இந்தியாவில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்த சிட்ரோன், அதை கொண்டாடும் வகையில் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களின் என்ட்ரி விலை குறைக்கப்பட்டுள்ளது.
published on ஏப்ரல் 05, 2024 06:58 pm by shreyash for சிட்ரோய்ன் சி3
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக C3 மற்றும் eC3 ஹேட்ச்பேக்குகளும் குறைந்த அளவிலான ப்ளூ எடிஷனை பெறுகின்றன.
-
ஏப்ரல் 2024 -க்கான சிறப்பு விலை C3 ரூ.5.99 லட்சத்திலும், C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விலை ரூ.8.99 லட்சத்திலும் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
-
C3 மற்றும் eC3 ஹேட்ச்பேக்குகளின் ப்ளூ எடிஷன்கள் ரூஃப் கிராபிக்ஸ் உடன் காஸ்மோ ப்ளூ எக்ஸ்டீரியர் ஷேடை பெறுகின்றன.
-
ஸ்பெஷல் எடிஷன்கள் ஏர் பியூரிஃபையர் மற்றும் கஸ்டமைஸ்டு சீட் கவர்கள், நெக் ரெஸ்ட்கள் மற்றும் சீட் பெல்ட் குஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு கார் வாஷ் மற்றும் ரெஃபரல் போனஸ் போன்றவற்றையும் சிட்ரோன் வழங்குகிறது.
நடுத்தர அளவிலான பிரீமியம் எஸ்யூவியான C5 ஏர்கிராஸ் காரை ஏப்ரல் 2021 -ல் அறிமுகப்படுத்தியதன் மூலமாக சிட்ரோன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் நுழைந்தது. இப்போது 2024 ஏப்ரலில் சிட்ரோன் பிராண்டின் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்துள்ளது. அதைக் கொண்டாடுவதற்காக தொடர்ச்சியான அறிவிப்புகளை சிட்ரோன் வெளியிட்டுள்ளது. இதில் குறைக்கப்பட்ட விலை, புதிய சிறப்பு பதிப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள உரிமையாளர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ஆகியவை அடங்கும். ஏப்ரல் மாதத்தில் சிட்ரோன் கொடுக்கும் சலுகைகள் ஒவ்வொன்றையும் கீழே கொடுத்துள்ளோம்:
சிட்ரோன் C3 & eC3 ப்ளூ பதிப்பு
C3 மற்றும் eC3 இன் ப்ளூ பதிப்புகள் ஃபீல் மற்றும் ஷைன் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஹேட்ச்பேக்குகள் காஸ்மோ ப்ளூ எக்ஸ்ட்டீரியர் ஷேடில் ரூஃப் கிராபிக்ஸ் உடன் வருகிறது. உள்ளே லிமிடெட் எடிஷனுக்கான ஏர் ஃபியூரிபையர், இல்லிமினேட்டட் கப் ஹோல்டர்கள், சில் பிளேட்டுகள் மற்றும் கஸ்டமைஸ்டு சீட் கவர்கள், நெக் ரெஸ்ட்கள் மற்றும் சீட் பெல்ட் குஷன்கள் உள்ளன.
மேலும் பார்க்க: டொயோட்டா டெய்சர் மற்றும் முக்கிய போட்டியாளர்கள்: கிளைம்டு மைலேஜ் திறன் ஒப்பீடு
மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்துக்கான C3 & C3 ஏர்கிராஸின் சிறப்பு விலை
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூ -வியின் என்ட்ரி நிலை வேரியன்ட்களின் விலையை சிட்ரோன் குறைத்துள்ளது. C3 இப்போது ரூ. 5.99 லட்சத்தில் தொடங்குகிறது. இது முன்பை விட ரூ. 17,000 குறைவாக உள்ளது, அதே சமயம் C3 ஏர்கிராஸ் இப்போது ரூ. 8.99 லட்சத்தில் தொடங்குகிறது இது ரூ. 1 லட்சம் குறைந்துள்ளது. இந்த விலை ஏப்ரல் மாதம் முழுவதும் மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகள்
இந்தியாவில் இருக்கும் சிட்ரோன் உரிமையாளர்கள் இந்தக் காலகட்டம் முழுவதும் இலவசமாக கார் வாஷ் வசதியை பெறலாம். கூடுதலாக சிட்ரோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000 ரெஃபரல் போனஸை பெற அனுமதிக்கும் ஒரு பரிந்துரை திட்டத்தை சிட்ரோன் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிட்ரோனின் எதிர்காலத் திட்டங்கள்
பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோன் இந்தியாவில் சிட்ரோன் பாசால்ட் விஷன் கான்செப்ட் என்ற புதிய கூபே-எஸ்யூவியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. மேலும் விற்பனையை சுமார் 400 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது சிட்ரோன் இந்தியாவில் 58 அவுட்லெட்டுகளை கொண்டுள்ளது. மேலும் அதன் விற்பனை மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை 200 டச் பாயின்ட்டுகளுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 140 க்கும் மேற்பட்ட சந்தைகளை உள்ளடக்கியது.
C3, C3 ஏர்கிராஸ், eC3 (எலக்ட்ரிக்) மற்றும் C5 ஏர்கிராஸ் உட்பட சிட்ரோன் தற்போது இந்தியாவில் நான்கு மாடல்களை விற்பனை செய்கிறது.
மேலும் படிக்க: C3 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful