Citroen C3X கிராஸ்ஓவர் செடான் காரின் இன்ட்டீரியர் இப்படித்தான் இருக்குமா !
shreyash ஆல் ஜனவரி 03, 2024 11:22 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
C3X க்ராஸ்ஓவர் செடான் கார், சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸில் காணப்படும் அதே டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும்.
சிட்ரோன் eC4X -ன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
Citroen C3X அதன் கட்டமைப்பு தளம் மற்றும் பவர்டிரெய்னை Citroen C3 மற்றும் C3 ஏர்கிராஸுடன் பகிர்ந்து கொள்ளும்.
-
கிராஸ்ஓவர் செடான் முழு மின்சார பதிப்பையும் பெறும்.
-
இன்ட்டீரியரை பொறுத்தவரையில், இது C3 ஏர்கிராஸ் -ல் காணப்படும் 10.2-இன்ச் டச் ஸ்க்ரீன் செட்டப் மற்றும் ஆடியோ மற்றும் அழைப்புகளுக்கான கன்ட்ரோல்களுடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைப் பெறலாம்.
-
Citroen C3X 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரூ. 7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ஸ்பெக் Citroen C3X கிராஸ்ஓவர் செடான் காரின் இன்ட்டீரியர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. C3X இந்தியாவில் பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான சிட்ரோனிடம் இருந்து ஐந்தாவது காராக வெளியாகும். மேலும் இது C3 மற்றும் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றின் கட்டமைப்பு தளத்தில் வடிவமைக்கப்பட்ட மூன்றாவது காராகும்.
பரிச்சயமான கேபின்
இதன் டேஷ்போர்டு சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யை போலவே இருக்கின்றது. தற்போதுள்ள C3, eC3 மற்றும் C3 ஏர்கிராஸ் போன்ற சிட்ரோன் மாடல்களில் நாம் பார்த்ததைப் போலவே கோ-டிரைவருக்கு ஏசி வென்ட்களின் வடிவமைப்பு உள்ளது. மற்றபடி பெரிய 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஆடியோ மற்றும் காலிங் கன்ட்ரோல்களுடன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவியில் இருப்பதை போலவே இருக்கின்றன.
இதையும் பார்க்கவும்: இந்த 3 கார்களும் ஜனவரி 2024 -ல் விற்பனைக்கு வர உள்ளன
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் உட்புறப் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை C3X கிராஸ்ஓவரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் பார்க்கவும்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய 5 விஷயங்கள் இவை
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்
C3X ஆனது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மற்றும் EV (மின்சார வாகனம்) ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கும். கிராஸ்ஓவரின் ICE பதிப்பில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS / 190 Nm) பொருத்தப்பட்டிருக்கலாம், இது C3 மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களில் இருப்பது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். சிட்ரோன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனையும் வழங்கலாம்.
C3X -யின் மின்சார பதிப்பிற்கான பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், காரில் eC3 -யை விட பெரிய பேட்டரி மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் நிறுவனம் C3X -யை 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரூ 7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தலாம். டாடா கர்வ்வ், ஹூண்டாய் வெர்னா, மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.C3X -ன் மின்சார பதிப்பு டாடா கர்வ்வ் EV -க்கு போட்டியாக இருக்கும்.