டாடா நானோவுடனான இந்த வைரல் விபத்தில் மஹிந்திரா தார் ஏன் கவிழ்ந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்
modified on பி ப்ரவரி 27, 2023 02:12 pm by shreyash for மஹிந்திரா தார்
- 57 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கிய எவரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் தார் உரிமையாளரின் மனம்தான் கொஞ்சம் வருத்தமடைந்திருக்கக் கூடும்.
கடந்த பத்து வருடங்களை எடுத்துக் கொண்டால் சாலை விபத்து என்பது பொது மக்களுக்கும் கார் தயாரிப்பாளர்களுக்கும் கவலையளிக்கும் விஷயமாக மாறி வருகிறது. இப்போதெல்லாம் கார் விபத்து பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்படும் போது, வாடிக்கையாளர்கள் காரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உருவாக்குவது குறித்து தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். வாகனத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் அரசும் வாகன உற்பத்தியாளர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், சில நேரங்களில், இது தரம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதை விட அடிப்படை இயற்பியலைப் பற்றியதாகவே இருக்கிறது.
சமீபத்தில், ஆஃப் ரோடு எஸ்யூவி-யான மஹிந்திரா தார் மற்றும் டாடா நானோ கார் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றில் மஹிந்திரா தார் தலைகீழாக கவிழ்ந்த வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலானது. சத்தீஸ்கரில் உள்ள துர்க் மாவட்டத்தில் பத்மநாப்பூர் மினி ஸ்டேடியம் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், நேரில் கண்ட சாட்சிகளின்படி, தார் ஒரு சந்திப்பில் குறுக்கில் செல்லும் சாலையைக் கடக்கும் போது, பக்கத்திலிருந்து நானோ மோதியதில் அது கவிழ்ந்ததாகவும் தெரிய வருகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தின் விளைவானது இணையத்தில் ஒரு சுவாரஸ்யமான விவாதத்தைத் தூண்டியது: அது எப்படி நடந்தது?
ஒரு சிறிய ஹேட்ச்பேக் மீது மோதிய பிறகு பெரிய எஸ்யூவி கவிழ்ந்தால் அது விசித்திரமாகவும் , நம்புவதற்கு சற்று கடினமாகவும் தோன்றலாம். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பல நம்பத் தகுந்த காரணங்கள் உள்ளன. இந்த விளைவுக்கான சாத்தியமான காரணங்களைச் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
தாரின் உயர் புவியீர்ப்பு மையம் (செண்டர் ஆஃப் கிராவிட்டி)
விபத்திற்குப் பிறகு தார் தலைகீழாக கவிழ்ந்ததற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, அதன் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 226 மி.மீ, அதன் காரணமாக இதில் அதிக புவியீர்ப்பு மையத்தைக் (சிஜி) கொண்டிருக்கிறது . அதிக புவியீர்ப்பு மையம் கொண்ட வாகனம் உருளும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இது செங்குத்து மற்றும் கிடைமட்ட இயக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் வாகனத்தின் நிலைத்தன்மையை பாதிக்கிறது, குறிப்பாக நெருக்கமான வளைவுகளில் அதிக வேகத்துடன் செல்லும்போது காரின் நிலைத்தன்மை பாதிக்கப்படக்கூடும்.
மேலும் படிக்க: சாட் ஜிபிடி இன் படி 4 சிறந்த இந்திய கார்கள் இதோ
இதற்கிடையில், குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்கள் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருக்கும், ஏனெனில் அவற்றின் ஈர்ப்பு மையம் எளிதில் மாறாது, அதன் மூலம் சிறந்த ரைட் மற்றும் ஹேண்டில் செய்ய உதவுகிறது.
தாரின் பாக்ஸி டிசைன்
மஹிந்திரா தார் வடிவமைப்பு மிகவும் ஒரு பெட்டியின் வடிவத்தை ஒத்திருக்கிறது. இது ஒரு வலுவான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தை அளித்தாலும் கூட, பெட்டியின் வடிவம் வாகனத்தின் ஹேண்ட்லிங் மற்றும் டைனமிக்ஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக அதிக ஏரோடைனமிக் மற்றும் வடிவத்தில் இருக்கும் கார் வடிவமைப்புகளுடன் ஒப்பிடும்போது தாரின் நிலைத்தன்மை குறைகிறது.
மேலும் படிக்க: 10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள இந்த 10 கார்கள் தரநிலையாக இ.எஸ்.சிஐப் பெறுகிறது
டாடா நானோவின் ராம்ப் போன்ற டிசைன்
டாடா நானோவின் வடிவமைப்பை பார்க்கையில்,குறுகலான பகுதியில் ஏ-பில்லரின் ரேக்குடன் ஏறக்குறைய ஒரு ரேம்ப் போல அதன் வலிமையான முன்பக்கம் இருக்கிறது. தாரை கவிழ்ப்பதற்கு வழிவகுத்த சாத்தியமான காரணிகளில் இந்த வடிவமைப்பும் ஒன்றாக இருக்கிறது.
டாடா நானோ மோதியதில் மஹிந்திரா தார் கவிழ்ந்ததற்கான சாத்தியமான காரணங்கள் இவை. விபத்துக்கள் ஒருபோதும் நகைப்புக்குரிய விஷயமாக இருக்கப்போவதில்லை என்றாலும், இந்தச் சம்பவம் தாரின் பலவீனங்களைப் பற்றிய நினைவூட்டலாகச் செயல்படும் என்பதுடன் அதை ஓட்டுபவர்களை பாதுகாப்பாக ஓட்டவும் ஊக்குவிக்கவும் உதவும்.
மேலும் படிக்கவும்: மஹிந்திரா தார் டீசல்