சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Altroz ​​Racer Mid-spec R2 வேரியன்ட் பற்றிய விவரங்களை 7 படங்களில் தெரிந்து கொள்ளலாம்

published on ஜூன் 13, 2024 04:49 pm by shreyash for tata altroz racer

ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட்டை போலவே உள்ளது. மேலும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்டட் 120 PS 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஆல்ட்ரோஸின் மிகவும் பவர்ஃபுல் பதிப்பாகும். டாடா ஆல்ட்ரோஸின் ஸ்போர்ட்டியர் பதிப்பை R1, R2 மற்றும் R3 ஆகிய மூன்று வேரியன்ட்களில் வழங்குகிறது. இந்த 7 படங்களில் டாடா ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் என்ன வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.

முன்பக்கம்

டாடா ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் அதன் டாப்-ஸ்பெக் R3 போலவே இருக்கிறது. இது LED DRL -கள் மற்றும் முன்பக்க ஃபாக் லைட்ஸ்களுடன் அதே ஆட்டோமெட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்களை கொண்டுள்ளது. இந்த வேரியன்ட் 360 டிகிரி கேமராவை பெறுவதால் டாடா லோகோவின் கீழ் கிரில்லில் முன் கேமரா உள்ளது.

பக்கம்

ஆல்ட்ராஸ் ரேசரின் R2 மற்றும் பிற வேரியன்ட்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மற்ற வேரியன்ட்களை போலவே, ஆல்ட்ரோஸ் ரேசர் R2 ஆனது அதே 16-இன்ச் பிளாக் அவுட் அலாய் வீல்கள், பிளாக் கலர்டு பில்லர்கள் மற்றும் விண்டோ லைன் மற்றும் முன் ஃபெண்டர்களில் 'ரேசர்' பேட்ஜை பெறுகிறது. ORVM -களில் 360 டிகிரி செட்டப்பின் சைடு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்ற ஆல்ட்ரோஸ் ரேசர் வேரியன்ட்களில் காணப்படுவது போல் அதன் R2 டிரிம் பிளாக் ஹூட் மற்றும் டூயல் வொயிட் லைன்கள் பானெட்டில் இருந்து ரூஃப் வரை கொடுக்கப்பட்டுள்ளன. என்ட்ரி லெவல் R1 டிரிம் போலல்லாமல் ஹேட்ச்பேக்கின் இந்த வேரியன்ட் சிங்கிள்-பேன் சன்ரூஃபை பெறுகிறது.

மேலும் பார்க்க: Tata Altroz ​​Racer என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் சிறப்பை இந்தப் புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

பின்புறம்

ஆல்ட்ரோஸ் ​-ன் 'ரேசர்' ரேஞ்சில் ஸ்டாண்டர்டானதாக இது நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்லர் பின்புற டிஃபோகர் மற்றும் வாஷருடன் பின்புற வைப்பர் ஆகியவற்றைப் பெறுகிறது. டெயில்கேட்டில் ஒரு 'i-turbo+' மோனிகர் உள்ளது, இது முன்பு கிடைத்த ஆல்ட்ரோஸ் ​​i-turbo -வை விட அதிக சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேட்ச்பேக்கின் வழக்கமான பதிப்பைக் காட்டிலும் ஸ்போர்டியர் நோட்டை கொண்ட டூயல்-டிப் எக்ஸாஸ்டையும் இது பெறுகிறது.

உட்புறம்

ஆல்ட்ரோஸ் ரேசர் R2 -ன் டாஷ்போர்டு அதன் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட்டை போலவே இருக்கிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் (நான்கு ட்வீட்டர்கள் உட்பட), 7-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டாஷ்போர்டில் ஆரஞ்ச் தீம் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை இதன் இன்ஸ்ட்ரூமென்ட் லிஸ்டில் உள்ளன.

ஆல்ட்ரோஸ் ரேசர் R2 ஆனது பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இருப்பினும் இது இன்னும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஏர் ஃபியூரிபையர் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகள் கொடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் ஆல்ட்ரோஸ் ரேசரின் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட் உடன் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், ரெயின் சென்சிங் வைப்பர் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஹேட்ச்பேக்கின் இந்த மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் முழுவதும் பிளாக் நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன், லெதரெட்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றைப் பெறுகிறது. ஸ்போர்டியர் கவர்ச்சிக்காக இருக்கைகள் கான்ட்ராஸ்ட் ஆரஞ்சு ஸ்டிச்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: Tata Altroz ​​Racer R1 vs Hyundai i20 N Line N6: விவரக்குறிப்புகள் ஒப்பீடு

பவர்டிரெய்ன் விவரங்கள்

ஆல்ட்ரோஸ் ​​-ன் இந்த ஸ்போர்டியர் பதிப்பு டாடா நெக்ஸான் -லிருந்து பெறப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் 120 PS மற்றும் 170 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் ஆல்ட்ரோஸ் ரேசரை டாடா வழங்கலாம்.

விலை போட்டியாளர்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் R2 வேரியன்ட்டின் விலை ரூ. 10.49 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆக உள்ளது. இது ஹூண்டாய் i20 N லைன் உடன் நேரடியாக போட்டியிடும்.

மேலும் படிக்க: டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆன்ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 17 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் Racer

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.4.99 - 7.09 லட்சம்*
Rs.3.99 - 5.96 லட்சம்*
Rs.4.26 - 6.12 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை