ரூ.7.99 லட்சம் விலையில் Citroen Basalt கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on ஆகஸ்ட் 09, 2024 12:59 pm by samarth for சிட்ரோய்ன் பசால்ட்
- 93 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்று முதல் இந்த காரை ரூ.11,001 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
-
நிறுவனம் அறிவித்துள்ள அறிமுக விலையானது இப்போது செய்யப்படும் முன்பதிவுகள் மற்றும் டெலிவரிகளுக்கு மட்டுமே அதுவும் அக்டோபர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
-
வெளிப்புறத்தில் LED லைட்ஸ், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஸ்லோப்பிங் ரூஃப் ஆகியவற்றை பார்க்கலாம்.
-
10.2-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக்குகள்.
-
பாசால்ட் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது.
இறுதியாக சிட்ரோன் பசால்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது சிட்ரோனின் முதல் மாஸ்-மார்க்கெட் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும். இதன் விலை ரூ. 7.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலையை சிட்ரோன் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் ரூ.13.57 லட்சம் என நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இப்போது எஸ்யூவி-கூபேக்கான முன்பதிவுகளை ரூ.11,001 -க்கு ஏற்கத் தொடங்கியுள்ளது. அறிமுக விலை ஆஃபர்கள் வரும் அக்டோபர் 31 வரை செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் டெலிவரிகளுக்கும் பொருந்தும். இந்த காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
வெளிப்புறம்
பாசால்ட்டின் வெளிப்புறம் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் -க்கு நெருக்கமாக இருக்கிறது. LED DRL -களுக்கு V-வடிவ பேட்டர்ன் மற்றும் ஸ்பிளிட் கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது விரைவில் C3 ஏர்கிராஸிலும் வழங்கப்படும். முன்பக்க பம்பரில் சில்வர் ஃபினிஷ் ரெட் ஹைலைட்ஸ் இருப்பதால் அது காருக்கு ஸ்போர்ட்டி டச்சை கொடுக்கிறது.
பக்கவாட்டில் பார்த்தால் இதன் கூபே ரூஃப்லைனை பார்க்கலாம். மேலும் 16-இன்ச் டூயல்-டோன் ஃபினிஷ்ட் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் பிளாக்-அவுட் பம்பர்களுடன் ரேப்பரவுண்ட் ஹாலஜன் டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாசால்ட்டின் அளவுகள் பின்வருமாறு:
அளவுகள் |
|
நீளம் |
4352 மி.மீ |
அகலம் (ORVMகள் இல்லாமல்) |
1765 மி.மீ |
உயரம் (அன்லேடன்) |
1593 மி.மீ |
வீல்பேஸ் |
2651 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
470 லிட்டர் |
சிட்ரோன் பாசால்ட் ஆனது போலார் ஒயிட், ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ புளூ மற்றும் கார்னெட் ரெட் என 5 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது: இது இரண்டு டூயல்-டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: போலார் வொயிட் வித் அ பிளாட்டினம் கிரே ரூஃப் மற்றும் கார்னெட் ரெட் வித் அ பெர்லா நேரா பிளாக் ரூஃப்.
மேலும் பார்க்க: இந்த விரிவான கேலரி மூலமாக சிட்ரோன் பாசால்ட்டை பாருங்கள்
கேபின், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
பாசால்ட்டின் கேபின் அதன் எஸ்யூவி உடன்பிறப்பான C3 ஏர்கிராஸ்-ல் இருந்து டேஷ்போர்டு, டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே) மற்றும் ஏசி வென்ட்களின் வடிவமைப்பு உள்ளிட்ட எலமென்ட்களையும் பெற்றுள்ளது. மற்ற வசதிகளில் ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பின் இருக்கைகளுக்கு (87 மிமீ வரை) தொடைக்கான அட்ஜஸ்ட்டபிள் சப்போர்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன்
பசால்ட் இந்த பவர்டிரெய்ன் விவரக்குறிப்புகளுடன் வழங்கப்படுகிறது:
விவரங்கள் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
82 Nm |
110 Nm |
டார்க் |
115 Nm |
205 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
கிளைம்டு மைலேஜ் |
18 கி.மீ |
19.5 கிமீ/லி, 18.7 கிமீ/லி |
போட்டியாளர்கள்
சிட்ரோன் பசால்ட் நேரடியாக டாடா கர்வ் உடன் போட்டியிடுகிறது. மேலும் மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful