Skoda -வின் சப்-4m எஸ்யூவி Kushaq உடன் பகிர்ந்து கொள்ளும் 5 விஷயங்கள்
published on பிப்ரவரி 29, 2024 05:55 pm by rohit for ஸ்கோடா kylaq
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ஸ்கோடா எஸ்யூவி மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி 2025 ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஸ்கோடாவின் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குஷாக் -கிற்கு கீழே ஸ்லாட் செய்யப்படும். இது ஸ்கோடாவின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவியாக இருக்கும்.
புதிய சப்-4m எஸ்யூவி -க்கும் ஸ்கோடா குஷாக் -கிற்கும் இடையே பொதுவான ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன:
பிரீமியம் டிஸைன் மற்றும் ஸ்டைலிங்
ஸ்கோடா தனது வரவிருக்கும் சப்-4m எஸ்யூவி -யின் முதல் டிசைன் ஸ்கெட்ச் டீசரின் அடிப்படையில் குஷாக் போன்ற பிரீமியம் ஸ்டைலிங், வடிவமைப்பை முன்பக்கத்தில் பார்க்கலாம். எனவே இது ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் நவீன ஸ்கோடா கார்களில் காணப்படும் கிரில்லுக்கான பட்டர்ஃபிளை வடிவத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஷேர் செய்யப்பட்ட ஃபிளாட்பார்ம்
ஸ்கோடா இப்போது உருவாக்கி வரும் டாடா நெக்ஸான்- போட்டி எஸ்யூவி -க்கு குஷாக்கின் MQB-A0-IN தளத்தை பயன்படுத்துகிறது. இருப்பினும் சப்-4 மீ பிரிவு விதிகளுக்கு ஏற்றபடி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டுக்கு ஸ்கோடா ஸ்லாவியா செடான் மற்றும் எஸ்யூவி மற்றும் செடானின் ஃபோக்ஸ்வேகன் கார்களான டைகுன் மற்றும் விர்ட்டஸ் ஆகிய கார்களில் அதே தளத்தை பயன்படுத்துகிறது.
ஒரே போன்ற வசதிகள்
குஷாக்கின் 10-இன்ச் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
குஷாக் 10-இன்ச் டச் ஸ்கிரீன் க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறிய எஸ்யூவி ஆகும். புதிய ஸ்கோடா சப்-4m எஸ்யூவி -யிலும் மேலே குறிப்பிட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் (அனைத்தும் இல்லை என்றாலும்) கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது அதன் ஃபுல்லி-லோடட் போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கும்.
சிறப்பான பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பின் அடிப்படையில் புதிய ஸ்கோடா எஸ்யூவி குஷாக்குடன் சில பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம். ஸ்கோடா அதன் வரவிருக்கும் சப்-4m எஸ்யூவியை 360 டிகிரி கேமராவுடன் கொடுக்கும் என்று நம்புகிறோம். இந்த வசதி ஏற்கனவே அதன் முக்கிய போட்டியாளர்களான மாருதி பிரெஸ்ஸா மற்றும் கியா சோனெட் ஆகியவற்றில் உள்ளது. இருப்பினும் ஸ்கோடா தனது இந்திய வரிசைக்கு ADAS தொழில்நுட்பத்தை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
குஷாக்கின் பாதுகாப்பு வசதிகளின் மற்றொரு முக்கியமான விஷயம் அதன் உலகளாவிய NCAP மதிப்பெண் ஐந்து நட்சத்திரங்களை பெற்றுள்ளதாகும். புதிய எஸ்யூவியும் அதே இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இது அதே அளவிலான பாதுகாப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிறிய பவர்டிரெய்ன்
குஷாக் இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின்களின் (1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல்) தேர்வுடன் வந்தாலும் ஸ்கோடா அதன் புதிய எஸ்யூவியில் சிறிய பவர்டிரெய்னை வழங்க வாய்ப்புள்ளது. சிறிய டிஸ்பிளேஸ்மென்ட் இன்ஜின் பிரிவின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி போட்டிக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்ய அனுமதிக்கும். புதிய மாடல் அதே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: இந்தியாவில் குரூஸ் கன்ட்ரோலுடன் கிடைக்கும் விலை குறைவான 10 கார்கள் இவை
வெளியீடு, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.8.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் சப்-4மீ கிராஸ்ஓவர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: குஷாக் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful