இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள MG Cloud EV கார், 2024 செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ansh ஆல் ஜூலை 11, 2024 07:18 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
MG EV ஆனது 460 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும். டாடா நெக்ஸான் EV -க்கு மேலே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
MG -யின் இந்தியா வரிசையில் இது காமெட் EV மற்றும் ZS EV -க்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
சர்வதேச அளவில் இது 50.6 kWh பேட்டரி பேக் மற்றும் ஃபிரன்ட் வீல் டிரைவ் செட்டப் உடன் வருகிறது.
-
ஃபிரீ-புளோட்டிங் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 6-வே பவர்டு டிரைவர் சீட் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்படலாம்.
-
4 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS வசதிகளைப் பெறக்கூடும்.
-
ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் MG கிளவுட் EV சமீபத்தில் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்கள் மூலமாக அதிக விவரங்களை தெரிய வரவில்லை. இந்த கிராஸ்ஓவர் சர்வதேச சந்தைகளில் வூலிங் கிளவுட் EV என்ற பெயரில் கிடைக்கிறது. மேலும் இந்தியா-ஸ்பெக் மாடலின் விவரங்கள் உலகளாவிய எடிஷனை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
வடிவமைப்பு
உலகளவில் கிடைக்கக்கூடிய காரின் பதிப்பின் முன்பக்கத்தில் கிட்டத்தட்ட வட்டமான எலமென்ட்களுடன் ஸ்மூத் ஃபுளோயிங் வடிவமைப்பைப் கொண்டுள்ளது. முன்பக்கம் முழுவதுக்கும் கொண்ட LED DRL -கள் உள்ளன. ஹெட்லேம்ப்கள் கீழே ஒரு தனியாக பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் கர்வ்களோ அல்லது ஃபோல்டுகளோ எதுவும் இல்லாமல் ஒரு தட்டையான தோற்றம் உள்ளது, மேலும் இது 18-இன்ச் அலாய் வீல்களுடன் சில்வர் ஏரோடைனமிக் ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. பின்புறம் கனெக்டட் LED டெயில் லைட்களுடன் கூடிய ஒரு எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
உள்ளே இது ஒரு சிறிய கேபினைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் பெரிய டச் ஸ்கிரீன் ஆகும். டேஷ்போர்டில் மர மற்றும் புரோன்ஸ் எலமென்ட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் பல லேயர்கள் உள்ளன. ஒட்டுமொத்த கேபினில் பிளாக் கலர் நிற லெதரெட் மெத்தையுடன் கூடிய டார்க் தீம் உள்ளது, இதில் மாறுபட்ட புரோன்ஸ் ஸ்டிச் உள்ளது.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
இந்தோனேசிய சந்தையில் கிளவுட் EV ஆனது 50.6 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது, இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப்பில் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் EV ஆனது CLTC கிளைம்டு (சீனா லைட் டூட்டி வெஹிக்கிள் டெஸ்ட் சைக்கிள்) 460 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது.
மேலும் படிக்க: MG Comet EV மற்றும் MG ZS EV கார்களின் விலை ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
இருப்பினும் இந்திய பதிப்பு ARAI தரநிலைகளின்படி சோதிக்கப்படுவதால் வேறு சில சர்வதேச சந்தைகளை போல இது வேறுபட்ட ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரையில் இது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது சுமார் 30 நிமிடங்களில் அதன் பேட்டரி பேக்கை 30-100 சதவீதத்தில் இருந்து உயர்த்தும். வீட்டில் உள்ள AC சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 7 மணி நேரத்தில் பேட்டரி பேக்கை 20-100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இது 15.6-இன்ச் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6 வே பவர்டு டிரைவர் இருக்கை, பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 4 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ( ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற வசதிகள். இந்தியா-ஸ்பெக் மாடல் வரவிருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அதைக் கொண்டு வர 4 -க்கு பதிலாக 6 ஏர்பேக்குகளை பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG கிளவுட் EV ஆனது சுமார் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 ஆகியவற்றுக்கு இது பிரீமியம் மாற்றாகவும் MG ZS EV -ஆகியவற்றுக்கு ஒரு மலிவு விலையில் உள்ள மாற்றாகவும் இருக்கும்.
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்