மார்ச் 2025 -ல் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த Hyundai Creta
2025 மார்ச் மாதம் இந்தியாவில் 18,059 யூனிட்கள் விற்பனையாகி கிரெட்டா அதிகம் விற்பனையாகும் கார்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என ஹூண்டாய் இந்தியா அறிவித்துள்ளது. கிரெட்டா எலக்ட்ரிக் உடன், 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி -யாக கிரெட்டா இடம் பிடித்துள்ளது.
-
மார்ச் 2025 -ல் கிரெட்டாவின் 18,059 யூனிட்கள் விற்பனையாகின.
-
இந்த எண்ணிக்கையில் எஸ்யூவி -யின் ஐசிஇ மற்றும் இவி பதிப்புகளும் அடங்கும்.
-
29 சதவிகிதம் மற்றும் 71 சதவிகித வாடிக்கையாளர்கள் முறையே கிரெட்டா ஐசிஇ மற்றும் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றின் சிறந்த வேரியன்ட்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
-
விற்பனையான கிரெட்டாவில் 69 சதவீதம் பனோரமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் -ன் அறிமுகம் அந்த பெயரை இன்னும் பிரபலமாக்கியுள்ளது.18,059 யூனிட் விற்பனையுடன் ஹூண்டாய் கிரெட்டா 2025 மார்ச் மாதம் அதிகம் விற்பனையான கார் ஆகும். 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 52,898 யூனிட்கள் விற்பனையாகி சிறந்த விற்பனையான எஸ்யூவி -களுக்கான முதலிடத்தையும் இது பிடித்தது.
இந்த சாதனைகள் அனைத்தும் 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மூன்றாவது கார் என்ற பெருமையை ஹூண்டாய் கிரெட்டா பெற உதவியது. இந்த காலகட்டத்தில் ஹூண்டாய் 1,94,971 எஸ்யூவி -களை விற்பனை செய்தது.
சில புள்ளிவிவரங்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பகிர்ந்துள்ளது. அவை இங்கே:
-
வாடிக்கையாளர்களில் 29 சதவீதம் பேர் கிரெட்டா ஐசிஇ -யின் சிறந்த வேரியன்ட்களை விரும்பினர்.
-
அதே கிரெட்டா எலக்ட்ரிக் 71 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்களுக்கான தேவை 69 சதவீதமாக வலுவாக உள்ளது.
-
மொத்த விற்பனையான கிரெட்டாக்களில் 38 சதவிகிதம் கனெக்டட் கார் டெக்னாலஜி வசதிகளை கொண்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா: கண்ணோட்டம்
ஹூண்டாய் கிரெட்டா இன்று சந்தையில் வாங்கக்கூடிய மிகச் சிறந்த எஸ்யூவி -களில் ஒன்றாக உள்ளது. இது ஒரு நேர்த்தியான வடிவமைப்பு, ஏராளமான வசதிகள் மற்றும் 3 இன்ஜின் ஆப்ஷன்களை கொண்ட ஒரு உயர்தரமான கேபின் ஆகியவற்றைப் பெறுகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் வேண்டுமானால் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் காரை பார்க்கலாம். இது அதிக அதி சிறப்பான டிரைவிங் அனுபவத்திற்காக மிகவும் தீவிரமான வடிவமைப்பு மற்றும் இன்ஜினில் மாற்றங்களை கொண்டுள்ளது.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட்லைட்ஸ் ஆகியவை ஹூண்டாய் கிரெட்டாவில் உள்ள முக்கிய அம்சங்களாகும்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமராவுடன் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிரெட்டாவை நீங்கள் 3 இன்ஜின் ஆப்ஷன்களின் தேர்வுடன் வாங்கலாம். அதன் விவரங்கள் இங்கே:
அளவுகள் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் (PS) |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் (Nm) |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் |
6-ஸ்பீடு MT / CVT |
6-ஸ்பீடு MT* / 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
*ஹூண்டாய் கிரெட்டா என் லைனுக்கு மட்டுமே
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா SX பிரீமியம் வேரியன்ட் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்: கண்ணோட்டம்
ஹூண்டாய் கிரெட்டா ICE-பவர்டு கிரெட்டாவின் சிறப்பான விஷயங்களை எலக்ட்ரிக் வடிவில் வழங்குகிறது. இது ICE-பவர்டு கிரெட்டாவிலிருந்து தனித்து தெரிய சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கேபினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது. தேர்வு செய்ய இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் உள்ளன.
எலக்ட்ரிக் மோடில் பாஸ் பயன்முறையுடன் கூடிய பவர்டு கோ-டிரைவர் இருக்கை, டிஜிட்டல் கீ மற்றும் ஓட்டுநர் இருக்கைக்கு மெமரி ஃபங்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிரெட்டா எலக்ட்ரிக் டூ லோடிங் (V2L) வசதியுடன் வருகிறது. இதன் மூலமாக பேட்டரியை பயன்படுத்தி சிறிய உபகரணங்களை இயக்க முடியும்.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் (O) வேரியன்ட் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். அதன் விவரங்கள் இங்கே:
அளவுகள் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் |
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் லாங் ரேஞ்ச் |
பவர் (PS) |
135 PS |
171 PS |
டார்க் (Nm) |
200 Nm |
200 Nm |
பேட்டரி பேக் |
42 kWh |
51.4 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
390 கி.மீ |
473 கி.மீ |
ஹூண்டாய் கிரெட்டா: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.11.11 லட்சம் முதல் ரூ.20.64 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் கிரெட்டா என் லைன் விலை உட்பட) இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.17.99 லட்சத்தில் இருந்து ரூ.24.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது மஹிந்திரா பிஇ 6, டாடா கர்வ்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.