இந்த தீபாவளிக்கு அதிகபட்ச தள்ளுபடியில் கிடைக்கும் 7 எஸ்யூவிகள்
published on நவ 09, 2023 07:32 pm by rohit for மஹிந்திரா xuv400 ev
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா XUV400 எலெக்ட்ரிக் SUV வாகனங்களின் அதிகபட்ச பலனாக ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும், அதனை தொடர்ந்து ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்கில் ஒவ்வொரு வாகனத்திற்கும் மொத்தமாக ரூ.2 லட்சம் வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.
இந்த தீபாவளிக்கு ஒரு புதிய எஸ்யூவி -யை அதிக தள்ளுபடியில் வாங்கத் திட்டமிட்டிருந்தால், மிகவும் பிரபலமான மாடல்களுக்காக காத்திருக்க வேண்டாம். இந்த பண்டிகை காலத்தில் பல்வேறு வேரியன்ட்யான எஸ்யூவி -க்களில் வெவ்வேறு அளவுகளில் விலையில் அதிகபட்ச தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தீபாவளிக்கு புதிய எஸ்யூவி -யை வாங்க திட்டமிட்டிருந்தால், அதிக தள்ளுபடியில் இருக்கும் 7 SUV-களின் பட்டியல் உங்களுக்காக இதோ:
மஹிந்திரா XUV400
- மஹிந்திரா XUV 400 -ன் பாதுகாப்பு அம்சங்கள் ஆகஸ்ட் 2023-இல் புதுப்பிக்கப்பட்டன, இதனால் அதன் விலை ரூ.20,000 வரை உயர்ந்தது. புதுப்பித்தலுக்கு முந்தைய மாடல் மீது ரூ.3.5 லட்சம் வரை அதிகபட்ச தள்ளுபடியும், புதுப்பிக்கப்பட்ட மாடல் மீது ரூ.3 லட்சம் வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.
- இந்த சேமிப்புகள் நீண்ட தூர EL வேரியன்ட்களுக்கு மட்டுமே, இதில் புதிய வேரியன்ட்க்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.
- பலன்களின் ஒரு பகுதியாக இலவச காப்பீடு மற்றும் 5 ஆண்டு மதிப்புள்ள ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் மஹிந்த்ரா வழங்குகிறது.
- எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.15.99 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் வரை இருக்கும்.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்
-
இந்த தீபாவளிக்கு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் மீது ரூ.2 லட்சம் வரை பணத் தள்ளுபடியை பெற்றிடுங்கள்.
-
கடந்த சில மாதங்களில், ஹூண்டாய் எலெக்ட்ரிக் SUV கார் மீது ஒரு லட்சத்திற்கும் மேலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டன, செப்டம்பர் மாதம் முதல் இதன் மொத்த பலன்கள் ரூ.2 லட்சத்தை அடைந்துள்ளது.
-
இதன் விலை ரூ.23.84 லட்சம் முதல் ரூ.24.03 லட்சம் வரை இருக்கும்
மேலும் படிக்க: 490 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கொண்ட செகெண்ட் ஜெனெரேஷன் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சிட்ரோன் C5 ஏர்கிராஸ்
-
சிட்ரான் C5 ஏர்கிராஸ் காரை வாங்க விரும்புபவர்கள் இந்த நவம்பரில் ரூ.2 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை பெறலாம்.
-
2023 தொடக்கம் முதலாக இந்த எஸ்யூவி மீது ஒரு லட்சம் வரையிலான தள்ளுபடிகள் இருந்தது, சமீபத்திய மாதங்களில் இது ரூ.2 லட்சத்திற்கு அதிகரித்துள்ளது.
-
C5 ஏர்கிராஸ் மீதான ஏதேனும் கூடுதல் சலுகைகள் அல்லது பலன்களை பெறுவதற்கு உங்கள் அருகில் உள்ள சிட்ரான் டீலர்ஷிப்பிற்கு செல்லுங்கள்.
