ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Mahindra Thar Roxx VIN 0001
published on செப் 20, 2024 08:03 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 137 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஏலம் விடப்பட்ட ஒரு டாப்-ஸ்பெக் AX7 L 4WD டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காரில் ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் கூடிய பேட்ஜ் உள்ளது.
-
ஏலம் எடுத்தவரின் முடிவின் அடிப்படையில் நான்கு இலாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றுற்கு வருமானம் நன்கொடையாக அளிக்கப்படவுள்ளது.
-
ஏலம் விடப்பட்ட வேரியன்ட் டாப்-ஸ்பெக் AX7 L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD (4-வீல்-டிரைவ்) ஆகும்.
-
இது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் கனெக்ட் செய்யப்பட்ட 175 PS 2.2-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது.
-
தார் ராக்ஸ் காரின் விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.20.49 லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம், ஆர்டபிள்யூடிக்கு மட்டும்)
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் முதல் யூனிட் ஆனது செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 16 வரை ஏலத்தில் விடப்பட்டது. 'VIN 0001' வரிசை எண்ணைக் கொண்ட தார் ராக்ஸின் ஏலம் 1.31 கோடி ரூபாய்க்கு நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் இருந்து திரட்டப்படும் நிதி வெற்றியாளரின் விருப்பத்தின் அடிப்படையில் நான்கு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
3-டோர் தார் இது 2020 ஆண்டு ஏலம் விடப்பட்டது அந்த ஏலம் 1.11 கோடியில் முடிவடைந்தது. இப்போது தார் ராக்ஸ் அதை விட இப்போது கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோவிட்-19 நிவாரண அமைப்புகளுக்கு ஆதரவாக இந்தத் தொகை வழங்கப்பட்டது. 3-டோர் தாருக்கான ஏலத்தை புது டெல்லியில் வசிக்கும் ஆகாஷ் மிண்டா வென்றார்.
VIN 0001 தார் ராக்ஸ் -ன் சிறப்பு என்ன?
மஹிந்திரா தார் ரோக்ஸின் டாப்-ஸ்பெக் AX7 L டீசல் ஆட்டோமேட்டிக் 4WD வேரியன்ட்டை ஏலம் விட முடிவு செய்தது. தார் ராக்ஸ் -ன் இந்த முதல் வாடிக்கையாளர் யூனிட் 'VIN 0001' சின்னம் மட்டும் இல்லாமல் கூடுதல் ஸ்பெஷலாக ஆனந்த் மஹிந்திராவின் சிக்னேச்சர் உடன் கூடிய பேட்ஜையும் கொண்டுள்ளது.வெற்றி பெற்ற ஏலதாரர் தார் ராக்ஸ்ஸின் எந்த நிறத்தை தேர்வு செய்தார் என்பதை மஹிந்திரா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தார் ராக்ஸில் டீப் ஃபாரஸ்ட், எவரெஸ்ட் ஒயிட், டேங்கோ ரெட், போர்ஷிப் கிரே, நெபுலா ப்ளூ, பர்ன்ட் சியன்னா மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.
பெரிய தாரின் இந்த டாப்-ஸ்பெக் பதிப்பில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே), ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் சீட்கள், 6-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
தார் ராக்ஸ் -ன் VIN 0001 யூனிட்டில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விவரங்கள்:
விவரங்கள் |
மஹிந்திரா தார் ராக்ஸ் |
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
175 PS |
டார்க் |
370 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு AT* |
டிரைவ் டைப் |
4WD** |
*AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
**4WD - 4-வீல்-டிரைவ்
தார் ரோக்ஸ் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருப்பத்தையும் மேனுவல் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில்கிடைக்கிறது. தார் ராக்ஸ் க்கான விரிவான பவர்டிரெய்ன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
162 PS (MT)/177 PS (AT) |
152 PS (MT)/175 PS வரை (AT) |
டார்க் |
330 Nm (MT)/380 Nm (AT) |
330 Nm (MT)/ 370 Nm வரை (AT) |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT^ |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
டிரைவ் டைப் |
RWD^ |
RWD/ 4WD |
^RWD - ரியர் வீல் டிரைவ்
மேலும் பார்க்க: தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய மேட்-இன்-இந்தியா Mahindra XUV 3XO
ஏலத்தில் கிடைத்த நிதி நன்கொடையாக வழங்கப்படவுள்ளது
வெற்றியாளரின் விருப்பப்படி இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்றுக்கு வருமானம் நன்கொடையாக வழங்கப்படும். வெற்றியாளர் மற்றும் நன்கொடை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இலாப நோக்கற்ற நிறுவனங்களின் விவரங்கள் கீழே உள்ளன.
-
நந்தி அறக்கட்டளை (பெண்கள் மேம்பாடு)
-
BAIF மேம்பாட்டு ஆராய்ச்சி அறக்கட்டளை (நீர்நிலை மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு)
-
வாட்டர்ஷெட் ஆர்கனைசேஷன் டிரஸ்ட் (ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மற்றும் விவசாயம்)
-
யுனைடெட் வே மும்பை (சாலை பாதுகாப்பை ஊக்குவித்தல்)
விலை & போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சம் மற்றும் ரூ. 20.49 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக உள்ளது. தார் ராக்ஸ் -ன் 4WD வேரியன்ட்களுக்கான விலை விவரங்களை மஹிந்திரா இன்னும் அறிவிக்கவில்லை. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் மற்றும் மாருதி ஜிம்னி ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ராக்ஸ் டீசல்