அறிமுகமான இரண்டே மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையான Kia Syros
dipan ஆல் ஏப்ரல் 01, 2025 10:02 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா சிரோஸ் ஆனது பிப்ரவரி 1, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் பிப்ரவரி 1, 2025 அன்று கியா சோனெட் உடன் பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக கியா சிரோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கியா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 15,986 சிரோஸ் யூனிட்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது 2025 மார்ச் மாதத்தில் கியாவின் மொத்த விற்பனையில் 20 சதவீதமாகும். இப்போது இந்திய சந்தையில் கியா சிரோஸ் பெற்றுள்ள அனைத்தையும் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
வெளிப்புறம்
கியா சிரோஸ் ஒரு பாக்ஸி வடிவமைப்பைப் பெறுகிறது. இது பிரீமியம் காரான கியா EV9 -லிருந்து நிறைய விஷயங்களை பெறுகிறது. இது வெர்டிகலான எல்இடி ஹெட்லைட்கள், L வடிவ எல்இடி டிஆர்எல்கள், பிளாங்க்டு-ஆஃப் கிரில் மற்றும் பம்பரில் ஏர் இன்லெட்டுகள் ஆகியவற்றைப் பெறுகிறது.
17-இன்ச் அலாய் வீல்கள், ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச் -கள் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் உடன் பாக்ஸி வடிவம் தெரிகிறது. இது எல்-வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் பின்புற விண்ட்ஸ்கிரீன் மற்றும் பம்பரின் இருபுறமும் மற்றொரு டெயில் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வித்தியாசமாகவும் நவீனமாகவும் தோற்றமளிக்கிறது.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
2-ஸ்போக் சங்கி ஸ்டீயரிங் வீல் மற்றும் டாஷ்போர்டில் டிரிபிள் ஸ்கிரீன் லேஅவுட்டுடன் உட்புறம் மிகவும் நவீனமாகவும் குறைவாகவும் தெரிகிறது. கூடுதலாக வித்தியாசப்படுத்தி காட்ட ஆரஞ்சு ஆக்ஸென்ட்களுடன் சில்வர் மற்றும் கிரே டூயல்-டோன் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் ஒட்டுமொத்த கேபின் தீமுடன் கான்ட்ராஸ்ட் நிறங்களுடன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இது டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு) மற்றும் AC கன்ட்ரோல்களுக்கான 5-இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது வென்டிலேட்டட் முன் மற்றும் பின்புற இருக்கைகள், 4-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.
பாதுகாப்புக்கு முன்னர் சிரோஸ் ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஒரு எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ஏடிஏஎஸ்) தொகுப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2025 கியா கேரன்ஸ்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டாப் 5 விஷயங்கள்
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா சிரோஸ் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
116 PS |
டார்க் |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சிரோஸ் காரின் விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.17.80 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது சோனெட், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.