-
சிட்ரான் பிரீமியம் எஸ்யூவி -யின் விலை ரூ.36.91 லட்சம் முதல் ரூ.37.67 லட்சம் வரை இருக்கும்.
போக்ஸ்வேகன் டிகுவான்
-
போக்ஸ்வேகன் டிகுவான் காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த நவம்பரில் மொத்தம் ரூ.1.85 லட்சம் வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
-
டெஸ்ட் டிரைவிங் செய்து பிரீமியம் மிட்-சைஸ் SUV- யை புக் செய்பவர்களுக்கு சில கூடுதல் பலன்களும் உள்ளன.
-
இந்தியாவில் இந்த மாடல் போக்ஸ்வேகன் காரின் விலை ரூ.35.17 லட்சமாக இருக்கும்.
MG குளோஸ்டர்
-
MG குளோஸ்டர் மீது மொத்த பலனாக ரூ.1.75 வரை பெறலாம்.
-
இந்த முழு அளவு SUV டீசல் பவர்டிரைன்களை மட்டுமே வழங்குகிறது, இது பிளாக்ட் அவுட் ஸ்ட்ராம் எடிஷன் உள்ளிட்ட இரண்டு முக்கிய மாடல்களில் கிடைக்கிறது.
-
MG கிலோஸ்டரின் விலை ரூ.38.80 லட்சம் முதல் ரூ.43.87 லட்சம் வரை இருக்கும்
இதையும் பார்க்கவும்: கார்தேக்கோ மூலமாக நிலுவையிலுள்ள உங்கள் சலான்களை செலுத்திடுங்கள்
MG ஆஸ்டர்
-
இந்த தீபாவளிக்கு MG ஆஸ்டர் காரை வாங்க விரும்பினால், ரூ.1.75 லட்சம் வரை மொத்த தள்ளுபடியை பெறலாம்.
-
இந்த காம்பாக்ட் SUV இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் இது பிளாக்ட் அவுட் ஸ்ட்ராம் எடிசன் உள்ளிட்ட ஐந்து முக்கிய மாடல்களில் கிடைக்கிறது.
-
இதன் விலை ரூ.10.82 லட்சம் முதல் ரூ.18.69 லட்சம் வரை இருக்கும்.
மேலும் படிக்க: இப்போதே புக் செய்தால் இந்த தீபாவளிக்கு இந்த 5 SUV-களில் ஒன்றை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம் !
ஸ்கோடா குஷாக்
-
இந்த நவம்பரில் ஸ்கோடா குஷாக் மீது மொத்த பலனாக ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்.
-
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் பண்டிகைக்கால சலுகையாக ஸ்கோடா எஸ்யூவி -யின் ஆரம்ப விலையில் ரூ.70,000 தள்ளுபடி வழங்கப்பட்டது.
-
இந்த தீபாவளி பலனாக 4 வருட/60,000 கிமீ காம்ப்ளிமெண்ட்ரி ஸ்டாண்ட்டர்ட் பராமரிப்பு பேக்கேஜும் கிடைக்கும்.
குறிப்பு: உங்கள் இருப்பிடம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து அனைத்து ஆஃபர்களும், சலுகைகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எனவே உங்களுக்கு விருப்பமான பிராண்ட் மற்றும் மாடல் குறித்த தகவல்களைப் பெறஅருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பார்க்க: அக்டோபர் 2023-இல் சிறந்த விற்பனையை கொண்ட முதல் 10 கார் பிராண்டுகள்: மாருதி, ஹூண்டாய், டாடா, மஹிந்த்ரா மற்றும் பல
இந்த தீபாவளிக்கு நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் எந்த எஸ்யூவி -யை வாங்க விரும்புகிறீர்கள்? நீங்கள் வாங்க விரும்பும் மாடல்கள் மேலே உள்ள பட்டியலில் உள்ளதா? கமென்ட்டில் எங்களுக்கு தெரியுங்கள்.
அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை
மேலும் தெரிந்து கொள்ள: மகிந்திரா XUV400 EV ஆட்டோமேட்டிக்