• English
    • Login / Register

    ரூ.11.82 லட்சம் விலையில் Citroen C3 Aircross தோனி எடிஷன் அறிமுகம், காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது

    ansh ஆல் ஜூன் 18, 2024 07:47 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    48 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்த ஸ்பெஷல் எடிஷனின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மேலும் இந்த யூனிட்களில் ஒன்றுடன் எம்.எஸ் தோனி கையெழுத்திட்ட ஒரு ஜோடி விக்கெட் கீப்பிங் க்ளவ்ஸை பெறும்.

    Citroen C3 Aircross Dhoni Edition Launched

    சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி எடிஷன் இறுதியாக ரூ.11.82 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு லிமிடெட் எடிஷனாகும் எனவே நாடு முழுவதும் 100 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும். இந்த ஸ்பெஷல் எடிஷனில் MS தோனியை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் மற்றும் மற்றும் ஆக்ஸசரீஸ்கள் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. தோனி எடிஷனில் என்ன கிடைக்கும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே.

    காஸ்மெட்டிக் அப்டேட்கள் & ஆக்ஸசரீஸ்கள்

    Citroen C3 Aircross Dhoni Edition Accessories

    C3 ஏர்கிராஸ் தோனி பதிப்பு அனைத்து கலர் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது மற்றும் வெளிப்புறத்தில் இது பானட், டெயில்கேட் மற்றும் பின்புற கதவுகள் ஆகியவ இடங்களில் '7' என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ORVM களின் கீழ் முன் கதவுகளில் "தோனி எடிஷன்" ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க: 2024 மே மாத காம்பாக்ட் எஸ்யூவி விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது

    உள்ளே, ஸ்பெஷல் எடிஷனில் பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் டூயல்-டோன் சீட் கவர்கள் கான்ட்ராஸ்ட் புளூ மற்றும் ஆரஞ்சு இன்செர்ட் உடன் டிரைவர் இருக்கையில் "7" என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் முன் பயணிகள் இருக்கையில் தோனியின் கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குஷன்கள், இல்லுமினேட்டட் சில் பிளேட்ஸ் மற்றும் தோனியின் ஜெர்சி எண் மற்றும் கையொப்பத்துடன் கூடிய சீட்பெல்ட் கவர்களையும் பெறுகிறது. ஸ்பெஷல் பதிப்பில் முன்பக்க டேஷ்கேம் புதிதாக் சேர்க்கப்பட்டுள்ளது.

    Citroen C3 Aircross Dhoni Edition Interiors

    இந்த மாற்றங்களைத் தவிர ஒவ்வொரு ஸ்பெஷல் பதிப்பு மாடலுக்கும் தோனி ஹூடி பேக் கிடைக்கும். மேலும் 100 லிமிடெட் எடிஷன்கள் ஒன்றில் MS தோனி கையெழுத்திட்ட ஒரு ஜோடி விக்கெட் கீப்பிங் க்ளோவ் பாக்ஸ் இருக்கும்.

    மேலும் பார்க்க: Citroen C3 Aircross தோனி எடிஷன் படங்களில் விவரிக்கப்பட்டுள்ளது

    டேஷ்கேமை தவிர கூடுதலாக புதிய வசதிகள் எதுவும் இல்லை இல்லை. மேலும் எஸ்யூவி ஆனது 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, மேனுவல் க்ளைமேட் கன்ட்ரோல், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர்வியூ கேமரா போன்ற வசதிகளுடன் வருகிறது. 

    பவர்டிரெய்ன்

    Citroen C3 Aircross Dhoni Edition Exterior

    C3 ஏர்கிராஸ் ஆனது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 110 PS மற்றும் 205 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

    விலை

    Citroen C3 Aircross Dhoni Edition Front

    இப்போதைக்கு சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி பதிப்பின் ஆரம்ப விலை விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 11.82 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. ஸ்டாண்டர்டான சிட்ரோன் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

    மேலும் படிக்க: C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Citroen ஏர்கிராஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience