முதல் முறையாக MG Cloud EV-இன் டீசர் வெளிவந்துள்ளது, இதன் அறிமுகம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
published on ஜூலை 29, 2024 03:53 pm by samarth for எம்ஜி விண்ட்சர் இவி
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிளவுட் EV ஆனது MG-இன் மூன்றாவது எலெக்ட்ரிக் காரக இருக்கும், மேலும் இது காமெட் EV மற்றும் ZS EV-க்கு இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
கிளவுட் EV ஆனது MG மோட்டரின் எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் இது மூன்றாவது காரக இருக்கும்.
-
இணைக்கப்பட்ட LED DRL-கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் அலாய் வீல் டிசைன் போன்ற விவரங்களை டீசர் வெளிப்படுத்துகிறது.
-
சர்வதேச அளவில், இது 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் செட்-அப், 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 4 ஏர்பேக்குகள் போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது.
-
உலகளாவிய சந்தைகளில், இது ஒரு சிங்கில் மோட்டார் மற்றும் 50.6 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது CLTC கிளைம் செய்யப்பட்ட 460 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என நம்பப்படுகிறது.
MG கிளவுட் EV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் இதுவாக இருக்கும், இதன் டீசர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இது வூலிங் பிராண்டின் பெயரில் தற்போது உலகளாவிய சந்தைகளில் விற்பனை ஆகிவருகிறது. முதல் டீசரை வெளியிடுவதன் மூலம் இந்திய-ஸ்பெக் மாடலின் வருகையை MG இந்தியாவிற்கு அறிவிக்கிறது, டாடா நெக்ஸானுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த காரின் முதல் டீசரில் என்ன சிறப்பு காணப்பட்டது என்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்:
டீசர்களில் மூலம் தெரிந்தது கொண்டது என்ன?
வீடியோவில், MG கிளவுட் EV-ஐக் காட்டவில்லை என்றாலும், முதல் டீசர் சில முக்கிய வெளிப்புற டிசைன்கள் தொடர்பான சில தகவல்களை தருகிறது. க்ளோபல்-ஸ்பெக் மாடலைப் போலவே, ஃப்ரண்ட் ப்ரொஃபைலின் இருபுறமும் ஹெட்லைட்களுடன் இணைக்கப்பட்ட LED DRL-கள் இருக்கும், மேலும் MG லோகோ DRL-களுக்கு கீழே மையமாக பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்து, டீசரில் ஏரோடைனமிக் முறையில் டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களை ஒரு நெருக்கமான தோற்றத்தை வழங்கியது, இது சர்வதேச மாடலில் உள்ளதைப் போன்றது, ஆனால் மையத்தில் MG லோகோவைக் கொண்டுள்ளது.
கவனிக்கப்பட்ட மற்ற விவரங்களில் இரண்டு ஸ்போக், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இதில் அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
உலகளாவிய-ஸ்பெக் மாடலைப் போலவே, வெண்கலச் செருகல்களுடன் கறுப்பு தீம்மை கேபின் பெறக்கூடும், மேலும் கருப்பு லெதரெட் அப்ஹோல்ஸ்டரியும் இதில் இடம்பெறலாம். சர்வதேச சந்தைகளில், இது 15.6-இன்ச் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 6-வே பவர்டு டிரைவர் சீட், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இதில் 6 ஏர்பேக்குகள் (சர்வதேச மாடலில் குறைவானது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற சிறப்பம்சங்களுடன் MG கிளவுட் EV வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் மற்றும் சார்ஜிங்
கிளவுட் EV பின்வரும் பவர்டிரெய்ன் விவரக்குறிப்புகளுடன் இந்தோனேசிய சந்தையில் கிடைக்கிறது:
விவரங்கள் |
|
பேட்டரி திறன் |
50.6 கிலோவாட் |
மோட்டாரின் எண்ணிக்கை |
1 |
பவர் |
136 PS |
டார்க் |
200 Nm |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் (CLTC) |
460 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் (FWD) |
CLTC: சீனா லைட் ட்யூட்டி வியக்கில் டெஸ்ட் சைக்கிள்
இருப்பினும், இந்திய வெர்ஷன் ARAI தரநிலைகளின்படி சோதிக்கப்படுவதால், வேறுபட்ட ரேஞ்சைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MG மோட்டாரிலிருந்து வரவிருக்கும் கிராஸ்ஓவர்-எஸ்யூவி ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி தோராயமாக 30 நிமிடங்களில் 30-100 சதவிகிதம் சார்ஜ் செய்யப்படலாம். வீட்டில் உள்ள ஏசி சார்ஜர் மூலம், பேட்டரி பேக்கை சுமார் 7 மணி நேரத்தில் 20-100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
MG கிளவுட் EV-யின் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது MG ZS EV உடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவு ஆப்ஷன்களை வழங்கும் அதே வேளையில் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400-க்கு பிரீமியம் மாற்றாக இது இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful