12 படங்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ்எஸ்யூவி யின் விவரங்களைப் பாருங்கள்
published on மே 02, 2023 03:06 pm by ansh for சிட்ரோய்ன் aircross
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
காம்பாக்ட் எஸ்யூவி -யின் விவரங்கள் இறுதியாக வெளியிடப்பட்டுள்ளன மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் கார் வெளிவர உள்ளது.
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் -ன் சமீபத்திய வெளியீட்டான 5 மற்றும் 7- இருக்கைகள் இரண்டும் கொண்ட லே அவுட்டுடன் கூடிய காம்பாக்ட் எஸ்யூவி, சிட்ரோன் C3 ஏர்கிராஸ் என்று அழைக்கப்படுகிறது. கார் தயாரிப்பு நிறுவனம் எஸ்யூவி -ஐ அறிமுகம் செய்துள்ளது, இப்போது அதன் விலைகள் மற்றும் புக்கிங் விவரங்களுக்காக நாம் காத்திருக்கிறோம், C3 ஏர்கிராஸ் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை இப்போது காண்போம் வாருங்கள்.
முன்புறம்
C3 ஏர்கிராஸின் முன்புறத் தோற்றம் C3 மற்றும் C5 ஏர்கிராஸ்இரண்டின் முகப்புத்தோற்றங்களின் கலவை ஆகும். அதன் முன்புறம் பெரியதாகவும் பரந்ததாகவும் C5 ஏர்கிராஸைப் போன்று தோன்றுகிறது, ஆனால் அதன் ஹெட்லேம்புகள் மற்றும் DRL களின் வடிவமைப்பு C3 ஹேட்ச்பேக்கை ஒத்துள்ளது. ஃபாக் லேம்புகளின் வடிவமும் C3 ஹேட்சை ஒத்துள்ளது.
மேலும் படிக்கவும்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிட்ரோன் C3 ஏர்கிராஸின் 5 முக்கிய புள்ளிகள்
இங்கே இருந்து, ஹேட்ச்பேக்கைவிட எஸ்யூவி கூடுதல் அகலம் கொண்டிருப்பதை அதன் பரந்த தோற்றத்தையும் கண்டிருப்பீர்கள்.
பக்கவாட்டுப் பகுதிகள்
C3 அடிப்படையிலான காம்பாக்ட் எஸ்யூவி மூன்றாவது வரிசையை வைத்திருப்பதற்காக கூடுதல் நீளமாக இருக்கும். கேபினை அகலமாக்க 100 மிமீ அளவுக்கு, வீல் பேஸும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அளவுகளின்படி கார் தயாரிப்பு நிறுவனத்தின் மற்ற இரு மாடல்களுக்கு இடையில் C3 ஏர்கிராஸ் இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டில், ஹேட்ச்பேக்கை ஒத்துள்ள கதவு கைப்பிடிகளுடன் நீண்ட தட்டையான உடலமைப்பு அது பெறுகிறது மற்றும் மற்ற இரு மாடல்களிலும் இருப்பதைப் போல டோர் கிளாடிங்கை அது பெறுகிறது.
மறுபுறத்தில் அதன் அலாய் சக்கர வடிவமைப்பு,மற்ற இரு மாடல்களிலும் இருப்பதைப் போல இல்லை. C3 ஏர்கிராஸ் 4-ஸ்போக், கறுப்பு மற்றும் சில்வர் ஃபினிஷுடன் கூடிய 17-அங்குல அலாய் வீல்களுடன் வருகிறது
பின்புறம்
அதன் பின்புறத் தோற்றம் அகலமானதாக உள்ளது. எஸ்யூவி இரு ரெஃப்ளக்டர்களை வைத்திருக்கும் கறுப்பு மற்றும் சாம்பல் வண்ண பம்பர்களுடன் கூடிய பரந்த பின்புற விளம்பைப் பெறுகிறது C3 கிரே கலர் கொண்ட இரு டெயில் லேம்புகளுக்கு இடையில் இணைக்கும் வடிவத்தையும் இது பெற்றுள்ளது, அது இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பாளரின் இரு மாடல்களின் வடிவமைப்பு மொழியில் ஒரு அங்கமாக இடம் பெறவில்லை.
ஆனால் C3 ஹேட்ச்பேக்கில் இருப்பதைப் போன்ற டெயில் லேம்பு வடிவமைப்பை இந்த காரும் பெற்றுள்ளது, வெளிப்புறமாக நீட்டியிருக்கும் இரு லைட் கூறுகளையும் இது பெற்றிருக்கும். இந்த லேம்புகளின் ஒரு கவர்ச்சிகரமான அம்சத்தை நீங்கள் கவனிக்கலாம் அது இன்டிக்கேட்டர்களுக்கு மேலே உள்ள ஃப்ராஸ்டட் அம்புகள்.
கேபின் & அம்சங்கள்
வெளிப்புறத்தைப் பார்த்து விட்டோம் இப்போது C3 ஏர்கிராஸின் உட்புறத்தை காணலாம் வாருங்கள். அதன் கேபின், C3 ஹேட்ச்பேக்கை சிறிதளவு ஒத்துள்ளது, சிறிதளவு ட்வீக் செய்யப்பட்டுள்ளது மற்றும் கறுப்பு மற்றும் பழுப்பு கலந்த கேபின் தீமுடன் வழங்கப்படுகிறது.
அதே மாதிரியான 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதே மாதிரியான AC வென்டுகள் மற்றும் டேஷ்போர்டுகளின் வடிவமைப்புகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் C3 ஹேட்ச்க்கும் அதற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் 7-இன்ச் ஃபுல்லி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகும்.
C3 ஏர்கிராஸ் இன்னமும் மேனுவல் AC தேர்வை மட்டுமே பெறுகிறது ஆனால் தனிப்பட்ட ஃபேன் கட்டுப்பாடுடன் கூடிய கூரையில் பொருத்தப்பட்ட பின்புற AC வென்டுகளுடன் வருகிறது. பல ஏர்பேகுகள், EBD உடன் கூடிய ABS, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS), பின்புற வாஷர் மற்றும் வைப்பர் மற்றும் பின்புற கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
பின்புறத்தில், அது 3-வரிசை சீட்டிங் லேஅவுட்டைப் பெறுகிறது அதில் ரெனால்ட் டிரைபரைப் போல கடைசி வரிசை இருக்கைகளை அகற்ற முடியும்,. ஆனால் 5- இருக்கைள் லேஅவுட் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவி கூரையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பின்புற AC வென்டுகளை இழந்துள்ளது
பவர்டிரெயின்
6- வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் C3 ஏர்கிராஸ் வருகிறது. இந்தப் பிரிவு C3 ஹேட்ச்சுடனும் வழங்கப்படுகிறது மற்றும் 110PS மற்றும் 190Nm திறனை வழங்குகிறது. இப்போதைக்கு, 3-வரிசை காம்பாக்ட் எஸ்யூவி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருவதில்லை, ஆனால் பிற்காலத்தில் சேர்க்கப்படலாம்.
விலை & போட்டியாளர்கள்
C3 ஏர்கிராஸ் ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் சந்தை அறிமுகத்தை ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பாக்ட் எஸ்யூவி ஹீண்டாய் கிரெட்டா , கியா செல்டோஸ் ,ஃபோக்ஸ்வேகன் டைகுன் , ஸ்கோடா குஷாக் , மாருதி கிரான்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: சிட்ரோன் C3 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful