்கு போட்டியாக வெளிவரும் எம்ஜி காமெட் EVயின் விலை சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    was this article helpful ?

    Write your Comment on M g comet ev

    explore மேலும் on எம்ஜி காமெட் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience