30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை கடந்த Maruti Dzire கார்
மாருதி டிசையர் க்காக டிசம்பர் 30, 2024 10:03 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 74 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டிய சாதனை பட்டியலில் மாருதியின் ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றுடன் நான்காவது மாடலாக டிசையர் இணைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதன் மானேசர் தொழிற்சாலைக்கான உற்பத்தி மைல்கல்லை 20 லட்சம் யூனிட்களை கடந்ததாக சமீபத்தில் மாருதி நிறுவனம் அறிவித்தது. மார்ச் 2008 ஆண்டில் விற்பனைக்கு வந்ததில் இருந்து 30 லட்சம் யூனிட்கள் என்ற உற்பத்தி மைல்கல்லை இப்போது மாருதி டிசையர் கடந்துள்ளது. மாருதி டிசையர் இந்த மைல்கல்லை அடைய எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என்பது பற்றிய விரிவான விவரம் இங்கே.
மாதம் மற்றும் ஆண்டு |
எட்டிய மைல்கல் |
ஏப்ரல் 2015 |
10 லட்சம் |
ஜூன் 2019 |
20 லட்சம் |
டிசம்பர் 2024 |
30 லட்சம் |
டிசையர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து முதல் பெரிய 10 லட்சம் உற்பத்தி மைல்கல்லை எட்ட 7 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதன் பிறகு 4 ஆண்டுகளில் மேலும் 10 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டன. மேலும் 5 ஆண்டுகளில் அடுத்த 10 லட்சம் டிசையர் மாடல்கள் தயாரிக்கப்பட்டன. அதாவது 30 லட்சம் உற்பத்தி மைல்கல்லை எட்டுவதற்கு கார் தயாரிப்பு நிறுவனம் மொத்தம் 16 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது. 2023-24 நிதியாண்டில் மாருதி சுஸூகியால் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டாவது மாடலாக டிசையர் இருந்தது.
மாருதி ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் கார்கள் ஏற்கனவே 30 லட்சம் உற்பத்தி மைல்கற்களை கடந்துவிட்டன. கார்களின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 கோடிக்கும் அதிகமான மைல்கல்லை கடந்துள்ளதாகவும் ஏப்ரல் 2024 -ல் மாருதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 2024 மாருதி டிசையர்: சிறந்த வேரியன்ட் எது?
மாருதி டிசையர்: ஒரு கண்ணோட்டம்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி மாருதி டிசையர் மார்ச் 2008 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நான்கு ஜெனரேஷன் அப்டேட்கள் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது நான்காவது தலைமுறை விற்பனையில் உள்ளது மற்றும் அதன் கட்டமைப்பு குதளம் மற்றும் பவர்டிரெய்னை மாருதி ஸ்விஃப்ட் உடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது. ஆனால் இப்போது அதன் உடன்பிறப்புகளை விட வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
இது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி ஆப்ஷன் (70 PS/102 Nm) மேனுவல் கியர் பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும்.
இது இந்த பிரிவில் முதலாவதாக சிங்கிள்-பேன் சன்ரூஃப், 9-இன்ச் டச் ஸ்கிரீன், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் வருகிறது. அதன் பாதுகாப்பு தொகுப்பு 5-ஸ்டார் குளோபல் NCAP விபத்து மதிப்பீடு மற்றும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பானதாக உள்ளது.
மாருதி டிசையர்: விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி டிசையர் காரின் விலை ரூ.6.79 லட்சம் முதல் ரூ.10.14 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இது புதிய ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் போன்ற மற்ற சப்-4 மீ செடான்களுக்கு போட்டியாக இருக்கிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.