• English
  • Login / Register

Citroen C3 Aircross விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது, காரை இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்

சிட்ரோய்ன் aircross க்காக செப் 15, 2023 10:13 pm அன்று rohit ஆல் திருத்தம் செய்யப்பட்டது

  • 80 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அக்டோபர் 15 முதல் வாடிக்கையாளர்களுக்கு C3 ஏர்கிராஸை சிட்ரோன் நிறுவனம் டெலிவரி செய்ய தொடங்கும்

Citroen C3 Aircross

  • C3 ஏர்கிராஸின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.45 லட்சம் வரை இருக்கிறது

  • ஆன்லைன் மூலமாகவும் சிட்ரோன் டீலர்ஷிப்களிலும் ரூ.25,000 செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.

  • C3 ஏர்கிராஸ் 5 இருக்கைகள் - மற்றும் 7-இருக்கைகள் கொண்டதாக  வழங்கப்படுகிறது.

  • வெளிப்புற சிறப்பம்சங்களில் LED டிஆர்எல் -களுடன் கூடிய நேர்த்தியான ஹெட்லைட்கள் மற்றும் சி வடிவ டெயில்லைட்ஸ் ஆகியவை அடங்கும்.

  • உள்ளே, இது 10.2 இன்ச் டச் ஸ்க்ரீன், மேனுவல் ஏசி மற்றும் டிரைவருக்கான7 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் இந்த காரில் இருக்கின்றன.

  • ஒரே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, 6-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • காரில் உள்ள பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில் டூயல் ஏர்பேக்குகள், TPMS மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸின் வருகையுடன் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிட்ரோன் காருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது, மேலும் இதன் விலை விவரங்களை முழுமையாக வெளியிட்டுள்ளது, இது ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.45 லட்சம் வரை இருக்கிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). பிரெஞ்சு நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவி -யின் வேரியன்ட் வாரியான விலைகள் இங்கே:

வேரியன்ட்ஸ்

5-சீட்டர்

5+2 ஃபிளெக்ஸி புரோ

யூ

ரூ. 9.99 லட்சம்

N.A.

பிளஸ்

ரூ. 11.30 லட்சம் வரை

ரூ. 11.45 லட்சம் வரை

மேக்ஸ்

ரூ. 11.95 லட்சம் வரை

ரூ. 12.10 லட்சம் வரை

ஸ்டாண்டர்டான 5 சீட்டரை விட 7 சீட்டர் கொண்ட மாடலுக்கு ரூ.35,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். டூயல்-டோன் ஆப்ஷன் மற்றும் வைப் பேக் விலை முறையே ரூ.20,000 மற்றும் ரூ.25,000. பேஸ் வேரியன்ட்டுடன் அந்த ஆப்ஷன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இன்றிலிருந்து C3 ஏர்கிராஸை ஆன்லைனிலும், சிட்ரோனின் பான்-இந்திய டீலர்ஷிப்களிலும் ரூ.25,000 டெபாசிட் செய்து முன்பதிவு செய்யலாம். சிட்ரோயன் எஸ்யூ -வியின் டெலிவரிகளை அக்டோபர் 15 முதல் தொடங்கும்.

C3 ஏர்கிராஸ் காரில் என்ன கிடைக்கும் என்பதை விரைவாக இங்கே பார்க்கலாம்:

பழக்கமான வடிவமைப்பு

Citroen C3 Aircross front

C3 ஏர்கிராஸ் -ல் மிகப்பெரிய அடையாளம் C3 ஹேட்ச்பேக்குடன் ஒன்றிப் போகும் வடிவமைப்பு ஆகும். எஸ்யூவி -யின் முன்பக்கம் நேர்த்தியான LED DRL -கள் மற்றும் கிரில்லைச் சுற்றியுள்ள ஹெட்லைட்கள் உட்பட ஒரே மாதிரியான ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. இது ஒரு சங்கியான பம்பரை பெறுகிறது, ஆனால் அதன் பெரும்பகுதி ஏர் டேமால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது அதன் கீழே ஒரு ஸ்கிட் பிளேட், இரண்டு டோர்களிலும் கிளாடிங்குகள் மற்றும் சி-வடிவ டெயில்லைட்கள் மற்றும் ஒரு பெரிய பம்பர் கொண்ட மஸ்குலர் பின்புறம் ஆகியவற்றை இந்த காரில் பார்க்க முடிகிறது.

உள்பக்கமும் அதே போல இருக்கிறது

Citroen C3 Aircross cabin

சி3 ஏர்கிராஸின் கேபினில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், சி3 -யை போலவே இருக்கிறது. சிட்ரோன் காம்பாக்ட் எஸ்யூவி -க்கு டூயல்-டோன் கேபின் தீம் வழங்கியுள்ளது, அதே நேரத்தில் ஏசி வென்ட்கள் மற்றும் டேஷ்போர்டு அமைப்பு அப்படியே உள்ளது.

Citroen C3 Aircross third row

இருப்பினும், பெரிய வித்தியாசம் என்னவென்றால், C3 ஏர்கிராஸ் இரண்டு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது: ஐந்து மற்றும் ஏழு. மூன்றாவது வரிசை இருக்கைகளும் அகற்றக்கூடியவை, ஏனென்றால் உங்களிடம் ஆட்களை விட அதிகமான லக்கேஜ்கள் இருக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: நிஸான் மேக்னைட் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 -ன் அதிகாரப்பூர்வ கார் ஆகும்

அத்தியாவசிய அம்சங்களை பெறுகிறது

Citroen C3 Aircross 10.2-inch touchscreen

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 5 ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள், ரூஃப்-மவுண்டட் ஏசி வென்ட்கள் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றை சிட்ரோன் சி3 ஏர்கிராஸில் கொடுத்துள்ளது.

ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ABS உடன் கூடிய EBD, ரிவர்சிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை காரின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

ஹீட்டின் கீழ் என்ன உள்ளது

Citroen C3 Aircross 1.2-litre turbo-petrol engine

C3 ஏர்கிராஸ் ஆனது இப்போது ஒரே ஒரு பவர்டிரெய்ன் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110PS/190Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது, இது 18.5 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது. C3 ஏர்கிராஸ் ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பிற்காலத்தில் கொடுக்கும்

தொடர்புடையது: Citroen C3 ஏர்கிராஸ் ரிவ்யூ: இது நிச்சயம் வேறுபட்டது

போட்டியாளர்கள்

Citroen C3 Aircross rear

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க: சிட்ரோன் C3 ஆன் ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Citroen aircross

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience