சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

எக்ஸ்க்ளூஸிவ்: மஹிந்திரா தார் 5-டோர் லோயர் வேரியன்ட் சோதனை தொடர்கிறது, புதிய ஸ்பை ஷாட்கள் தற்போது வெளியாகியுள்ளன

published on ஜூன் 13, 2024 06:45 pm by samarth for மஹிந்திரா தார் 5-door

புதிய ஸ்பை ஷாட்கள், அலாய் வீல்கள் மற்றும் உள்ளே குறைவான ஸ்கிரீன்கள் உடன் நீட்டிக்கப்பட்ட தாரின் மிடில்-லெவல் வேரியன்ட்டை காட்டுகிறது.

  • தார் 5-டோர் மிடில்-ஸ்பெக் வேரியன்ட் மோனோடோன்-ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்களுடன் தற்போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

  • தார் 3-டோர் பதிப்பில் காணப்படுவது போல் உட்புறங்களில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்படும்.

  • டாப் டிரிம் பெரிய டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதே 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.

  • இது 2024 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் 5-டோர் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் லைஃப்ஸ்டைல் ​​எஸ்யூவி -யை அறிமுகப்படுத்த மஹிந்திரா தயாராகி வருகிறது. ஆகவே இது தற்போது தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு டிரிம் நிலைகளில் பலமுறை பல்வேறு நிலப்பரப்புகளில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் நாங்கள் இரவில் சோதனை செய்யப்படும் ஒரு மிட்-ஸ்பெக் வேரியன்ட்டை படம் பிடித்துள்ளோம்.

தெரிய வரும் விவரங்கள்

இது வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் ஒளிர்ந்த நிலையில் இரவில் அதன் சாலை தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்தோம். இந்த சோதனை காரில் இருக்கும் மோனோடோன் அலாய் வீல்களையும் பார்க்க முடிந்தது. மாறாக, அடிப்படை மாடலில் ஸ்டீல் சக்கரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் டாப் வேரியன்ட்டில் டூயல்-டோன் அலாய் வீல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உட்புறத்தில் 3-டோர் தாரில் காணப்படும் இல்லுமினேட்டட் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பார்த்தோம். டாப்-ஸ்பெக் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இது ஒரு மிட்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது..

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

தார் 5-டோர் பதிப்பில் பெரிய டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள் பேன்-சன்ரூஃப், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் ரியர்வியூ மிரர் (IVRM) உள்ளே ஆட்டோ டிம்மிங் ஆகியவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஸ்பை காட்சிகள் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதியும் கொடுக்கப்படலாம் என்பதை காட்டியது.

மேலும் பார்க்க: மஹிந்திரா XUV 3XO வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: நீங்கள் எதை வாங்க வேண்டும்?

பாதுகாப்பு

பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவற்றைப் பெறலாம். இது ஹையர் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமராவையும் பெறலாம். தற்போதைய தாரிலிருந்து அனைத்து பயணிகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் போன்ற பிற பாதுகாப்பு வசதிகளை இது தக்க வைத்துக் கொள்ளும்.

5-டோர் தார் பவர் ட்ரெயின்கள்

மஹிந்திரா அதே பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெரிய தார்க்கு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். எஸ்யூவி -யில் வழங்கப்படும் பவர்டிரெய்ன் தற்போதைய 3-டோர் தாரில் உள்ளதை விட அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றப்படும். ரியர் வீல் டிரைவ் மற்றும் ஃபோர் வீல் டிரைவ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

மஹிந்திரா தார் 5-டோர் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும், விரைவில் இது அறிமுகப்படுத்தப்படலாம். இதன் ஆரம்ப விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ஆனது மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

samarth

  • 37 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மஹிந்திரா தார் 5-Door

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை