விரிவான படங்களில் 2024 Maruti Swift Vxi வேரியன்ட்டின் விவரங்களை பாருங்கள்
published on மே 13, 2024 06:40 pm by ansh for மாருதி ஸ்விப்ட்
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்விஃப்ட் Vxi காரின் வேரியன்ட்களின் விலை ரூ. 7.29 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றது. மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றது.
2024 மாருதி ஸ்விஃப்ட் அப்டேட்டட் டிஸைன், புதிய அமைப்பிலான கேபின், புதிய இன்ஜின் மற்றும் புதிய வசதிகளின் தொகுப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஹேட்ச்பேக் 5 வேரியன்ட்களில் (Lxi, Vxi, Vxi (O), Zxi மற்றும் Zxi+) வருகிறது. மேலும் இதன் ஒன்-அபோவ்-பேஸ் Vxi வேரியன்ட்டை நீங்கள் வாங்க திட்டமிட்டால் அதன் விவரங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வெளிப்புறம்
முன்பக்கத்தில் இருந்து டாப்-ஸ்பெக் ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடும்போது குறைவான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பார்க்க முடிகின்றது. இங்கே LED லைட்களுக்கு பதிலாக ஹாலோஜன் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் DRL ஸ்ட்ரிப் போல் இருப்பது உண்மையில் ஒரு குரோம் மட்டுமே. மேலும் இந்த வேரியன்டில் ஃபாக் லைட்ஸ் இல்லை.
பக்கத்தில் இதற்கும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. அது சக்கரங்கள் தான். Vxi வேரியன்ட் 14-இன்ச் ஸ்டீல் வீல்களை பெறுகிறது. வீல் கவர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் LED டெயில் லைட்ஸ் உட்பட டிஸைன் எலமென்ட்ஸ் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஆனால் இந்த வேரியன்ட்டில் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் கொடுக்கப்படவில்லை.
இன்ட்டீரியர்
ஸ்விஃப்ட் பிளாக் கலர், ஆல் பிளாக் கேபினை பெறுகிறது. மேலும் இந்த வேரியன்ட் டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் எந்த குரோம் எலமென்ட்களையும் பெறாது. ஸ்டீயரிங் வீலில் கிளாஸி பிளாக் எலமென்ட்களும் இதில் கொடுக்கப்படவில்லை.
இருக்கைகள் அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை போலவே உள்ளன. மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகின்றன. டாப்-ஸ்பெக் வேரியன்டில் கூட பின்புற இருக்கைகளுக்கு சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கவில்லை.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வசதிகளைப் பொறுத்தவரை, Vxi வேரியன்ட் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மேனுவல் க்ளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVMகள் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவற்றைப் பெறுகிறது.
மேலும் படிக்க: 2024 மாருதி ஸ்விஃப்ட் vs ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: விவரக்குறிப்புகள் ஒப்பிடப்பட்டன
அதன் பாதுகாப்பு கருவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் உள்ளன.
மேலும் பார்க்க: புதிய மாருதி ஸ்விஃப்ட் 2024 ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக் 7 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
9-இன்ச் டச் ஸ்கிரீன்இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6-ஸ்பீக்கர் ARKAMYS சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ரியர்வியூ கேமரா போன்ற வசதிகளை உயர்-ஸ்பெக் வேரியன்ட்கள் வழங்குகின்றன.
பவர்டிரெய்ன்
புதிய ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 82 PS மற்றும் 112 Nm வரை பவர் அவுட்புட்டை வழங்கும். இந்த யூனிட் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vxi வேரியன்ட் இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் பெறுகிறது.
விலை & போட்டியாளர்கள்
2024 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மற்றும் Vxi வேரியன்ட்களின் விலை ரூ.7.29 லட்சம் முதல் 7.80 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் நேரடியாக போட்டியிடுகின்றது மற்றும் ரெனால்ட் ட்ரைபர் -க்கு மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் AMT
0 out of 0 found this helpful