• English
  • Login / Register

MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

published on ஜூன் 10, 2024 04:57 pm by shreyash for எம்ஜி குளோஸ்டர்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஒரு சிறப்பான கோல்டன் எக்ஸ்டிரியர் ஷேடை பெறுகிறது.

MG குளோஸ்டர் சமீபத்தில் இரண்டு புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது - டெசர்ட்ஸ்டார்ம் மற்றும் ஸ்னோஸ்டார்ம் - ஒவ்வொன்றும் புதிய ஸ்டைலிங் எலமென்ட்கள் மற்றும் ஆல் பிளாக் உட்புறத்திற்கு அழகு சேர்கின்றன. இரண்டு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் இப்போது டீலர்ஷிப்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எஸ்யூவி-யின் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷனின் 7  புகைப்படங்களைப் பார்க்கலாம்.

MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷன் சிங்கிள் டோன் டீப் கோல்டன் கலரில் வருகிறது. எஸ்யூவி -யின் மற்ற இரண்டு ஸ்டார்ம் எடிஷன்களை போலவே (ஸ்னோஸ்டார்ம் மற்றும் பிளாக்ஸ்டார்ம்), குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஆனது, புதிய மெஷ் பேட்டர்னுடன் கூடிய பிளாக்-அவுட் கிரில், குரோம் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட ஃப்ரண்ட் லிப் மற்றும் ஃபாக் லேம்ப் மற்றும் ஹெட்லைட்களில் ரெட் ஹைலைட்களை பெறுகிறது.

பக்கவாட்டில், குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் பிளாக்-அவுட் டோர் ஹேண்டில்களை காட்டுகிறது. அதே சமயம் ORVM-களும் குரோம் ஃபினிஷுடன் பிளாக் நிறத்தில் உள்ளன. ஸ்டாண்டர்டான MG குளோஸ்டர் போலல்லாமல், எஸ்யூவி-யின் இந்த ஸ்பெஷல் எடிஷனில் உள்ள விண்டோ லைனும் பிளாக் நிறத்தில் உள்ளது. அதன் ஸ்போர்ட்டி கவர்ச்சியை மேம்படுத்தும் வகையில், குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஆனது ரெட் பிரேக் காலிப்பர்களுடன் பிளாக் நிற 19-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பின் பக்கத்தைப் பொறுத்தவரை குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷன் அதன் வழக்கமான வேரியன்ட்களைப் போலவே தோன்றுகிறது. இருப்பினும் பேட்ஜ்கள் நேர்த்தியான தோற்றத்திற்காக பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

குளோஸ்டரின் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷனானது, ஸ்னோஸ்டார்ம் எடிஷனை போலவே, ஏசி வென்ட்களை சுற்றிலும், சென்டர் கன்சோலில் பிரஷ்டு சில்வர் இன்செர்ட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆல்-பிளாக் நிற உட்புறத்துடன் வருகிறது.

எஸ்யூவி-யின் இந்த ஸ்பெஷல் எடிஷன் கான்ட்ராஸ்ட் வொயிட் ஸ்டிச் உடன் பிளாக் நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது. MG நிறுவனம் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷனை 6 மற்றும் 7 சீட்டர் அமைப்புகளுடன் வழங்குகிறது.

குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் எடிஷன் டாப்-ஸ்பெக் டிரிம் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு, 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், த்ரீ-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12-வே பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட்டுடன் கூடிய மெமரி, மசாஜ், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் செயல்பாடுகள் உடன் 8-வே பவர்டு கோ-டிரைவர் சீட்டுகள் போன்றவை உள்ளன.

இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற நிலை 2 ADAS (அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.

இன்ஜின் & டிரான்ஸ்மிஷன்

MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம் ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. AWD வெர்ஷனில் 2-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 215 PS மற்றும் 478 Nm டார்க்கை வழங்குகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், RWD டிரிம் 161 PS மற்றும் 373 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

விலை மற்றும் போட்டியாளர்கள்

MG குளோஸ்டர் டெசர்ட்ஸ்டார்ம்-இன் விலை ரூ. 41.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல். இது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: MG குளோஸ்டர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது எம்ஜி குளோஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience