• English
  • Login / Register

சிட்ரோன் C3 இப்போது முன்பை விட கூடுதல் உபகரணங்களுடன் வருகிறது , ஒரு புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்

published on ஏப்ரல் 14, 2023 08:40 pm by rohit for சிட்ரோய்ன் சி3

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஷைன் வேரியன்ட்  தற்போது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கின்றன, ஆனால் விரைவில் டர்போ-பெட்ரோல் பிரிவிலும் வழங்கப்படும்.

Citroen C3 Shine variant

  • C3 இன் ரிவைஸ்டு கார்களின் வரிசை பின்வருமாறு: லைவ், ஃபீல் மற்றும் ஷைன் (புதியது).

  • இது முந்தைய டாப்-ஸ்பெக் ஃபீல் டிரிமை விட ரூ.50,000க்கு மேல் கூடுதல் பிரீமியமாக இருக்கும்.

  • ஷைன் காரின்  விலை ரூ.7.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

  • இப்போதைக்கு, ஷைன் கார்கள்  1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கின்றன.

  • ஷைன் கார்களின் புதிய அம்சங்களில் ஃபாக் விளக்குகள், 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.

  • சிட்ரோன் விரைவில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஷைன் கார்களை  வழங்கும்.

  • C3 இன் எலக்ட்ரிக் கார் வேரியன்ட் ஆகும், eC3, விரைவில் புதிய ஷைன் வேரியன்ட்டைப் பெறும்.

சிட்ரோன் C3 ஹேட்ச்பேக்கின் புதிய, மேலும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட டாப்-ஸ்பெக் ஷைன் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய டாப்-ஸ்பெக் ஃபீல் டிரிமுடன் ஒப்பிடும்போது, ரூ.50,000க்கு மேல் அதிக பயனுள்ள அம்சங்களைப் பெறுகிறது. இப்போதைக்கு, புதிய கார் C3 இன் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது.

கார்களின் வேரியன்ட்கள் வாரியான புதுப்பிக்கப்பட்ட விலைப் பட்டியல்


கார்களின் வேரியன்ட்கள்


விலை


லைவ்


ரூ. 6.16 லட்சம்


ஃபீல்


ரூ. 7.08 லட்சம்


ஃபீல் வைப் பேக்

Rs 7.23
ரூ. 7.23 லட்சம்


ஃபீல் டூயல் டோன்


ரூ. 7.23 லட்சம்


ஃபீல் டுயல் டோன் வைப் பேக்


ரூ. 7.38 லட்சம்


ஷைன் (புதியது)


ரூ. 7.60 லட்சம்


ஷைன் வைப் பேக் (புதியது)


ரூ. 7.72 லட்சம்


ஷைன் டூயல் டோன் (புதியது)


ரூ. 7.75 லட்சம்


ஷைன் டூயல் டோன் வைப் பேக் (புதியது)


ரூ. 7.87 லட்சம்

நினைவில் கொள்ளுங்கள், இந்த விலைகள் C3 இன் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பொருத்தப்பட்ட கார் வேரியன்ட்களுக்கு மட்டுமே. eC3 விரைவில் ஷைன் டிரிம்மைப் பெறும் எனஎதிர்பார்க்கிறோம்

மேலும் பார்க்கவும்3-வரிசை சிட்ரோன் C3 மீண்டும் உளவு பார்க்கப்பட்டது , C3 ஹேட்ச்பேக்கை விட இது கணிசமாக பெரியதாகத் தெரிகிறது

"ஷைன்" வேரியன்டில்  உங்களுக்கு என்ன கிடைக்கும்?

Citroen C3 rear view camera
Citroen C3 connected car tech

புதிய கார், பகல்/இரவு உட்புற ரியர் வியூ மிரர் (IRVM), 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள்  வெளிப்புற ரியர் வியூ மிரர் (ORVM) மற்றும் ஃபாக் விளக்குகள் போன்ற அம்சங்களைக் கொண்டு வருகிறது. சிட்ரோன்  ஆனது ரியர் ஸ்கிட் பிளேட்டுகள், ரிவர்சிங் கேமரா, ரியர் டிஃபோகர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் 35 அம்சங்களுடன் இணைக்கப்பட்ட கார் டெக் ஆகியவற்றை வழங்குகிறது.

பவர்டிரெய்ன் விவரங்கள்

Citroen C3 1.2-litre naturally aspirated petrol engine

சிட்ரோன் ஷைன் காரை 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட்டுடன் (82PS/115Nm) ஐந்து-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கியுள்ளது. இப்போதைக்கு, C3 ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (110PS/190Nm) ஆறு-வேக MT உடன் இணைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மிட்-ஸ்பெக் ஃபீல் டிரிம் உடன் மட்டுமே உள்ளது. சிட்ரோன் விரைவில் ஷைன் வேரியன்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட்டுடன் வழங்கவுள்ளது.

போட்டி கார்கள் விவரம்

Citroen C3 Shine variant

C3 -யின் கார் வேரியன்ட்கள் மற்றும் அம்சங்களின் புதுப்பித்தல்கள் காரணமாக டாடா டியாகோ மாருதி வேகன் ஆர் மற்றும் செலரியோ போன்றவற்றுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும். அதன் விலை மற்றும் அளவு காரணமாக, இது மாருதி பலேனோ, ஹூண்டாய் i20 மற்றும் டாடா அல்ட்ரோஸ்  போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகளுடனும், ரெனால்ட் கைகர் , நிஸான் மேக்னைட் , மற்றும் வரவிருக்கும் மாருதி ஃப்ரான்க்ஸ்  போன்ற துணை-4m எஸ்யூவி- களுடனும் போட்டியிடுகிறது.
மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 ஆன்  ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Citroen சி3

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience